பிரீமியம் ஸ்டோரி

ந்துவிட்டது மழைக்காலம். மழை நீர், சேறு, மேடு பள்ளம் என வாகன உரிமையாளர்கள் தத்தளித்துத் தவிக்கும் காலம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால், மழையைச் சபிக்காமல் ரசிக்க முடியும்!

கார் வைத்திருப்பவர்களிடம் கைவசம் அவசியம் இருக்க வேண்டியவை எக்ஸ்ட்ரா ஹெட்லைட் பல்புகள், ஃப்யூஸ், ஃபேன் பெல்ட், டார்ச் லைட், குடை, காட்டன் டவல், சுத்தியல்.
* வீலுக்கு மேல் தண்ணீர் இருந்தால், அந்தச் சாலையைத் தவிர்த்துவிடுவது நல்லது. தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள சாலையில் பயணிக்க நேர்ந்தால் முதல் கியரில், தொடர்ந்து ஆக்ஸிலரேட்டர் கொடுத்துக்கொண்டே மெதுவாகச் செல்லுங்கள்.

* தண்ணீரின் அளவு அதிகரித்து, தண்ணீருக்குள் இருக்கும்போதே கார் ஆஃப் ஆகிவிட்டால் மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யாதீர்கள். அப்படி ரீ-ஸ்டார்ட் செய்தால், இன்ஜினின் கனெக்டிங் ராடுகளில் பாதிப்பு ஏற்படும். இது மிகப் பெரிய செலவு வைக்கும் வேலையாகிவிடும். அதனால், உடனடியாக இறங்கி, காரைத் தள்ளிக்கொண்டே மழை நீர் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிட்டு சர்வீஸ் சென்டருக்குத் தகவல் சொல்லுங்கள். 

மழை, நல்லது!

*அதிக தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டீர்கள். கதவைத் திறந்தால், தண்ணீர் காருக்குள் வந்துவிடும் என்கிற நிலையில், பின்பக்க கதவுக் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்துவிடுங்கள். பவர் விண்டோஸ் பட்டன்களை இயக்க வேண்டாம். ஷார்ட் சர்க்யூட் ஆகலாம்.

* மழை நேரத்தில் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் மழை நீர் தெளித்து பார்வையை மங்கலாக்கிவிடும். சீரான இடைவெளிகளில் காரை நிறுத்தி காட்டன் டவல் மூலம் கண்ணாடிகளைத் துடைத்த பிறகு பயணத்தைத் தொடருங்கள்.

* மழைக் காலத்தில் காரையும், காருக்குள் பயணிப்பவர்களையும்  காப்பாற்றுவது டயர். டயர்களில் த்ரெட் 2 மிமீ-க்கு அதிகமாக இருக்க வேண்டும். மழைக் காலத்தில் டயர்களுக்கும், சாலைக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பதை ‘அக்வாபிளானிங்’ என்று சொல்வார்கள். இதன்படி டயருக்கும் சாலைக்குமான இடைவெளி குறைவாக இருந்தால் உராய்வு குறைந்து டயர் வழுக்கும். இதனால் மோசமான விபத்துகள் ஏற்படும். அதனால், எப்போதுமே மழை நேரத்தில் வேகத்தைக் குறைத்துவிடுவது பாதுகாப்பானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு