Published:Updated:

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

 ##~##

>>சார்லஸ்

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மஹாவுடன் மோதுகிறது ஹோண்டா. டுகாட்டி அணியில் இருந்து ஹோண்டா அணிக்குத் தாவி, தற்போது சாம்பியன் பட்டத்துக்கான ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார் கேஸி ஸ்டோனர். தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டு இருக்கிறார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ. யமஹாவிடம் ஹோண்டா சரணடையுமா? அல்லது ஹோண்டாவுக்கு யமஹா டாட்டா காட்டுமா என்கிற கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்குகிறது மோட்டோ ஜீபி.

இதற்கிடையே கடந்த மாதம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளிலும் நடைபெற்ற மோட்டோ ஜீபி பந்தயத்தில், இரண்டில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் கேஸி ஸ்டோனர்.

மோட்டோ ஜீபி- அமெரிக்கா

அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் நகரில் ஆகஸ்ட் 28-ம் தேதி மோட்டோ ஜீபியின் 12-வது சுற்று நடைபெற்றது. ரேஸுக்கு முந்தைய நாள் நடைபெற்ற தகுதிச் சுற்றில் குறைந்த நேரத்தில் லேப்பைச் சுற்றி வந்து முதலிடம் பிடித்த கேஸி ஸ்டோனர், ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். யமஹா வீரர்கள் பென் ஸ்பீஸ் இரண்டாவது இடத்தில் இருந்தும், நடப்பு சாம்பியன் ஜார்ஜ் லாரன்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

ஆனால், முதல் லேப்பிலேயே கேஸி ஸ்டோனரை முந்திச் சென்றார், நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸா. அடுத்ததாக, ஜார்ஜ் லாரன்சோவும் கேஸி ஸ்டோனரை முந்தினார். ஆனால், ஜார்ஜ் லாரன்சோவை வெறி கொண்டு துரத்திய கேஸி ஸ்டோனர், இரண்டாவது லேப்பிலேயே லாரன்சோவைப் பின்னுக்குத் தள்ளினார்.

இதனால், முதலிடம் பிடிப்பதில் இரண்டு ஹோண்டா ரேஸர்களுக்கு இடையே கடுமையான போட்டி உருவானது. ஏழாவது லேப்பில் டேனி பெட்ரோஸாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்டோனர். அதன் பிறகு, ஸ்டோனரை யாராலும் முந்த முடியவில்லை. மொத்தம் 28 லேப்புகள் கொண்ட இந்த ரேஸில் டேனி பெட்ரோஸாவைவிட 4 விநாடிகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார் ஸ்டோனர். டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தையும், பென் ஸ்பீஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஜார்ஜ் லாரன்சோ நான்காவது இடம் பிடித்தார். டுகாட்டி அணியின் வாலன்டினோ ராஸி பத்தாவது இடம் பிடித்தார்.

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

மோட்டோ ஜீபி - இத்தாலி

இத்தாலியின் சான் மரினோவில் மோட்டோ ஜீபியின் 13-வது சுற்று செப்டம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த கேஸி ஸ்டோனர், சான் மரினோ ரேஸிலும் முதலிடத்தில் இருந்து துவங்கத் தகுதி பெற்றார். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

அமெரிக்காவில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்க காத்திருந்த ஜார்ஜ் லாரன்சோ, முதல் லேப்பிலேயே கேஸி ஸ்டோனரை முந்தினார். 28 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் 22-வது லேப் வரை ஜார்ஜ் லாரன்சோவை எப்படியாவது முந்திவிட முயன்று கொண்டிருந்தார் ஸ்டோனர்.

ஆனால், 23-வது லேப்பில் ஸ்டோனரைப் பின்னுக்குத் தள்ளி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார் டேனி

யமஹாவை விரட்டும் ஹோண்டா!

பெட்ரோஸா. இறுதியில் ஜார்ஜ் லாரன்சோ வெற்றி பெற... அவரைவிட ஏழு விநாடிகள் பின்னால் வந்த டேனி பெட்ரோஸா இரண்டாவது இடம் பிடித்தார். கேஸி ஸ்டோனருக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. வாலன்டினோ ராஸி ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

மோட்டோ ஜீபி- ஸ்பெயின்

ஸ்பெயின் அரகான் மோட்டார்லேண்ட் ரேஸ் ட்ராக்கில் மோட்டோ ஜீபியின் 14-வது சுற்று செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த ரேஸிலும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் கேஸி ஸ்டோனர். டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தில் இருந்தும், பென் ஸ்பீஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். ஜார்ஜ் லாரன்சோ நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, வாலன்டினோ ராஸி கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

ரேஸ் துவங்கி 14-வது லேப் வரை முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. 15-வது லேப்பின்போது மூன்றாவது இடத்தில் இருந்த பென் ஸ்பீஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் ஜார்ஜ் லாரன்சோ. அதன் பிறகு, இறுதிவரை எந்த மாற்றமும் இல்லை. கேஸி ஸ்டோனர் முதலிடம் பிடித்து வெற்றி பெற, டேனி பெட்ரோஸா இரண்டாவது இடமும், ஜார்ஜ் லாரன்சோ மூன்றாவது இடமும் பிடித்தனர். வாலன்டினோ ராஸிக்கு பத்தாவது இடம் கிடைத்தது.

இந்த ஆண்டு இதுவரை நடந்து முடிந்திருக்கும் 14 ரேஸ் போட்டிகளில், 8 ரேஸ்களில் வெற்றி பெற்று 284 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார் டேனி பெட்ரோஸா. இன்னும் நான்கு ரேஸ் போட்டிகளே மிச்சம் இருக்கும் நிலையில் நடப்பு சாம்பியன் ஜார்ஜ் லாரன்சோ, ஸ்டோனரை விட 44 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி 240 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஹோண்டாவின் டோவிஸியோஸோ 185 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பத்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் வாலன்டினோ ராஸி, 139 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்!