Published:Updated:

பறக்குதா? ஓடுதா?!

ரீடர்ஸ் ரெவ்யூ / ட்ரையம்ப் டைகர் EXPLORER XCபி.நிர்மல் படங்கள்: க.சர்வின், மோ. ரஞ்சித் நேசகுமார்

“எல்லாரையும் போல எனக்கும் சின்ன வயதில் இருந்து பைக்ஸ் மீது ஆர்வம் அதிகம். பள்ளிப் பருவத்தில் வாங்கிய டிவிஸ்-50தான் என்னுடைய முதல் பைக். அதன் பிறகு, யமஹா RX-100, RD-350, FZ என இதுவரை 5 பைக்ஸ் மாற்றிவிட்டேன். பைக்ஸ் மீது காதல் அதிகம் என்பதால், அவை பற்றிய எல்லா செய்திகளையும் அப்டேட் செய்துகொள்வேன். என்னிடம் ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் (Sportster) இருந்தாலும், ட்ரையம்ப் டைகர் Explorer பற்றிக் கேள்விப்பட்ட பின்பு வாங்காமல் இருக்க முடியவில்லை. இப்போது ட்ரையம்ப் டைகர் எக்்ஸ்ப்ளோரர் என்னுடய இரண்டாவது சூப்பர் பைக். தமிழகத்தின் முதல் ட்ரையம்ப் டைகர் எக்்ஸ்ப்ளோரர் என்னுடையதுதான்.


ஏன் ட்ரையம்ப் டைகர் எக்ஸ்ப்ளோரர்?
நான் முதலில் வாங்கிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ஸ்டர், க்ரூஸர் வகை பைக். நகருக்குள் ஓட்ட கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும், இரண்டாவதாக ஒரு அட்வென்ச்சர் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். இது குறித்து விசாரித்தபோது, நண்பர்கள் பலரும் புதிதாக வந்த ட்ரையம்ப் டைகர் எக்ஸ்ப்ளோரர் பைக்கை சஜஸ்ட் செய்தார்கள். டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். முதல் டிரைவிங்கின்போதே பைக் மிகவும் பிடித்துவிட்டது. இதுவரை நான் ஓட்டிய சூப்பர் பைக்குகளைவிட, இதன் ஓட்டுதல் அனுபவம் வித்தியாசமாகவும் ஸ்பெஷலாகவும் இருந்தது.

பறக்குதா?  ஓடுதா?!

ஷோரூம் அனுபவம்...

சென்னை எழும்பூரில் இருக்கிற ஹார்பர் சிட்டி ட்ரையம்ப் ஷோருமில்தான் பைக் வாங்கினேன். டெஸ்ட் டிரைவ் முடித்த கையோடு, பைக்கை புக் செய்துவிட்டேன். ஒரு சில தினங்களில் டெலிவரி கொடுத்துவிட்டார்கள். ஒரு சூப்பர் பைக் வாங்க வரும் கஸ்டமரை எப்படி நடத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு மரியாதையோடு நடத்தினார்கள். இப்போது வரை, சின்னப் பிரச்னை என்றால்கூட வீட்டுக்கே வந்து பார்த்துச் சரிசெய்து விடுகிறார்கள். பைக் வாங்கும்போதும் சரி; வாங்கிய பின்பும் சரி; நல்ல சர்வீஸ்.

எப்படி இருக்கிறது டைகர்?

வாங்கிய புதிதில் நான் பைக்கை ஓட்டினேன் என்பதைவிட, பைக் என்னை ஓட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பைக் சுத்தமாக என் கட்டுப்பாட்டில் இல்லை. பின்பு, சூப்பர் பைக்கை ஓட்டுவது எப்படி என்று கற்றுத்தரும் ஸ்பெஷல் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். இப்போது ஓரளவுக்குத் தேறிவிட்டேன். பைக்கை எடுத்து ஓட்ட ஆரம்பித்தால், இன்ஜினை ஆஃப் செய்ய மனசு வராது. அந்த அளவுக்கு சொகுசான பைக். நம் ஊர் ரோடுகளில்கூட ஓடுகிறதா அல்லது பறக்கிறதா என்று தெரியாத அளவுக்கு, இதன் சஸ்பென்ஷன் உள்ளன. பைக்கின் ஓடோ மீட்டர் டிஸ்ப்ளே, விமானத்தின் காக்பிட் உணர்வைத் தருகிறது. க்ரூஸ், ஏபிஎஸ், டிராக்‌ஷன் என மூன்று ‘மோடு’கள் இருப்பதால், சூழலுக்குத் தகுந்தவாறு செட் செய்து ஓட்டலாம். நாம் சிந்திக்கும் முன்பே, பைக் செயலில் இறங்கிவிடுகிறது. உண்மையிலே இது புலிதான்!

பிடித்தது?

க்ரூஸ் ‘மோடி’ல் குறிப்பிட்ட வேகத்தை செட் செய்துவிட்டால் போதும்; நெடுஞ்சாலையில் அதுவே அந்த வேகத்தில் நம்மை அழைத்துச் செல்லும். ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பை ஓட்டும் பெருமை - போனஸ்.

பறக்குதா?  ஓடுதா?!


 
பிடிக்காதது?

கூடுதல் எடை, அதிக உயரம். இதனால் போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

என் தீர்ப்பு!

சொகுசு, வேகம், பாதுகாப்பு  - இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சூப்பர் பைக் விரும்பிகளுக்கு, ட்ரையம்ப் டைகர் எக்ஸ்ப்ளோரர்தான் சரியான சாய்ஸ்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு