பிரீமியம் ஸ்டோரி

நீண்ட காலமாக டெஸ்ட்டிங்கில் இருக்கும் மினி XUV கார் விற்பனைக்குத் தயாராகிவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரைப் படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் வி.வி.மணிபாரதி. இந்தப் படங்களில் காரின் முக்கியமான டிஸைன் அம்சங்கள் தெரியவந்திருக்கின்றன. XUV 100 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, XUV 500 காரின் மினி வெர்ஷன்தான் என்றாலும், டிஸைனில் பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இந்த காரின் டெயில் லைட்டுகள், ரெனோ க்விட் காரின் டெயில் லைட்டுகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததுபோல இருக்கின்றன. செவர்லே பீட் காரில் இருப்பதுபோல, பின்பக்கக் கதவு கைப்பிடிகள் கதவில் இல்லாமல், மேலே குவார்ட்டர் கிளாஸில் வைக்கப்பட்டிருக்கின்றன. முன்பக்க பானெட் டிஸைன் கிளாம்ஷெல் (ஓடு வடிவ) டிஸைனில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. TUV 300 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே டீசல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். 85bhp சக்திகொண்ட இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும்.

வருகிறது மஹிந்திரா XUV 100
வருகிறது மஹிந்திரா XUV 100

பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் விற்பனைக்கு வரவிருக்கிறது XUV 100. 6 - 7 லட்சம் ரூபாய்க்குள் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்!

அனுப்ப வேண்டிய முகவரி:

ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை-600002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு