Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

பிரீமியம் ஸ்டோரி

டாடா காருக்கு, மெஸ்ஸி பிராண்ட் அம்பாஸடர்!

டாடா இண்டிகாவுக்கு மாற்றாக ‘கைட்’ என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது டாடா. இந்த கைட் காருக்கு, பிரபல கால்பந்து வீரர் - அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸியை விளம்பரத் தூதுவராக நியமிக்க இருக்கிறது டாடா. பொதுவாக, இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் அல்லது சினிமா நடிகர்கள் மட்டுமே பிராண்ட் அம்பாஸடர்களாக இருப்பார்கள். முதன்முறையாக உலக பிரபலத்தை, அதுவும் கால்பந்து வீரரை நியமித்து ஒட்டுமொத்த விளம்பர உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது டாடா. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது கைட். 2016, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது, இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 4 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும்.

மோட்டார் நியூஸ்

பிரிட்ஜ்ஸ்டோனின் எக்கோபியா!

மோட்டார் நியூஸ்

டயர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம், ‘எக்கோபியா’ எனும் புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியச் சாலைகளுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய டயர், இந்தியாவில் சக்கான் மற்றும் கேதார் ஆகிய இடங்களில் உள்ள பிரிட்ஜ்ஸ்டோன் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட உள்ளன. ‘மார்க்கெட்டில் இருக்கும் மற்ற டயர்களுடன் ஒப்பிடும்போது, குறைவான CO2 மாசு அளவு, சிறப்பான மைலேஜ், ஈரமான சாலைகளில் மேம்படுத்தப்பட்ட கையாளுமை, அதிகப்படியான காலம் உழைக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்’ என்கிறது பிரிட்ஜ்ஸ்டோன்.

மஹிந்திராவின் ஆஃப் ரோடு சாகசம்!

‘Arrive and Drive’ கொள்கைப்படி, 1996-ல் துவங்கப்பட்ட மஹிந்திரா அட்வென்ச்சர், ஆண்டுக்கு இரண்டு முறை ஆஃப் ரோடு சாகசம் செய்யக்கூடிய போட்டிகளை நடத்தி வந்தது. இப்போது அது, மாதம் ஒருமுறையாக இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் சென்னையில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருக்கும் வயலூரில் நடந்தது மஹிந்திராவின் ஆஃப் ரோடு சாகசம். ஒரு காரில் இரண்டு பேர் வீதம், மொத்தம் 32 மஹிந்திரா தார் கார்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 20 கார்கள் ஆஃப் ரோடில் சாகசம் செய்யக்கூடிய போட்டிகளில் கலந்துகொண்டன. இறுதியாக 5 கார்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த 5 கார்களும் நாசிக்கில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆஃப் ரோடிங் சாகசப் போட்டியில் பங்குபெறத் தகுதிபெற்றன!

பென்ஸ் M - கிளாஸ் என்கிற GLE!

எம்-கிளாஸ் இனி இந்தியாவில் இல்லை. அதற்குப் பதிலாக அதே கார்களை GLE என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது பென்ஸ். ஃபெண்டர், க்ரோம் கிரில், LED டே டம் ரன்னிங் லைட்ஸ் போன்றவற்றுடன் ஹெட்லைட், பம்பர், அலாய் வீல்கள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, காரின் முன்பக்கம், C-க்ளாஸ் மற்றும் S-க்ளாஸ்போல அப்டேட்டடாக இருக்கிறது GLE.

மோட்டார் நியூஸ்

காரின் பின்பக்கத்தில் LED டெயில் லைட் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 204bhp சக்தி, 51kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் 250 CDI மற்றும் 258bhp சக்தி, 63.22kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் V6 350 CDI என இரண்டு டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது பென்ஸ் GLE. பழைய M-கிளாஸ் காரில் இருந்த 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் என உள்பக்கம் அட்டகாசமாக இருக்கிறது. இது தவிர 6 காற்றுப் பைகள், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், 5 டிரைவிங் மோடுகளுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம், முன்பக்க மெமரி சீட், ஏர் சஸ்பென்ஷன், 360 டிகிரி சுழலும் கேமரா என ஏகப்பட்ட வசதிகளுடன் இருக்கிறது GLE. சென்னையில் 60 லட்சம் ரூபாயில் இருந்து இந்த காரின் விலை துவங்குகிறது.

அபாரமான அபார்த்!

மோட்டார் நியூஸ்

ஃபியட் - அபார்த் புன்ட்டோ காரை, சமீபத்தில் டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த அபார்த் 595 Competizione கார் அறிமுக விழாவில் காட்டி முன்னோட்டம் விட்டது. அவர்கள் எதிர்பார்க்காத வகையில், அபார்த் 595 Competizione காரைவிட, அபார்த் புன்ட்டோ கார்தான் அனைவரின் லைக்குகளையும் பெற்றது. இதனால் உற்சாகமடைந்த ஃபியட், தற்போது அவென்ச்சுரா அபார்த் மற்றும் புன்ட்டோ ஈவோ அபார்த் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  145bhp சக்தி மற்றும் 21.2 kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் T-Jet இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், இந்த இரு கார்களிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், இறுக்கமான சஸ்பென்ஷன், குறைக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், 16 இன்ச் ஸ்கார்ப்பியன் அலாய் வீல்கள், அலுமினியம் ஸ்போர்ட் பெடல்கள், ஸ்போர்ட்  சீட்கள் என இரண்டு கார்களுமே களைகட்டுகின்றன. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, அபார்த் புன்ட்டோ ஈவோ, 0 - 100 கி.மீ வேகத்தை, 8.8 விநாடிகளிலும், அபார்த் அவென்ச்சுரா, 0 - 100 கி.மீ வேகத்தை, 9.9 விநாடிகளிலும் எட்டிப் பிடிக்கின்றன.  சென்னையில் இந்த கார்களின் ஆன் ரோடு விலை 10 லட்சத்தைத் தாண்டும்!

ICC-உடன் இணைகிறது நிஸான்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் தங்களது கார்களைப் பிரபலப் படுத்துவதற்காக, ICC உடன் இணைந்திருக்கிறது நிஸான். அடுத்த 8 ஆண்டுகளுக்கு ICC நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, 20/20 உலகக்கோப்பை என அனைத்துப் போட்டிகளுக்கும் நிஸான்தான் முக்கிய ஸ்பான்ஸர்.

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு