Published:Updated:

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

ஜெயிக்கப் போவது யாரு?போட்டி: மாருதி செலெரியோ Vs டாடா ஸீகா (டீசல்)தொகுப்பு: பி.ஆரோக்கியவேல்

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

ஜெயிக்கப் போவது யாரு?போட்டி: மாருதி செலெரியோ Vs டாடா ஸீகா (டீசல்)தொகுப்பு: பி.ஆரோக்கியவேல்

Published:Updated:

மாருதி செலெரியோ டீசலைக் குறி வைத்துத்தான், ஸீகா டீசல் காரை டாடா அறிமுகப்படுத்தி இருக்கிறது. ‘இந்த இரண்டு காம்பேக்ட் ஹேட்ச்பேக் டீசல் கார்களில் எது பெஸ்ட்?  டீசல் கார்களை டெல்லியில் விற்பனை செய்யக் கூடாது என்ற தீர்ப்பு நாடெங்கும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போது, இந்த ஒப்பீடு அவசியம்தானா என்று யாரும் கேட்க முடியாது. காரணம், நீதிமன்றம் குறிப்பிடுவது 2,000 சிசிக்கும் அதிகமான டீசல் இன்ஜின்களைப் பற்றித்தான். ஆனால், நாம் ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் மாருதி செலெரியோவின் டீசல் இன்ஜின்தான், நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் டீசல் இன்ஜின்களிலேயே மிகவும் சிறியது. ஆம், செலெரியோவை இயக்குவது லிட்டருக்கு 27.62 கி.மீ (ARAI) மைலேஜ் கொடுக்கும் 793 சிசி டீசல் இன்ஜின். அதேபோல, டாடா ஸீகாவில் இருப்பதும் சுமார் 25 கி.மீ மைலேஜ் கொடுக்கும் 1.05லி டீசல் இன்ஜின். ‘மாதந்தோறும் என்னால் எரிபொருளுக்காக அதிகமாகச் செலவு செய்ய முடியாது!’ என்று சொல்லும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்துதான், இந்த இரண்டு கார்களுமே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

டிஸைன் மற்றும் தோற்றம்

மாருதி செலெரியோவை விட, பார்வைக்கு எடுப் பாகவும் ஃப்ரஷ்ஷாகவும் புதுமையாகவும் இருப்பது, டாடா ஸீகாதான். இதன் உள்ளலங்காரத்துக்கும் இது பொருந்தும். ஸீகாவின் சீட் ஃபேப்ரிக், ரூஃப் லைனிங், டேஷ்போர்ட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம் ஆகிய எல்லாமே பிரீமியம் கார்களோடு ஒப்பிடும் அளவுக்கு உள்ளன. டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பார்த்தால், சாலை தெளிவாகத் தெரிகிறது. பாட்டில், கப், போன், ஐபேட் போன்றவற்றை வைப்பதற்காகவே ஸீகாவில் 22 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டோரேஜ் விஷயத்தில் டாடா ஸீகாவுக்கு மாருதி செலெரியோ ஈடுகொடுக்கிறது. ஆனால், டிஸைன் மற்றும் டிஸைனுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவற்றில், இரண்டு படி குறைவாகவே இருக்கிறது.

ஆனால், மாருதி செலெரியோவிலும் குறிப்பிட்டுச் சொல்ல, இரட்டை வண்ண டேஷ்போர்டும் தாராள வசதியும் கொண்ட இருக்கைகள் இருக்கின்றன. ஜன்னல்கள் பெரிதாகவும் சரியான இடத்திலும் இருப்பதால், கேபின் விசாலமாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது. ஸீகாவைவிடவும் செலெரியோவின் பின்னிருக்கைகள், அதிக ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உடன் இருக்கின்றன. டாடா ஸீகாவில் டெட் பெடல் கொடுக்கப்பட்டிருப்பதை டிரைவர்கள் விரும்புவார்கள் என்றாலும், தொடைகளுக்குப் போதுமான சப்போர்ட் இல்லாமல் இருப்பது, நீண்ட தூரப் பயணங்களின்போது குறையாக வெளிப்படலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!
மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!
மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

சிறப்பம்சங்கள்

பவர் விண்டோஸ், டிரைவர் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்ஸ், ஸ்டீயரிங் வீலிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் ஆடியோ கன்ட்ரோல், யுஎஸ்பி ஆக்ஸ்-இன், ப்ளூ--டூத் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளும் ஆடியோ சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்கள் எல்லாம், இரண்டு கார்களின் டாப் வேரியன்ட்டிலும் இருக்கின்றன. ஆனால், ஸீகாவில் 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்ஸ் கொண்ட ஹர்மான் மியூஸிக் சிஸ்டம், ஸ்மார்ட் போனை மியூஸிக் சிஸ்டத்துடன் இணைத்துக்கொள்ளக்கூடிய வசதி, குளிர்பதன வசதிகொண்ட க்ளோவ்பாக்ஸ் ஆகியவை கூடுதலாக இருக்கின்றன.

இன்ஜின்

சின்ன இன்ஜினாக இருந்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், மாருதி செலெரியோவில் இருக்கும் 2 சிலிண்டர்கள் கொண்ட 0.8 லிட்டர் டீசல் இன்ஜின், 12.7 kgmடார்க்கை வெளிப்படுத்தினாலும் அது வெறும் 47bhp சக்தியை மட்டுமே வெளிப் படுத்துகிறது. ஆனால், இதுவே டாடா ஸீகாவின் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.05 லிட்டர் டீசல் இன்ஜின், 69bhp சக்தியையும் 14.2kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!
மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

0-100 கி.மீ வேகத்தை எட்ட செலெரியோ 22.66 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், அதுவே இதே வேகத்தை எட்ட ஸீகா எடுத்துக்கொள்வதோ, வெறும் 17.52 விநாடிகள் மட்டுமே! அதேபோல, செலெரியோவின் டாப் ஸ்பீடு 138 கி.மீ. ஆனால், ஸீகாவின் டாப் ஸ்பீ்டு மணிக்கு 161 கி.மீ.

அதற்காக செலெரியோவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. அது, ஸீகாவைவிடவும் 180 கிலோ எடை குறைவு என்பதால், டார்க் டு வெயிட் ரேஷியோ அதற்குச் சாதகமாக இருக்கிறது. அதனால், சரியான கியரில் சரியான வேகத்தில் போகும்போது, டாடா ஸீகாவைவிடவும் (சிட்டி செட்டிங்கில்) சுறுசுறுப்பாக இருக்கிறது.

அதேசமயம், செலெரியோவின் இன்ஜின் ஸீகாவைவிட அதிகமாகச் சத்தம் போடுகிறது. அதேபோல் மேடு பள்ளமான சாலைகளில் பயணிக்கும்போது, ஸீகா அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு, செலெரியோ உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஸ்டீயரிங் விஷயத்திலும் செலெரியோவைவிட ஸீகா இரண்டு படிகள் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறது. காரணம், குறைவான

மாருதிக்கும் டாடாவுக்கும் சண்டை!

வேகங்களில் செல்லும்போது செலெரியோவின் ஸ்டீயரிங் கனமாக இருக்கிறது.

நல்ல மைலேஜ். குறைவான பராமரிப்புச் செலவு போன்ற காரணங்களால், செலெரியோதான் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் காராக இருக்க வேண்டும். ஆனால், அப்படி அதற்கு ஓர் அபரிமிதமான டிமாண்ட் இல்லை. காரணம், அதன் சத்தமான இன்ஜின். அடுத்ததாக, நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு இது ஏற்ற காராக இருந்தாலும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது டல் அடிக்கிறது. ஸீகாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், புதுமையான டிஸைன், அசத்தலாக இருக்கும் தரமான உள்ளலங்காரம், ஏராளமான சிறப்பம்சங்கள் ஆகியவை இதற்குச் சாதகமாக இருக்கின்றன. ஸீகாவை ஓட்டுவதற்கும் அதன் இன்ஜினில் போதுமான ‘பெப்’ இல்லை என்றாலும், ஒட்டுமொத்த ஓட்டுதல் அனுபவம் ஸீகாவுக்குச் சாதகமாகவே இருக்கிறது.