Published:Updated:

ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக்

MAHINDRA SCORPIO AUTOMATICடெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக்தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ஹிந்திராவின் எவர்கிரீன் எஸ்யுவியான ஸ்கார்ப்பியோ, சென்ற ஆண்டு முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் ஆனது. புதிய ஸ்கார்ப்பியோவில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருந்தது. இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைச் சேர்த்திருக்கிறது மஹிந்திரா.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், காரின் டாப் வேரியன்ட்டான S10ல், 4X2 மற்றும் 4X4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நாம் இங்கு டெஸ்ட் செய்தது, அதிகம் விற்பனையாகக்கூடிய 4X2 டிரைவ் மாடல்.

பழைய ஸ்கார்ப்பியோவில் பயன்படுத்தப்பட்ட 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் புதிய காரிலும் இடம் பிடித்திருக்கிறது. ஆனால், கியர்பாக்ஸின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, சாஃப்ட்வேரில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறுகிறது மஹிந்திரா. 1.8 டன் எடைகொண்ட ஸ்கார்ப்பியோவின் இழுவைத் திறனுக்காக, 118bhp பவர் மற்றும் 28.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜினுடன், இந்த கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.

ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக்

தானாக கியர் மாறும்போது, பழைய காரில் இருந்த உதறல் இப்போது இல்லை. மேலும், நகர டிராஃபிக்கில் ஸ்மூத்தாகச் செயல்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலையில் விரட்டி ஓட்டும்போது, கியர்பாக்ஸ் உடனடியாகச் செயல்படாமல், சிறிது நேரம் கழித்துத்தான் விழித்துக்கொள்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் இருந்த ஹெவியான கிளட்ச் மற்றும் பயன்படுத்துவதற்கு வசதியற்ற கியர் லீவரில் இருந்து நாம் தப்பித்திருக்கிறோம் என்பதே பெரிய ப்ளஸ்.

XUV5OO காருக்கு இணையாக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது ஸ்கார்ப்பியோ. 17 இன்ச் அலாய் வீல்கள், LED பட்டையுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 2 காற்றுப் பைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட்ஸ், TPMS, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்கள், நேவிகேஷன் வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், க்ரோம் கிரில் என பட்டியல் நீள்கிறது.

ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக்

காரின் சென்னை ஆன் ரோடு விலை, 17.53 லட்ச ரூபாய். இது க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மாடலின் விலையை நெருங்குகிறது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு