நான் காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். திண்டுக்கல்லுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அதிக தூரம் இல்லை. எனவே, பைக்கே போதுமானதாக இருந்தது. என் மகள் தற்போது வெளியூரில் படிக்கிறார். அடிக்கடி குடும்பத்தோடு சென்று பார்த்துவிட்டு வரவேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதனால், கார் வாங்கத் திட்டமிட்டோம். கார் வாங்க முடிவு செய்தபோது, கண்ணில் அடிக்கடி தென்படும் காரான மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாம் என்று நினைத்்தேன். என் நண்பர்களும் ஸ்விஃப்ட் வாங்கத்தான் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், என் வீட்டு வழியாக மாருதி செலெரியோ கார் ஒன்று அடிக்கடி போய்வருவதைப் பார்த்தேன். அடக்கமாக, அளவாக, அழகாக இருந்தது. பின்பு நண்பர்களிடம் விசாரித்தபோது, செலெரியோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் தகவலைச் சொன்னார்கள். எனக்கு இதற்கு முன்பு அதிகம் கார் ஓட்டிப் பழக்கம் இல்லை. எனவே, ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்குச் சுலபமாக இருக்கும் என்பதால், செலெரியோ வாங்கலாம் என முடிவு செய்தேன்.

ஷோரூம் அனுபவம்...

திண்டுக்கல் பி.எல்.ஏ மோட்டார்ஸ் சென்று செலெரியோ காரைப் பார்த்தேன். டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கச் சொன்னார்கள். இதற்கு முன்பு ஒரு சில கார்களை அவ்வப்போது ஓட்டி இருந்தாலும், கொஞ்சம் பதற்றத்தோடுதான் டெஸ்ட் டிரைவ் செய்தேன். ஏனென்றால், நான் முதன்முறையாக கார் வாங்கப் போகிறேன். ஆனால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பதால், கார் ஓட்டுவதற்கு மிகச் சுலபமாகவும் திருப்தியாகவும் இருந்தது. அன்றே புக் செய்துவிட்டேன். காரைப் பற்றி எனக்கு இருந்த சந்தேகங்கள், கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொன்னார்கள். மேலும், கார் ஓட்டுவது, பராமரிப்பது தொடர்பாக நிறைய ஆலோசனைகளும் சொன்னார்கள்.

எப்படி இருக்கிறது செலெரியோ?

டிராஃபிக்கில் கார் ஓட்டும்போது, சில சமயம் பதற்றத்தில் இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். அப்போது டென்ஷன் ஆவோம். ஆனால், செலெரியோவில் எந்தச் சூழ்நிலையிலும் அப்படி ஒரு நிலை வரவில்லை. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பதால், தைரியமாக மற்றவர்களை நம்பி காரைக் கொடுக்கலாம். வயதானவர்கள், பெண்கள் என யார் வேண்டுமானலும் நம்பிக்கையுடன் இந்த காரை ஓட்ட முடியும். இதுவரை பைக் மட்டுமே ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, புதிதாக கார் வாங்கலாம் என நினைப்பவர் களுக்கு நல்ல சாய்ஸ் செலெரியோ.

பிடித்தது...

காரின் உள்ளே நல்ல இடவசதி இருக்கிறது. டேஷ்போர்டு பயன்படுத்த சுலபமாக இருக்கிறது. குடும்பத்தோடு நீண்ட தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு தெரியவில்லை. கார் வாங்கிய சில நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து கோவை, திருச்செங்கோடு, கரூர் என ஒரே நாளில் சுமார் 600 கி.மீ தூரம் சென்று வந்தேன். எந்தப் பிரச்னையும் இல்லாமல் மிக ஸ்மூத்தாக அந்தப் பயணம் அமைந்தது. டிரைவர் சீட்டில் இருந்து சாலையை முழுமையாகப் பார்க்க முடிகிறது. இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குகிறது. லிட்டருக்கு 23 கி.மீ மைலேஜ் அளிக்கும் என ஷோரூமில் சொன்னார்கள். அதை நான் இன்னும் டெஸ்ட் செய்து பார்க்கவில்லை.

நகருக்குள் ஓட்டுவதற்கும் மிக வசதியாக இருக்கிறது செலெரியோ. ஏ.சி ஆன் செய்த சில நிமிடங்களில் கார் முழுவதும் கூல் ஆகி விடுகிறது. ஆடியோ சிஸ்டம் பரவாயில்லை ரகம்தான்.

பிடிக்காதது

காரின் பின்பக்க இருக்கை ரொம்ப மோசம். சோளக்காட்டு பொம்மைக்குள் வைக்கோல் திணித்துக் கொடுத்த மாதிரி இருக்கிறது. குவாலிட்டியாக, கம்ஃபர்ட்டாக இல்லை. காரில் இருப்பதிலேயே எனக்குப் பிடிக்காதது பின் பக்க இருக்கைதான். அவசியம் தேவைப்படும் ஃப்ளோர்மேட் போன்ற ஆக்சஸரீஸ்களை ஷோரூமிலேயே பொருத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் ரிவர்ஸ், நியூட்ரல் செய்யும்போது ‘சடக் சடக்’ என ஒரு சத்தம் வருகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஹெட்லைட்ஸ் வெளிச்சம் மிகக் குறைவு. இரவு நேரப் பயணத்்துக்கு இந்த ஒளி போதாது. நாமேதான் சக்தி அதிகம் கொண்ட ஹெட்லைட் வாங்கிப் பொருத்த வேண்டும்.

என் தீர்ப்பு

இதுவரை 3,500 கி.மீ தூரம் வரை பயணம் செய்திருக்கிறேன். நால்வர் பயணிக்க வசதியாகவும், சுலபமாகவும் இருக்கிறது. சின்ன குடும்பத்துக்கு ஏற்ற பக்காவான கார் செலெரியோ!