பிரீமியம் ஸ்டோரி

2010 முதல் டெஸ்ட்டிங்கில் இருக்கும் மோஜோ பைக்கை, அக்டோபர் 16 அன்று விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது மஹிந்திரா.

கடந்த ஆட்டோ எக்ஸ்போக்களில் காட்சிக்கு வைக்கப்பட்ட மோஜோவைவிட, தற்போது விற்பனைக்கு வரவிருக்கும் மோஜோ, டிஸைனில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

அக்டோபர் முதல் மோஜோ!

முன் மற்றும் பின்பக்கம் பெட்டல் டிஸ்க் பிரேக், பைரல்லி டயர்கள், அப்ஸைடு டவுன் ஃபோர்க்ஸ், மோனோஷாக் சஸ்பென்ஷன் என விலை உயர்ந்த பைக்குகளில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.  இதன் பெட்ரோல் டேங்க் 21 லிட்டர் கொள்ளளவு கொண்டது. டிஜிட்டல் டயலில் புதிய அறிமுகமாக 0-100 டாப் ஸ்பீடு ரெக்கார்டர் இடம்பெற்றுள்ளது.

மோஜோ 300சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இன்ஜின் கொண்டது. இதன் அதிகபட்ச சக்தி 27bhp. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மோஜோவின் விலை, 2 லட்சம் ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு