Published:Updated:

டமால் டுமீல் டுகாட்டி!

டெஸ்ட் ரிப்போர்ட் / டுகாட்டி மான்ஸ்டர் 821தொகுப்பு: ராகுல் சிவகுரு

த்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம், மான்ஸ்டர் பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கி 22 ஆண்டுகள் ஆகின்றன. 1993-ல் முதன்முதலாக வெளிவந்த இந்த பைக்கின் உண்மையான பெயர் iL Monstoro M900. இத்தாலிய மொழியில் ‘தி மான்ஸ்டர்’ என்று பொருள். கால மாற்றத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ள மான்ஸ்டர், 1200R எனும் மாடலை சமீபத்தில் வெளியிட்டது. இது வரை தயாரிக்கப்பட்ட மான்ஸ்டர் வகை பைக்குகளிலேயே இதுதான் அதிக சக்திகொண்ட பைக். ஆனால், அது தயாரிப்பில் இறங்குவதற்குச் சில காலம் பிடிக்கும் என்பதால், இப்போதைக்கு அதன் தம்பியான மான்ஸ்டர் 821 மாடல்தான் சக்தி வாய்ந்த மான்ஸ்டர் பைக்காக இருக்கும்.

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

மற்ற மான்ஸ்டர் பைக்குகளைப் போலவே மிரட்டலான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது 821. பைக்கில் உள்ள மட்கார்டு மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட் பக்கா! முழுக்க டிஜிட்டலில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களைத் தெளிவாகத் தருகிறது. ஆனால், எரிபொருள் அளவைக் காட்டும் இண்டிகேட்டர் இல்லை என்பது அதிர்ச்சி. அகலமான ஹேண்டில்பார்கள் இருந்தாலும், அவை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இல்லாதது மைனஸ். கைப்பிடிகள், லீவர்கள், ஸ்விட்சுகளின் தரம் அருமை. 17.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், டிஸைன் சூப்பர். மேலும், இது கால் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. ஃபுட்ரெஸ்ட் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய இருக்கைகள், பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கின்றன.

டமால் டுமீல் டுகாட்டி!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

மான்ஸ்டர் பைக்குகளுக்கே உரித்தான ட்ரெல்லிஸ் ஃப்ரேமுக்குள், ‘எல்’ வடிவ, இரட்டை சிலிண்டர் கொண்ட 821 சிசி இன்ஜின் பொருத்தப் பட்டிருக்கிறது. இது, அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 110.5bhp பவரையும், 7,750ஆர்பிஎம்-ல் 9.1kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டுகாட்டி ஸ்பெஷல் (Desmodromic) வால்வு சிஸ்டம் காரணமாக, பவர் டெலிவரி அட்ட காசமாக இருக்கிறது. லைட்டான கிளட்ச், 6 கியர்களையும் ஸ்மூத் ஆக மாற்றுவதற்குத் துணை புரிகிறது. 5,000 ஆர்பிஎம் தாண்டியவுடன், விருட்டென அசுர வேகம் பிடிக்கிறது மான்ஸ்டர் 821. கண்ணிமைக்கும் நேரத்தில், இன்ஜின் தனது அதிகபட்ச சுழற்சியான 10,500 ஆர்பிஎம்மை எட்டிப் பிடிக்கிறது.

டமால் டுமீல் டுகாட்டி!

பைக்கின் பவரைக் கட்டுப்படுத்தக்கூடிய 3 ரைடிங் மோடுகள், ஓட்டுநரின் வசதிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அர்பன் மோடு, பைக்கின் பவரை 75bhp என குறைத்துவிடுவதோடு, ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றின் குறுக்கீடு அதிகமாக இருக்கும் வகையில் ட்யூன் செய்துகொள்கிறது. டூரிங் மோடு, பைக்கின் ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் குறுக்கீடும் இன்ஜின் பவர் நிதானமாகவும் வெளிப்படும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட் மோடு, பைக்கின் பாதுகாப்பு வசதிகளை ஆஃப் செய்வதுடன், பைக்கின் 110.4bhp பவர் முழுவதும் நேரடியாகக் கிடைக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது.

டமால் டுமீல் டுகாட்டி!

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

பைக்கின் சீட் மற்றும் ஹேண்டில்பார், நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறது. முன்பக்கம் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டிருக்கிறது மான்ஸ்டர் 821. இது பலவிதமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. மேலும், அதிக வேகங்களில் பைக்கின் ஸ்டெபிலிட்டி சிறப்பாக இருக்கிறது. இதற்கு பைக்கில் உள்ள 17 இன்ச் பைரலி டயர்கள் கொடுக்கும் ரோடு கிரிப்பும் ஒரு காரணம். முன்பக்கம் இரட்டை 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் 245 மிமீ டிஸ்க் பிரேக்குடன், 3 மோடுகள் கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பதால், பிரேக்கிங்கைக் குறை

டமால் டுமீல் டுகாட்டி!

சொல்ல முடியாது. தங்க நிறத்தில் உள்ள எக்ஸாஸ்ட் பைப், அதில் இருந்து வெளிப்படும் உறுமல் சத்தம், அசத்தல் ரகம்.

பைக்கில் உள்ள ஒரே குறை, இன்ஜின் சூடுதான். ஏனெனில், சில சமயங்களில் அவை ஓட்டுநரின் கால்களைப் பதம் பார்க்கின்றன. மற்றபடி மிரட்டலான தோற்றம், அசத்தலான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், சிறப்பான கையாளுமை, ஓட்டுநரின் பாதுகாப்புக்காக ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் என பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் பைக்கில் அதிகமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் இந்த பைக், கொடுக்கும் விலைக்கு மதிப்பான பைக்காகவே இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு