Published:Updated:

தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / மஹிந்திரா தார்தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்தும், முறையான ஃபேஸ்லிஃப்ட்கூட செய்யப்படாமல் விற்பனையில் கோலோச்சிய, உண்மையான 4X4 அனுபவத்தைத் தந்த கார், மஹிந்திரா தார்.

காலத்தால் அழியாத MM540-ன் தாக்கத்தில் உருவான இதில், மஹிந்திரா பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது. மத்திய மோட்டார் வாகன ஒழுங்குமுறைச் சட்டப்படி, வாகனத்தின் பாடிக்கும், முன்பக்க பம்பருக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என்பது புதிய விதி. இதற்காக காரின் முன்பக்க பிளாஸ்டிக் பம்பரில் மாற்றத்தைத் தொடங்கிய மஹிந்திரா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மேலும் பல புதிய விஷயங்களையும் காரில் சேர்த்துவிட்டது.

வட்ட வடிவ ஹெட்லைட்டுகள், க்ளியர் லென்ஸ் ஹெட்லைட்டாக மாறியுள்ளன. காரின் சாஃப்ட் டாப் ரூஃப்-ன் ஒட்டுமொத்தத் தரம் முன்பைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது. புதிய அகலமான ஃபெண்டர்கள் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வைப்பர்கள் சீராக இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காரின் உள்ளே நுழைந்தால், பீஜ் வண்ணத்தில் புதிய டேஷ்போர்டு வரவேற்கிறது. இது ஸைலோவைப் போல குறைசொல்ல முடியாதபடி உள்ளது. ஸ்டீயரிங் வீலில், பொலேரோவின் தாக்கம் தெரிந்தாலும், பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது. பூட்டும் வசதிகொண்ட க்ளோவ்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இது பேப்பர்களை வைப்பதற்கு உதவும். காரின் சீட்டுகள், பழைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் இருந்து பெறப்பட்டிருந்தாலும், சொகுசாக இருக்கின்றன. காரின் ரியர் வியூ கண்ணாடிகள், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒளிரும் வசதிகொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், தெளிவாக இருக்கின்றன. ஆனால், இவ்வளவு இருந்தும் தார் காரின் இன்ட்டீரியர், மாடர்னாக இல்லை.

தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்!

ஒரே ஒரு டெக்னிக்கல் மாற்றமாக, EATON நிறுவனம் தயாரித்த ஆட்டோ டிப்ஃரன்ஷியல் லாக் சிஸ்டம், தாரில் சேர்க்கப்பட்டுள்ளது. இது, நிலையற்ற பாதைகளில் பயணிக்கும்போது, சுழலாத சக்கரத்துக்கு பவரை அனுப்புகிறது. ஆனால், 4 வீல் டிரைவ் லீவரைச் சரியாக பொசிஷன் செய்யாததால், இது பயன்படுத்துவதற்கு அசெளகரியமாக இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஹெவியாக இருக்கிறது.

தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்!

மஹிந்திரா தார், முறையான ஆஃப் ரோடிங் சாகசங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கார் என்றாலும், தற்போது தினசரி நகரப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வசதியான இருக்கைகள் மற்றும் ஆட்டோ டிப்ஃரன்ஷியல் லாக் சிஸ்டம் இதை உறுதிப்படுத்துகின்றன.

தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்!

மஹிந்திரா தார், ப்ராக்டிக்கலான சின்ன எஸ்யுவிகளுக்கு மாற்றான வாகனம்  கிடையாது. மேலும், நாம் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய மாற்றங்கள் எதுவும் இதில் செய்யப்படவில்லை.
ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பைகள் ஆப்ஷனலாககூட இல்லாதது, மிகப் பெரிய மைனஸ். ஆனால், இந்த வாகனத்தைப் பயன்படுத்துவோருக்கு, இதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது என்பது உண்மை. தாரின் சென்னை ஆன் ரோடு விலை 9,51,804 ரூபாய். 10 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் 4 வீல் டிரைவ் கார் என்பதே, தாரின் வெற்றிக்குக் காரணம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு