பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம் !

ந்திய கார் மார்க்கெட், எத்தனை பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற ஜாம்பவான்கள் விளையாடும் களமாகக்கூட இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களில் 70 சதவிகிதம் சின்ன கார்கள்தான். இந்த செக்மென்ட்டில் முடிசூடா மன்னனாக விளங்குவது மாருதி சுஸூகி. மாருதியின் களத்தில், மாருதியின் விளையாட்டில், மாருதியின் விதிகளின்படி விளையாடி மாருதியை வெற்றிக்கொள்ளப் புறப்பட்டு வந்திருக்கும் கார், ரெனோ க்விட். இது, மாருதி ஆல்ட்டோவையும் அதே களத்தில் இருக்கும் ஹூண்டாய் இயானையும் எப்படி எதிர்கொள்ளும்? அந்தத் திறன் க்விட்டுக்கு உண்டா? இந்த மூன்று கார்களையும் ஒரே நேரத்தில் டெஸ்ட் செய்து, மூன்றில் சிறந்த கார் எது என்று சொல்லி இருக்கிறோம்.

அதேபோல, டீசல் ஹேட்ச்பேக் செக்மென்ட் என்பதும் பரபரப்பு மிகுந்த ஏரியா. இதிலும் மாருதியின் ஸ்விஃப்ட்தான் கில்லி. அதனால், அதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கத்தான் இந்த செக்மென்ட்டில் ஏகப்பட்ட போட்டா போட்டி. புதிய இன்ஜின், புதிய சஸ்பென்ஷன், புதிய கேபின், மொத்தத்தில் புதிய பிளாட்ஃபார்ம் என்று வந்திருக்கும் ஃபோர்டு ஃபிகோவுடன் இந்த இரண்டாம் இடத்துக்கு கிராண்ட் i10 மற்றும் டாடா போல்ட் ஆகிய இரண்டு கார்களும் மல்லுக்கட்டுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்ய,  இந்த மூன்று கார்களையும் ஒரே சமயத்தில் ஓட்டி டெஸ்ட் செய்து, அதன் முடிவுகளையும் கொடுத்திருக்கிறோம்.

பிரீமியம் டீசல் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் கொடிகட்டிப் பறக்கும் கார், ஹூண்டாயின் i20. இதற்கு மாருதி தன்னுடைய புதிய பெலினோ மூலம் செக் வைத்திருக்கிறது. தாராளமான இடவசதி, ரசிக்கும்படியான டிஸைன், நெக்ஸா ஷோரூமில் விற்பனை என்று சூப்பர் பேக்கேஜில் அறிமுகமாகும் பெலினோவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வலிமை i20 காருக்கு இருக்கிறதா? இந்த இரண்டு கார்களையும் ஒரே நேரத்தில் டெஸ்ட் செய்து, ஒரு கம்பாரிஸன் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம்.

ஆக, இந்த இதழ் ஒரு தீபாவளி ஸ்பெஷலாகவும், கூடவே கம்பாரிஸன் ஸ்பெஷலாகவும் மலர்ந்திருக்கிறது.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு