பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தென்காசியில் இறங்கியபோது, வெயில் சுள்ளென உறைத்தது. நம்மை அழைத்துச் செல்லத் தயாராக வந்திருந்தார் டாக்டர் ராம தங்கராஜன். தென்காசி அருகே பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இவரும் இவரது மனைவியும் பல் மருத்துவர்கள். பாவூர்சத்திரத்திலும் கடையத்திலும் க்ளினிக் வைத்திருக்கும் இந்தத் தம்பதியருக்கு, மூன்று குழந்தைகள். புத்தம் புது கிராண்ட் i10 டாப் வேரியன்ட் மாடல் காரை வாங்கி, அதில் கிரில், லைட்ஸ், சைடு பேனல் ஆகியவற்றுக்கு க்ரோம் பினிஷிங் செய்துவைத்திருந்தார் தங்கராஜன். நீண்ட நாள் மோட்டார் விகடன் வாசகரான தங்கராஜனுக்கு, கிராண்ட் i10 கார்தான் முதல் கார்.

கேரள மாநிலத்தில் உள்ள பொன்முடி என்ற மலைச் சிகரத்துக்குச் செல்வதுதான் பயணத் திட்டம். ஆனால், தனியாக வந்திருந்தார் தங்கராஜன். காரணம், குடும்பத்துடன் செல்ல காரில் இடவசதி போதாது. உடன் நண்பர் வருவார் எனச் சொல்லியிருந்தார். ஆனால், நண்பர்கள் வர முடியாத சூழ்நிலை. ‘‘கேரளாவுல ஒரு நண்பர் இருக்காரு. அவர் வந்தா நல்லா இருக்கும்’’ என அவருக்கு போனில் முயற்சி செய்தார். அவர் லைனுக்கு வரவும் விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார். ‘‘கோட்டயத்தில் இருந்து குளத்துப்புழைக்கு வந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் குளத்துப் புழை வரும் நேரத்தில் நானும் வந்துவிடுவேன். நாம் சேர்ந்து செல்லலாம்’’ என்றதும், உற்சாகமானார் தங்கராஜன்.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் புகுந்து ஆரியங்காவு, தென்மலை, குளத்துப்புழை, மடத்தரா, பாலோடு, விதுரா எனும் இடத்தில் திருவனந்தபுரம் - பொன்முடி நெடுஞ்சாலையில் ஏறி, பொன்முடி சிகரம் செல்வதுதான் ரூட். ஆண்ட்ராய்டு போனில் கூகுள் மேப் ஆன் செய்து வைத்துக்கொள்ள, தங்கராஜன் காரை ஸ்டார்ட் செய்தார்.

தென்காசி கடந்ததும் லேசாக சாரல் அடித்தது. அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்தில் கூட்டம் இருந்தது. கொல்லம் நெடுஞ்சாலையில் விரைந்தது கிராண்ட் i10. ‘‘காருக்கு ஆக்ஸசரீஸ் எங்கே பொருத்தினீர்கள்?’’ என்று கேட்டதும், திருநெல்வேலி ஹூண்டாய் டீலர் மீது இருந்த ஆற்றாமையை வெளிப்படுத்தினார் தங்கராஜன்.

‘‘முதல்ல கேட்டப்போ கிராண்ட் i10 காருக்கு எந்த டிஸ்கவுன்ட்டும் கிடையாதுனு சொல்லிட்டாங்க. என் நண்பர் மூலமா திருச்சியில விசாரிச்சா, டிஸ்கவுண்ட் உண்டுனு ஒரு கொட்டேஷன் கொடுத்தாங்க. அதைக் காட்டித்தான் இங்க டிஸ்கவுன்ட் வாங்கினேன். இதெல்லாம் இருக்குன்னு அவங்களா சொல்றதே இல்லை. நாமதான் ஒவ்வொண்ணா கேட்க வேண்டியது இருக்கு. எல்லா விஷயத்துக்கும் இனி இவங்ககிட்ட கேட்டு கேட்டுத்தான் வாங்க வேண்டியது இருக்கும்!’’ என நொந்துகொண்டார்.

‘‘கேரள நண்பரும் டாக்டரா?’’ என தங்கராஜனிடம் கேட்டபோது, ‘‘இல்லை, கோட்டயத்தில் மீன் பண்ணை வைத்திருக்கிறார். கடந்த வாரம்தான் கேரள அரசின் சிறந்த நன்னீர் மீன் பண்ணைக்கான விருது வாங்கினார். ட்யூஷன் சென்டர், விவசாயம் என பல தொழில்கள் செய்கிறார். துபாயில் 15 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, தமிழ்நாட்டில் கடையத்தில் பெயின்ட் கடை வைத்தார். அதே காம்ப்ளக்ஸில்தான் என்னுடைய க்ளினிக். அப்போது பழக்கம்’’ என்றார் தங்கராஜன்.

கொல்லம் நெடுஞ்சாலையில் புளியரை தாண்டியதும் மலைச் சாலையில் ஏறத் துவங்கும்போதே கொண்டை ஊசி வளைவு. அதன் அருகிலேயே ரயில் பாலம்; குறுகலான ரயில் பாலத்தின் கீழ் நுழைந்து கொண்டை ஊசி வளைவில் ஏற வேண்டும். இந்த இடத்தில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கும். இப்போது, அகல ரயில் பாதைக்காக மூடப்பட்டு இருப்பதால், பாலத்தை உயர்த்திக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி ஏற ஆரம்பித்தோம். கொஞ்சம் பதற்றத்துடன் காரை ஓட்டினார் தங்கராஜன். காரணம், இதுவரை மலைச் சாலையில் கார் ஓட்டியது இல்லை; மேலும் இவ்வளவு தூரம் கார் ஓட்டியதும் இல்லை. பாவூர் சத்திரம், திருநெல்வேலி, கடையம் ஆகிய முக்கோணத்துக்குள்தான் 4,900 கி.மீ வரை ஓட்டியிருக்கிறார்.

தங்கராஜனுக்கு மலைச் சாலை பழக வேண்டும் என்பதற்காக, அவரையே ஓட்டச் சொன்னோம். ஆரியங்காவு கடந்து தென்மலை வந்ததும் இரண்டு சாலைகள் பிரிந்தன. வலப்பக்கம் பிரிவது புனலூர் - கொல்லம் சாலை. நேராகச் சென்றால், குளத்துப்புழை வழியாக திருவனந்தபுரம் செல்லும் சாலை. நாம் திருவனந்தபுரம் சாலையில் குளத்துப்புழையை அடைந்தோம். நண்பருக்கு போன் செய்தார். வீட்டுக்கு வந்துவிட்டதாகவும், குளத்துப்புழையில் இருந்து வலதுபக்கம் பிரியும் சாலையில் 15 கி.மீ தூரம் வந்தால், அஞ்சல் என்ற ஊரில் காத்திருப்பதாகவும் சொன்னார். அஞ்சல் சாலையில் காரைத் திருப்பினோம்.

அஞ்சல் என்ற ஊரை அடைந்து போன் செய்யவும், ‘‘ரொம்ம்ப அலைய வெச்சுட்டேனோ?’’ என வடிவேலு பாணியில் அழகாக தமிழில் கமென்ட் அடித்தபடி கை கொடுத்தார் பிரவீன்குமார். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு, ‘‘பொன்முடி நல்ல இடம். அதை இங்க ஹைரேஞ்ச்னு சொல்லுவாங்க. சுற்றிப் பார்க்க பெரிசா இடங்கள் இல்லை. ஆனால், ரொம்ப உயரமான இடத்துல இருக்கிறதால, நல்ல கிளைமேட் இருக்கும். அங்க கேரளா டூரிஸ்ட் டிபார்ட்மென்ட் ஹோட்டல் தவிர வேறெதுவும் இல்லை. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை; தங்குறதுக்கு இடம் கிடைக்குமான்னு தெரியலை. சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள மலையேறிடணும். இல்லைன்னா உள்ளே விடமாட்டாங்க. வாங்க புறப்படலாம்!’’ என சுறுசுறுப்பை நமக்கும் ஏற்றினார்.

‘‘நீங்க ஏற்கெனவே போயிருக்கிற இடம்தானே... அப்ப நீங்களே கார் ஓட்டுங்க. ஒங்க ஆளுங்க கன்னாபின்னானு ஓட்டுறாங்க!’’ எனப் புகார் வாசித்தார் தங்கராஜன். அதற்கு பிரவீன், ‘‘இங்க எல்லாருமே அப்படித்தான் கார் ஓட்டுவாங்க. தமிழ்நாட்டு மாதிரி இங்க ரோடு இல்லை. மலையும் குழியுமா இருக்கிறதால வளைச்சுத் திருப்பி ஓட்டியே பழக்கமாயிட்டாங்க. ஆனா, கரெக்டா லேனுக்குள்ள மட்டும்தான் வண்டி போகும். பயப்பட வேண்டியதில்லை’’ என்றார் சிரித்துக்கொண்டே!

பிரவீன் மாருதி ரிட்ஸ் வைத்திருக்கிறார். காரோட்டும் அனுபவத்தில் கற்ற அத்தனை நல்ல விஷயங்களையும் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும் மேற்கொண்டார். டிரைவர் சீட் அட்ஜஸ்ட் செய்து, சைடு மிரர், ரியர்வியூ மிரர் ஆகியவற்றை செட் செய்து, சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தார் பிரவீன்.

மீண்டும் குளத்துப்புழை திரும்பி திருவனந்தபுரம் சாலையில் மடத்தரா தாண்டி பாலோடு என்ற ஊரில் இடதுபக்கம் பிரியும் சாலையில் திரும்பியது கார். வெயிலும் மேகமும் கண்ணாமூச்சி காண்பித்த காலநிலை. விதுராவில் பொன்முடி செல்லும் சாலையில் திரும்பியபோது, மணி நான்கைக் கடந்திருந்தது. அடிவாரத்தில் இருந்து பொன்முடி சிகரம் செல்ல மொத்தமே 12 கி.மீ தூரம்தான். ஆனால், 22 கொண்டை ஊசி வளைவுகளில் ஏற வேண்டும். அடிவாரத்தில் இருந்த வனத் துறை செக்போஸ்ட்டில் கார் நின்றது. காரில் இருந்தவர்களைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டு, நான்கு பேர் காரின் இண்டு இடுக்குகளில் துழாவ ஆரம்பித்தனர். பிரவீனைத் தவிர, எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்டதும், ‘‘மலை மீது மது அருந்தவோ, புகை பிடிக்கவோ அனுமதி இல்லை. மிகச் சுத்தமாக இயற்கையைப் பாதுகாக்கும் மலை இது. மலை மீது எந்த இடத்திலும் இயற்கைக்கு விரோதமாக காரியங்கள் எதுவும் செய்ய முடியாது. எல்லா இடங்களிலும் கேமரா வைத்திருக்கிறார்கள்!’’ என்றார் பிரவீன்.

கிராண்ட் i10, இரண்டாவது கியரில் சக்தியே இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. மலைச் சாலையில் கொண்டை ஊசி வளைவுகளில் ஏறும்போதுதான் இரண்டாவது கியரின் தேவை புரிந்தது. ஸ்டீயரிங் செம ஷார்ப். ஆனால், பிரேக் மிதித்ததும் லாக் ஆகி பயத்தை வரவழைக்கிறது. கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி, சிகரத்தில் அமைந்திருந்த கேரள சுற்றுலாத் துறையின் விடுதியை அடைந்தபோது, மணி ஐந்தைத் தாண்டியது. குளிர் லேசாக பற்களைத் தந்தியடிக்க வைக்க, மெதுவாக மேகப் பொதிகள் மலையை மூட ஆரம்பித்திருந்தன. சிறிது நேரத்தில் தூறல்கள் விழ... காரை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

‘கோல்டன் பீக்’ என்ற பெயரில் அமைந்துள்ள கேரள சுற்றுலாத் துறையின் அழகான விடுதியில் 2,000, 3,000, 5,000 ரூபாய் என்ற ரேஞ்சில் அறை வாடகை. விடுமுறை நாட்களில் முன்பதிவு செய்வது நல்லது. நாம் தங்கவிருந்தது ஞாயிறு இரவு என்பதால், 3,200 ரூபாய்க்கு இருவர் தங்கும் அறைகள் கிடைத்தன. சுற்றுலாத் துறையின் ரெஸ்ட்டாரன்ட் மட்டுமே இங்கு இருக்கிறது. சாப்பாடும் விலையும் பரவாயில்லை ரகம்.

இருட்டியதும் அறைக்கு திரும்பினோம். ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் அதிகம் இருக்கின்றன. கால்களை கவனமாக ஆராய்ந்துவிட்டு உறங்கச் சென்றோம். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது, மேகக் கூட்டம் விலகவில்லை. அவ்வப்போது லேசாக எட்டிப் பார்த்த வெயில், மலைச் சிகரங்களை பொன்னிறமாக தகதகக்க வைத்தது.

தென்காசியில் இருந்து பொன்முடிக்கு சுமார் 110 கி.மீ தூரம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 55 கி.மீ. பொன்முடிக்குச் செல்லும் வழியில் டீ எஸ்டேட் இருக்கிறது. மலைச் சிகரத்தில் உள்ள பொன்முடியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு தபால் அலுவலகம், பொதுப்பணித் துறைக் கட்டடம், வயர்லெஸ் ஸ்டேஷன், வனத் துறை அலுவலகம் ஆகியவை மட்டுமே இருக்கின்றன. கோல்டன் பீக் ரெஸார்ட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள மலை உச்சிக்குச் செல்லலாம். சுற்றிப் பார்க்க வேறு இடங்கள் கிடையாது.

சுத்தமான, மாசற்ற வனத்தைக் கொண்டுள்ளது பொன்முடி. சிகரத்தில் ஏறி நின்று பார்த்தபோது, இந்த மலைக்கு ஏன் பொன்முடி எனப் பெயர் வந்தது என்ற காரணம் புரிந்தது!