ஸ்ப்ளெண்டரின் புதிய உருவம்!

அறிமுகப்படுத்தப்பட்ட 1994-ம் ஆண்டில் இருந்து இதுவரை 2.5 கோடி ஸ்ப்ளெண்டர் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப். இப்போது, ஸ்ப்ளெண்டர் ப்ரோவின் தோற்றத்தை முற்றிலுமாக மேம்படுத்தி வெளியிட்டிருக்கிறது ஹீரோ. ஆனால், பைக்கின் அடிப்படைப் பாகங்களான சேஸி, சஸ்பென்ஷன், டயர்கள், இன்ஜின் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மோட்டார் நியூஸ்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 97.2சிசி இன்ஜின், 8.36bhp@8,000rpm பவரையும், 0.85kgm@5,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. வழக்கம்போல 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2015 ஸ்ப்ளெண்டர் ப்ரோ, 8 கலர்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் வாரன்ட்டியுடனும் கிடைக்கிறது. இண்டிகேட்டர்கள், ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், கிராபிக்ஸ், பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள்,  டெயில் லைட், கிராப் ரெயில், அகலமான சீட், எக்ஸாஸ்ட் ஆகியவற்றின் டிஸைன் முற்றிலும் புதியதாக இருக்கின்றன. இந்த பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 58,741 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஷைன் SP125 எப்படி?

மோட்டார் நியூஸ்

CBR 650F பைக்கை, REVFAST நிகழ்ச்சியில் ஹோண்டா அறிமுகப்படுத்திய போது, 125சிசி செக்மென்ட்டில் ஒரு புதிய பைக்கைக் கொண்டுவரப் போவவதாகக் கூறியது. தற்போது, ஷைன் SP125 என்ற பைக்கை, சொன்னபடியே களமிறக்கியுள்ளது ஹோண்டா. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஷைனுடன் ஒப்பிடும்போது, மாடர்ன் தோற்றத்தில் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் ஃபேரிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், புதிய 18 இன்ச் அலாய் வீல்கள், இரட்டை வண்ண பாடி பேனல்கள் என கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் 124.7 சிசி HET இன்ஜின், ஷைனைப் போலவே, 10.6bhp@7,500rpm பவர், 1.03kgm@5,500rpm டார்க், லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ் என்ற அளவில் செயல்திறனைக் கொண்டிருந்தாலும் முக்கிய மாற்றமாக, பின் சக்கரங்களுக்கு இன்ஜின் பவர் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் கடத்தப்படுகிறது. மேலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 160மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, ஷைன் SP125 பைக்கின் எடை, ஷைனைவிட 1 கிலோ குறைவு (124 கிலோ). ஆனால், சஸ்பென்ஷன், CBS 240 மிமீ டிஸ்க் - 130 மிமீ டிரம் பிரேக் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லை. 5 வண்ணங்களில், மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 59,900 முதல் 64,400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019-ல் BS-V மாசுக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது!

ஒரு வழியாக 2019-ம் ஆண்டில் இருந்து BS-V மாசுக் கட்டுப்பாடு விதியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. அதற்கு அடுத்து, 2023-ல் BS-VI விதிகள் இந்தியாவில் அமலாகும். இதனால், 2019 முதல் நாடு முழுவதும் BS-V விதிகளுக்கான எரிபொருள் தரம் மற்றும் விதிகளைப் பின்பற்ற இருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. Society of Indian Automobile Manufacturers (SIAM), மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

மோட்டார் நியூஸ்

நாடு முழுவதும் BS-IV விதிகளுக்கான எரிபொருள் தரத்தைப் பின்பற்றுவதற்கான காலக்கெடு, ஏப்ரல் 2017 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாடு விதிகள், ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. தற்போது BS-V மாசுக் கட்டுப்பாடு விதிகள் மேலும் தாமதமாக அமலுக்கு வருவதால், இந்த இடைவெளி கணிசமாக உயரும். ஏற்கெனவே BS-V விதிகளை ஒதுக்கிவிட்டு, நேரடியாக BS-VI விதிகளைப் பின்பற்ற நிர்ப்பந்திப்பதற்கு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் வருகிறது வெர்சிஸ் 650!

மோட்டார் நியூஸ்

கவாஸாகி நிறுவனம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலைகொண்ட பைக் மார்க்கெட்டில் வெள்ளை, கறுப்பு, பச்சை நிறங்களில் ‘வெர்சிஸ் 650’ என்ற அட்வென்ச்சர் பைக்கை  விரைவில்் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கின் தோற்றம், வெர்சிஸ் 1000 போல இருந்தாலும் உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள், அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன் மற்றும் லீவர்கள், சொகுசான இருக்கைகள், இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், 70bhp பவரை வெளிப்படுத்தும் 2 சிலிண்டர் 649சிசி லிக்விட் கூல்டு FI இன்ஜின், வெர்சிஸ் 650 பைக்கில் பொருத்தப்பட இருக்கி்றது. மேலும், அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ், ஆஃப் செட் மோனோஷாக், அலாய் ஸ்விங் ஆர்ம், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் (முன்பக்கம் 2 - பின்பக்கம் 1) என அதிக வசதிகளை எதிர்பார்க்கலாம்.

மிலன் மோட்டார் ஷோவில் அசத்திய பைக்குகள்!

மோட்டார் நியூஸ்

உலக அளவில், பைக் ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்ற EICMA மோட்டார் ஷோ, இத்தாலியில் உள்ள மிலன் நகரில், நவம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. பெனெல்லி, யமஹா, சுஸூகி, ஹோண்டா, டுகாட்டி, பிஎம்டபிள்யூ, கேடிஎம், ட்ரையம்ப், ஹாய்ஸங், கவாஸாகி போன்ற பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் புதிய தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்தன. இதில், இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் பைக்குகளும் அடக்கம். அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பெனெல்லி டொர்னாடோ 302, ட்ரெக் 502, யமஹா MT-03, டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் Sixty2, பிஎம்டபிள்யூ G310R, கேடிஎம் RC390, ஹாய்ஸங் GT300R, ஹாய்ஸங் Aquila 300, ஹோண்டா CB400R என பட்டியல் நீள்கிறது. இவை அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்விஃப்ட்,  டிஸையரில் கூடுதல் பாதுகாப்பு!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸூகி, மக்களிடையே பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் விழிப்புஉணர்வைக் கருத்தில்கொண்டு, தனது ஸ்விஃப்ட் மற்றும் ஸ்விஃப்ட் டிஸையர் கார்களின் வேரியன்ட்டுகள் அனைத்திலும், ஏபிஎஸ் மற்றும் 2 காற்றுப் பைகளை ஆப்ஷனலாகக் கிடைக்க வழி செய்துள்ளது. ஸ்விஃப்ட் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த காரின் பலமான ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், கையாளுமை ஆகியவற்றோடு தற்போது பாதுகாப்பும் இணைந்துள்ளது.

Pininfarina-வை வாங்குகிறது மஹிந்திரா!

மோட்டார் நியூஸ்

எஸ்யுவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் மஹிந்திரா நிறுவனம், இத்தாலிய கார் டிஸைன் நிறுவனமான Pininfarina-வை வாங்க இருக்கிறது. சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த பின்இன்ஃப்ரினா (Pininfarina) கடன் சுமை அதிகரித்த நிலையில்தான், அதன் முக்கிய பங்குதாரர் ஆன Pincar-ன் ஒப்புதலோடு, இந்த நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ளது. 1930-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல், ஃபெராரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கார்கள், இவர்களால் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மஸராட்டி, ஆல்ஃபா ரோமியோ, ரோல்ஸ்ராய்ஸ், லான்சியா போன்ற பல நிறுவனங்கள் தயாரித்த கார்களின் டிஸைனை இந்த நிறுவனமே தீர்மானித்துள்ளது. பின்இன்ஃப்ரினாவின் நிறுவனர் 2012-ல் மறைந்தபோது, தங்களின் 60 ஆண்டு கால உறவை நினைவு கூறும் வகையில், 458 ஸ்பைடர் மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு, ‘சர்ஜியோ பின்இன்ஃப்ரினா’ என்று அவரது பெயரை சூட்டி மரியாதை செய்தது ஃபெராரி. அதனை ஜெனிவாவில், 2013 மற்றும் 2015-ல் நடந்த மோட்டார் ஷோவில் காட்சிக்கும் வைத்தது. 

மோட்டார் நியூஸ்


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு