சமீபத்தில், திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம், யமஹா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பல்கலைக் கழகத்தின் கல்வித்துறைத் தலைவர் எல்.ராசா, ‘‘கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கிறோம். அதில் ஒரு கட்டமாக, இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி வகுப்பும் நடக்கிறது. ‘இது, தரமானதாக, முழுமையான தொழில்நுட்ப அறிவோடு கூடியதாக இருக்க வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியது. அதனடிப்படையில்தான் யமஹா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தற்போது நடந்துவரும் ஓர் ஆண்டு டிப்ளமோ பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, வயது தடையில்லை; 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ஆண், பெண் இருபாலரும் படிக்கலாம்.
இந்த ஆண்டு தொடங்கிய டூ வீலர் மெக்கானிசம் படிப்புக்கான முதல் குழுவில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 3,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். அதேசமயம், மாதந்தோறும் மாணவர்களுக்கு 1,000 ரூபாயை உதவித் தொகையாக அளிக்கிறோம்.

யமஹா மூலம் அமைக்கவிருக்கும் தொழிற்பயிற்சிப் பள்ளியில் 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தவறிய மாணவர்கள் படிக்கலாம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நல்ல தரமான கருவிகளையும், இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றை யமஹா நிறுவனம் அளிக்கும்!’’ என்றார் ராசா.

‘‘ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மெக்கானிசம் கற்றுக்கொள்ளலாம். அப்படி மெக்கானிசம் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பணியில் முன்னுரிமை அளிப்போம்’’ என்றார் யமஹா நிறுவனத்தின் உதவித் தலைவர் ராஜேந்திரசிங்.