Published:Updated:

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

போட்டி: வால்வோ V40 Vs பென்ஸ் A க்ளாஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

போட்டி: வால்வோ V40 Vs பென்ஸ் A க்ளாஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:

க்ஸூரி ஹேட்ச்பேக்குகளில் ஸ்டைலான கார் எனப் பெயர் பெற்றது, மெர்சிடீஸ் பென்ஸ் A-க்ளாஸ். தற்போது வந்துள்ள பேஸ்லிஃப்ட் மாடல், கூடுதல் பொலிவு பெற்றிருக்கிறது. கார் வெளியானது முதல் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது வால்வோ V40. இந்த இரு கார்களில் மனதுக்கும் அறிவுக்கும் பிடித்த கார் எது?

டிஸைன்

2013-ல் அறிமுகமான A-க்ளாஸ், இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஷன், அதிக பவரை வெளிப்படுத்தும் டீசல் இன்ஜின் என இருமுறை மெக்கானிக்கலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இந்த முறை காரின் தோற்றத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளது பென்ஸ். முழுக்க LED பொருத்தப்பட்ட ஹெட்லைட்ஸ் - டெயில் லைட்ஸ், புதிய முன்-பின் பம்பர்கள், A200CDI என்பதற்குப் பதிலாக, A200d என இன்ஜின் ஆப்ஷனின் பெயர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஓட்டுதல் தரத்தை மேம்படுத்துவதற்காக, 16 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாகவும்... 17, 18 இன்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனலாகவும் அளிக்கப்படுகின்றன. 205/55 R16 டயர்கள், பார்க்கச் சிறிதாக இருப்பதால், அலாய் வீல்களுக்குக் கறுப்பு நிறம் பூசி, அந்த எண்ணம் எழாமல் பார்த்துக்கொள்கிறது பென்ஸ். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பச்சை நிறம், காரின் ஸ்போர்ட்டியான யூத்ஃபுல் டிஸைனுடன் அழகாக இணைந்துள்ளது.

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

க்ராஸ் கன்ட்ரி மூலமாகவே வால்வோ V40 காரின் ஸ்டைல் நமக்குப் பழக்கம் என்றாலும், நீல நிறத்தில் இருக்கும் V40 ஹேட்ச்பேக் கார்ப்பரேட் ஸ்டைலுடன் ஈர்க்கிறது. க்ராஸ்-ஓவர் மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, பாடி கிட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்களை ஹேட்ச்பேக்கில் பொருத்தியுள்ளது வால்வோ. V40 காரின் டிஸைன், பென்ஸ் அளவுக்கு ஆர்ப்பாட்டமாக இல்லாவிட்டாலும், காரின் பின்பக்கத்தில் இருக்கும் கறுப்பு வண்ண டெயில்கேட், டெயில் லைட்ஸ், பம்பரில் உள்ள DIFFUSER ஆகியவற்றின் வடிவமைப்பு அசத்தல் ரகம்.

இன்டீரியர் மற்றும் சிறப்பம்சங்கள்

கறுப்பு வண்ண டேஷ்போர்டு என்பது மட்டும்தான் இங்குள்ள இரு கார்களுக்கும் பொதுவானவை. மற்றபடி வெளிப்புறத் தோற்றம் போலவே, உள்பக்கத் தோற்றத்திலும் இரண்டும் வெவ்வேறு துருவங்கள். ஃபேப்ரிக் - லெதர் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இருக்கைகள் மற்றும் டோர் பேட், தொடுவதற்கு மென்மையான மெட்டீரியல்களால் ஆன டேஷ்போர்டு, AMG கார்களில் இருப்பது போன்ற ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், 7 இன்ச் Comand டச் ஸ்கிரீன் என A-க்ளாஸ் காரின் கேபினைத் தரமாகச் செதுக்கியிருக்கிறது பென்ஸ்.

வால்வோ கார்களுக்குப் பொதுவான Floating சென்டர் கன்ஸோல், க்ரோம் வேலைப்பாடுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் என நன்றாக இருந்தாலும் V40-ன் கேபின் தரம், பென்ஸ் அளவுக்கு இல்லை. இதன் சென்டர் கன்ஸோல் மேலே இருக்கும் ஸ்க்ரீன் சிறிதாக இருப்பதுடன், பயன்படுத்த வசதியாகவும் இல்லை. இங்கு டெஸ்ட் செய்யப்பட்டிருக்கும் கார்கள் டாப் வேரியன்ட் என்பதால், சிறப்பம்சங்களுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், சில வசதிக் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, V40 காரில் பார்க்கிங் சென்ஸார்கள் உள்ளன; ரிவர்ஸ் கேமரா இல்லை. A-க்ளாஸில் ரிவர்ஸ் கேமரா உண்டு; பார்க்கிங் சென்ஸார்கள் இல்லை. V40-ல் பேடில் ஷிஃப்ட் இல்லை; A-க்ளாஸில் மேனுவல் ஏ.சிதான். அதற்குப் பதிலாக பல்வேறு டிரைவிங் மோடுகளை வழங்கியுள்ளது பென்ஸ். V40 காரில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் உடன் ஸ்போர்ட்ஸ் மோடு மட்டுமே உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?
ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?
ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

இடவசதி

இரண்டு கார்களுமே அளவில் சின்ன ஹேட்ச்பேக் கார்கள் என்பதால், அதிக இடவசதியை எதிர்பார்க்க முடியாது. அதனால், நான்கு பேர் உட்காரத்தான் காரில் இடம் இருக்கிறது. ஹெட்ரூம் குறைவாக இருந்தாலும், லெக்ரூம் போதுமானதாக இருக்கிறது. மேலும், பெரிய ரியர்வியூ மிரர்கள் மற்றும் பின்பக்கக் கண்ணாடி வடிவமைப்பு காரணமாக, V40 காரை ரிவர்ஸ் எடுப்பது, பென்ஸைவிட எளிதாக இருக்கிறது. A-க்ளாஸின் முன்பக்க இருக்கைகள் தாழ்வாக இருந்தாலும், உட்காருபவர்களுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், ஓட்டுநர் இருக்கைக்கு மட்டும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் கொடுத்திருப்பது நெருடல். வால்வோவின் முன்பக்க இருக்கைகள் இரண்டையுமே எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்ய முடியும். தவிர, அவை பெரிதாக இருப்பதால் உயரமாக, பருமனாக இருப்பவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், பென்ஸைவிட வால்வோவின் இருக்கைகள் சொகுசாக உள்ளன. டிக்கியைப் பொறுத்தவரை, V40 காரின் அகலம் கைகொடுப்பதால், பூட் பெரிதாக இருக்கிறது. A-க்ளாஸில் காருடைய ஸ்பேர் வீல், பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதால், பூட் சிறிதாக இருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

லக்ஸூரி ஹேட்ச்பேக்குகளின் பெர்ஃபாமென்ஸும் சிறப்பாக இருப்பது அவசியம். 180CDI என்ற 2,143 சிசி, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் முதலில் வெளிவந்த A-க்ளாஸ், போட்டியாளர்களைவிட குறைவான பவர் மற்றும் டார்க்கை [107.3bhp-25.5kgm] வெளிப்படுத்தியது மைனஸாக அமைந்தது. இதை உணர்ந்த பென்ஸ், உடனடியாக இன்ஜின் பவர், டார்க்கை அதிகரித்து [134bhp-30.59kgm], 200CDI எனப் பெயர் சூட்டியது. V40 காரில், பென்ஸைவிட அதிகமான 148bhp பவர் 35.7kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1,984 சிசி, 5 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், A-க்ளாஸின் இன்ஜின் பவரைச் சீராக வெளிப்படுவதால், கார் பவர்ஃபுல்லாகத் தெரிகிறது. ஆரம்ப வேகங்களில் ஸ்மூத்தாக இருக்கும் பென்ஸ் இன்ஜின், அதிக வேகத்தை எட்டும்போது சத்தம் போடுகிறது. வால்வோவின் இன்ஜினும் சத்தம் போடுகிறது என்றாலும், அது ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. டர்போ லேக் அதிகம் என்பதால், பவர் மொத்தமும் சடாரென வெளிப்படுவது த்ரில்லிங்காக இருந்தாலும், நகரத்தில் காரை ஓட்டுவது எரிச்சலாக அனுபவமாக இருக்கும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு, மிகவும் சுமார். இதனால் அதிக பவர் கொண்டிருந்தாலும், V40 காரின் 0 - 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கான நேரம், பென்ஸ் போலவே இருக்கிறது.

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?
ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?
ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் குறைக்கப்பட்ட வீல் அளவுகள் [HIGH PROFILE] மூலமாக, A-க்ளாஸின் மோசமான ஓட்டுதல் தரத்தை, இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி அற்புதமாக மாற்றியமைத்திருக்கிறது பென்ஸ். சஸ்பென்ஷன் இறுக்கமாக இருந்தாலும், நிலையற்ற சாலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளை டயர்கள் உள்வாங்கிக்கொள்கின்றன. ஆனால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது, கார் சற்று ஆட்டம் போடுகிறது. இதனை மறக்கடிக்கும் வகையில், கையாளுமை துல்லியமாக இருக்கிறது. எடை குறைவான ஸ்டீயரிங் காரணமாக, V40 காரை திருப்பங்களில் வேகமாகச் செலுத்தும்போது பாடி ரோல் ஆகிறது. இந்த நேரத்தில் ஸ்டீயரிங் செயல்பாடு துல்லியமாக இல்லாதது மைனஸ். வால்வோவில் மென்மையான சஸ்பென்ஷன் இருப்பதால், ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இதன் லோ ப்ரொஃபைல் டயர்கள், நிலையற்ற

ஹை-கிளாஸ் ஹேட்ச்பேக்...எது பெஸ்ட்?

சாலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளை காருக்குக் கடத்துகின்றன.

இரு கார்களின் விலையும் கிட்டதட்ட ஓரே அளவில் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வால்வோ V40 காரின் சென்னை ஆன் ரோடு விலை, 34.20 லட்சம் ரூபாய். மெர்சிடீஸ் பென்ஸ் A-க்ளாஸின் சென்னை ஆன் ரோடு விலை, 35.21 லட்சம் ரூபாய். இடவசதி, சொகுசு, பூட் ஸ்பேஸ், நீட்டான டிஸைன், கட்டுமானத் தரம் என பிராக்டிக்கலாக சிறந்து விளங்கும் வால்வோ, டர்போ லேக் இன்ஜின் - சுமாரான கியர்பாக்ஸ் மற்றும் கையாளுமை போன்றவற்றில் தவறிவிடுகிறது. வால்வோவுக்கு அப்படியே நேரெதிராக இருக்கிறது பென்ஸ். சிறப்பம்சங்கள், இடவசதி, பூட் ஸ்பேஸ் ஆகியவற்றில் கோட்டைவிட்டாலும், துல்லியமான கையாளுமை, அட்டகாசமான டிஸைன், ஸ்டைலான இன்டீரியர் மற்றும் தரம், இன்ஜின்-கியர்பாக்ஸ் கூட்டணி என இந்த வகை காரை வாங்கத் தூண்டுவதற்கான அம்சங்கள் A-க்ளாஸில் அதிகமாக இருப்பதால், மெர்சிடீஸ் பென்ஸை வெற்றியாளராக மாற்றுகிறது.