Published:Updated:

வேகம் பிடிக்கும் ஹீரோ!

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்ஸ்டெஸ்ட் ரிப்போர்ட் /ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் - ஹீரோ டூயட்வேல்ஸ், ராகுல்

பிரீமியம் ஸ்டோரி

மோட்டார் சைக்கிள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது ஹீரோ. ஆனால், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ... ஹீரோவாக இல்லை. மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஹீரோவின் மோட்டார் சைக்கிள் மார்க்கெட் ஷேர் 52 சதவிகிதம் என்றால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இதன் பங்கு வெறும் 13 சதவிகிதம்தான். ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஹோண்டாவின் ஆளுமை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன்... ஆட்டோமேட்டிக் செக்மென்ட் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால், ஹீரோவின் பார்வை இப்போது ஸ்கூட்டர் மார்க்கெட் மீது படர்ந்திருக்கிறது.

பெண்களுக்கு ஹீரோ ப்ளஷர்; ஆண்களுக்கு ஹீரோ மேஸ்ட்ரோ. இந்த இரண்டு மாடல்களை மட்டும் வைத்திருந்தால் போதாது என்பதைப் புரிந்துகொண்ட ஹீரோ, ஆண் - பெண் என்று இருபாலரும் பயன்படுத்தக் கூடிய ஹீரோ ‘டூயட்’ என்ற பெயரில் ஒரு ஸ்கூட்டரையும், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மேஸ்ட்ரோவுக்கு கூடுதல் ‘கெத்’ கொடுத்து, ‘மேஸ்ட்ரோ எட்ஜ்’ என்ற பெயரில் இன்னொரு ஸ்கூட்டரையும் களம் இறக்கி இருக்கிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்டிவிட்டது. ஆனாலும் இப்போதுதான் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் டெல்லியை அடுத்துள்ள கூர்கானில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

வேகம் பிடிக்கும் ஹீரோ!
வேகம் பிடிக்கும் ஹீரோ!

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

முதலில் பார்த்ததுமே கவர்வது, இரு ஸ்கூட்டர்களின் குறை சொல்ல முடியாத மாடர்ன் டிஸைன். இவற்றில் மேஸ்ட்ரோ எட்ஜ், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மேஸ்ட்ரோவைவிட, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. டூயட் ஸ்கூட்டர், நடுத்தர வயதினரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரு ஸ்கூட்டர்களின் பின்பக்க டிஸைன் தனித்துவமாக இருக்கின்றன. ஏனென்றால், LED டெயில் லைட் மற்றும் அதற்கு மேல் இருக்கும் பெட்ரோல் டேங்க் மூடி என பின்பக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்வதற்கான விஷயங்கள் அதிகம்.

இரு ஸ்கூட்டர்களின் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் தெளிவாக இருக்கின்றன. அவற்றில் உள்ள சின்ன ஸ்கிரீன், ஓட்டுநருக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களைக் காட்டுகிறது. கைப்பிடி, லீவர்கள், ஸ்விட்சுகள் தரமாக இருக்கின்றன. ஸ்கூட்டர்களில் அரிதாக இருக்கும் வசதிகளான பின்பக்க பிரேக் லாக் கிளாம்ப் மற்றும் பாஸ் லைட், இவ்விரு ஸ்கூட்டர்களிலும் இருக்கின்றன. இரு வண்ணங்களில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகள், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. சீட்டுக்குக் கீழே இருக்கும் 22 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தவிர, முன்பக்கத்தில் பூட்டும் வசதிகொண்ட பாக்ஸ்களை, ஆப்ஷனலாக வழங்குகிறது ஹீரோ.

பைகள் மாட்டுவதற்கான ஹூக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சீட்டுக்குக் கீழே இருக்கும் ஸ்டோரேஜ் ஸ்பேஸில், ஒரு சின்ன விளக்கும், மொபைலை சார்ஜ் செய்வதற்காக USB 3.0 போர்ட் ஒன்றும் இருக்கின்றன. அகலமான இருக்கைகள் நல்ல ஃபேப்ரிக்கோடு இருப்பதால், இரண்டு பேர் வசதியாக உட்கார முடிகிறது.

வேகம் பிடிக்கும் ஹீரோ!
வேகம் பிடிக்கும் ஹீரோ!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஹோண்டாவிடம் இருந்து பெறாமல், தான் புதிதாகத் தயாரித்துள்ள 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, கார்புரேட்டர் 110.9 சிசி இன்ஜினோடு களமிறங்குகிறது மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட். இது 8,000
ஆர்பிஎம்-ல் 8.31 bhp பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 0.84 kgm அதிகபட்ச டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இவை ஹோண்டா இன்ஜின்களைப்போல ஸ்முத்தாக, அதிர்வுகள் இன்றி இயங்குகின்றன. CVT கியர்பாக்ஸ் சிறப்பாகச் செயல்படுவதால், ஆரம்ப மற்றும் மித வேகங்களில், இன்ஜின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. 65 கி.மீ வேகத்தில் வசதியாக க்ரூஸ் செய்ய முடிகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ரைடிங் பொசிஷன் சரியாக இருக்கிறது. முன்பக்கம் 12 இன்ச் மற்றும் பின்பக்கம் 10 இன்ச் MRF ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை நல்ல கிரிப்பை அளிப்பதால், ஸ்கூட்டரைக் கையாளுவது சுலபமாக இருக்கிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஹீரோ ஸ்கூட்டர்களைவிட மேம்பட்டிருப்பதால், அனைத்து வகைச் சாலைகளிலும், நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கின்றன. தவிர, கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், பின்பக்க டிரம் பிரேக்கை உபயோகப்படுத்தும்போது, முன்பக்க டிரம் பிரேக்குக்கும் திறன் செல்வதால், ஓட்டுநருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுகின்றன.

வேகம் பிடிக்கும் ஹீரோ!

முதல் தீர்ப்பு

நல்ல கட்டுமானத் தரத்துடன் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர்களும் போட்டியாளர்களுக்குக் கடும் சவால்களாக இருக்கும். 110 சிசி செக்மென்ட்டில் நம் நாட்டுக்கு என்ன தேவையோ, அதை இந்த இரு ஸ்கூட்டர்களும் அளிக்கின்றன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு