ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்கும்போது, ‘எந்த கம்பெனி பைக்காக இருக்கும்?’ என யோசிக்க வைக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தது அந்த டெரர் பைக். அருகே சென்று பார்த்தபோதுதான் அது ரீ-மாடிஃபைடு பைக் என்பதே புரிந்தது.

ரீ-மாடிஃபிகேஷன் என்றாலே ரெடிமேட் பாடி பார்ட்ஸ் கொண்டுதான் உருவாக்குவார்கள். ஆனால்,

இந்த பைக் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் சிறப்பு.
இந்த பைக்கை உருவாக்கிய மெக்கானிக் பாலுவைச் சந்தித்தோம். 28 ஆண்டுகளாக பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு, ரீ-மாடிஃபை செய்வது, அதாவது குட்டி பைக்குகள் செய்வது ஹாபியாம்.

‘‘குட்டி பைக்கிலேயே வித் கியர், வித்-அவுட் கியர் என நாற்பதுக்கும் மேற்பட்ட வித்தியாசமான பைக்குகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். விருப்பப்பட்டுச் செய்யும் எல்லா பைக்குகளும் உடனே கையை விட்டுப் போய்விடும். அதனால், யாரும் விலைக்குக் கேட்க முடியாதபடி ஸ்பெஷலாக ஒரு பைக் செய்யலாம் என்று முடிவு செய்தேன். எனக்கு டிஸைன் சாஃப்ட்வேர் பற்றித் தெரியாது. அதனால், முதலில் மாருதி 800 இன்ஜினைப் பொருத்தி, ஒரு பைக் உருவாக்கலாம் என்றுதான் துவங்கினேன். கார் டயர்கள் இரண்டையும் நேராக வைத்துக்கொண்டு ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன். முதலில் பாடி உட்பட எல்லாவற்றையும் நாமே வடிவமைக்கலாம் என நினைத்தேன். பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, அப்படிச் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், பாடியைத் தவிர மற்ற அனைத்துமே நான் தயாரித்ததுதான்!” என்று சிரித்தார் பாலு.

வட்ட வடிவ ஹெட்லைட், காரின் டயர்கள், டிஸ்க் பிரேக், ஹோண்டா ஷைன் இன்ஜின், யமஹா FZ பைக்கின் பாடி என முழுக்க முழுக்க வெவ்வேறு வாகனங்களின் உதிரி பாகங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பைக். இன்ஜின், வழக்கமான ஃப்ரேமில் இல்லாமல், ஸ்விங் ஆர்மில் இணைக்கப்பட்டிருந்தது.

‘‘இந்த பைக்கை சாலையில் ஓட்டுவதற்்கு பர்மிஷன் கிடையாது. ஒரு நாள் ரொம்ப அவசரம் என்பதால், இந்த பைக்கை எடுத்துக் கொண்டு போனேன். போலீஸ் பிடித்துவிட்டது. ‘திருட்டு பைக்கா இது?’ என்று வறுத்தெடுத்தார்கள். ‘இல்லை சார், நானே தயாரித்த பைக்’ என்று சொன்ன பிறகு, ஆச்சரியத்தோடு பைக்கை ஓட்டிப் பார்த்துப் பாராட்டினார்கள். ‘இந்த பைக்கை சாலையில் ஓட்ட வேண்டாம்’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள். ஒரு முறை கொஞ்சம் பணத் தட்டுப்பாடு வந்தபோது, இதை விற்பனை செய்துவிடலாம் என முடிவு செய்து கொடுத்துவிட்டேன். ஆனால், இந்த பைக் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. மறுபடியும் கொடுத்தவரிடம் வாங்கி வந்துவிட்டேன். ஏனென்றால், இந்த பைக்தான் என்னுடைய அடையாளம்!’’ என்கிறார் பாலு.
பாலுவின் அசெம்பிள் பைக்கை, ஈரோடு பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எக்ஸ்போ, சிம்போஸியம் என்றால், மாணவர்கள் வந்து தூக்கிக்கொண்டு போகிறார்களாம். அடுத்த இலக்கு, 1,000 சிசியில் ஒரு பைக்காம்.

வாழ்த்துகள் பாலு!