Published:Updated:

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

ரோடு டெஸ்ட்: ரெனோ க்விட்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

ரோடு டெஸ்ட்: ரெனோ க்விட்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

ந்தியாவின் ‘மாஸ்’ செக்மென்ட்டில் மாருதியை வீழ்த்தி, ‘பாஸ்’ ஆக க்விட் காருடன் களமிறங்கியுள்ளது ரெனோ. க்விட், நம் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா?

டிஸைன்,  இன்ஜினீயரிங்

க்விட் களமிறங்கியுள்ள செக்மென்ட்டில் யதார்த்தமும், விலையும் மட்டுமே ஒரு காரின் வெற்றியை நிர்ணயம் செய்யும். ஆனால், ஒரு க்ராஸ்-ஓவர் கார் போன்று க்விட்டை டிஸைன் செய்து ஃபார்முலாவையே மாற்றிவிட்டது ரெனோ. உயரமான பானெட், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என பெரிய காராக இருக்கிறது க்விட். இவ்வளவு பெரிய தோற்றத்துக்கு 13 இன்ச் வீல்கள்தான் பார்க்கப் பொருத்தமாக இல்லை.

காரின் முன்பக்க கிரில்லில் ரெனோ லோகோ அழகாகப் பொருந்தியிருக்கிறது. பக்கவாட்டில் உள்ள கிளாடிங்குகள் காருக்குக் கொஞ்சம் முரட்டுத்தனத்தைச் சேர்க்கின்றன. பின் பக்க டிஸைன், முன் பக்கம் அளவுக்கு அழகாக இல்லை. தோற்றத்தில் உயர்தரத்தை வெற்றிகரமாகக் கொண்டுவந்துவிட்டது ரெனோ. அதற்கேற்றதுபோல், நிறைய அம்சங்களில் சிக்கனமும் காட்டியுள்ளது. சிங்கிள் வைப்பர், மூன்று வீல் நட்டுகள், உள்ளேயிருந்து அட்ஜஸ்ட் செய்ய முடியாத ரியர் வியூ மிரர்கள் போன்றவை சில உதாரணங்கள்.

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

இந்தியாவிலேயே எடை குறைந்த கார் க்விட்தான். வெறும் 669 கிலோ என்பது, காரின் கதவைச் சாத்தும்போதே தெரிகிறது. இந்த விஷயம்தான் க்ராஷ் டெஸ்ட்டை நினைவூட்டுகிறது. ரெனோ - நிஸான் கூட்டுத் தயாரிப்பான டட்ஸன் கோ, EURO NCAP டெஸ்ட்களில் சொதப்பிய நிலையில், ‘க்விட், இந்தியச் சட்டங்கள் சொல்கிற சட்ட திட்டபடி உற்பத்தி செய்யப்படும்’ என்கிறது ரெனோ. இந்தியாவில் க்ராஷ் டெஸ்ட் சட்ட திட்டங்கள் 2017-ம் ஆண்டுவாக்கில்தான் நடைமுறைக்கே வருகிறது.

உள்பக்கம்

க்விட் காரின் டாப் வேரியன்ட்டில் கண்ணில் படும் முதல் விஷயம், 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம்தான். இதைவிட இரண்டு மடங்கு விலை அதிகமான கார்களில் உள்ள வசதி இது. லாஜி, டஸ்ட்டர் கார்களில் உள்ள அதே சிஸ்டம்தான் இது. சாட்டிலைட் நேவிகேஷன், ப்ளூ-டூத், ஆக்ஸ்-இன், யுஎஸ்பி கனெக்டிவிட்டி உள்ளன. இந்த செக்மென்ட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் இதில்தான் உள்ளது. நான்கு ஏ.சி வென்ட்டுகளையும் வேண்டுமானால், ஒரே க்ளிக்கில் முழுதாக மூடிக் கொள்ளலாம்.

3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் தரமாக இருக்கிறது. இரண்டு க்ளோவ் பாக்ஸ்கள் உள்ளன. கியர் லீவருக்கு முன்பு இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன. முன்பக்கக் கதவுகள் இரண்டிலும் பாட்டில்கள் வைக்க முடியும்.

முன்னிருக்கைகள் எதிர்பார்த்ததைவிட பெரிதாக உள்ளன. சீட்டிங் பொசிஷன் கச்சிதமாக இருப்பதால், ஏறி இறங்குவது எளிது. பார்க்க பெரிய காராகத் தெரிந்தாலும், பின்னிருக்கைகளில் இடவசதி குறைவுதான். தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் இல்லை. ஆனால், ஹெட்ரூம் அதிகம். இங்கே மூன்று பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியாது. இதற்குக் காரணம், டிக்கி இடவசதியை அதிகப்படுத்தியதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

உள்பக்கம் ஆங்காங்கே க்ரோம் பயன்படுத்தப்பட்டிருப்பது புத்துணர்ச்சியை அளிக்கிறது. கேபினில் ஆங்காங்கே ஸ்க்ரூக்கள் வெளியே தெரிகின்றன. டேக்கோ மீட்டர், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட், உள்ளிருந்து ரியர்வியூ மிரரை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பின்னிருக்கைகளுக்கு இனெர்ஷியா ரீல் சீட் பெல்ட்ஸ் போன்ற அம்சங்கள் இல்லை. காற்றுப் பை ஆப்ஷனல்!

இன்ஜின், கியர்பாக்ஸ்

க்விட் காரில் உள்ள புத்தம் புதிய ‘BR08’ இன்ஜின் சென்னையில் உருவான இன்ஜின். அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 3 சிலிண்டர் இன்ஜின் - எடை குறைவாகவும், தயாரிக்க குறைந்த செலவு மட்டுமே ஆகக்கூடிய கட்டுப்பாடுகளுடன் தயாரானது. உதாரணத்துக்கு, பிளாஸ்டிக் ஆயில் சம்பைச் சொல்லலாம். 5,678 ஆர்பிஎம்-ல் 53.2 bhp சக்தியை அளிக்கிறது. 4,386 ஆர்பிஎம்-ல் 7.34 kgm டார்க்கை அளிக்கிறது. டார்க்கில் 80 சதவிகிதம் 1,200 ஆர்பிஎம்-க்குக் கீழிருந்தே கிடைக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 16.93 விநாடிகள் ஆகின்றன. டாப் ஸ்பீடு மணிக்கு 147 கி.மீ.  இன்ஜினை ஆன் செய்தால் ஐடிலிங்கிலும் அதிர்வு அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் ரெவ் செய்தால், இந்த அதிர்வுகள் மறைந்துவிடுகின்றன. ஆனால், ஜாலியாக ரெவ் ஆகக்கூடிய இன்ஜின் இல்லை இது. பவர் டெலிவரியும் சீராக இல்லை. மிட்-ரேஞ்ச் பவர் டெலிவரி ரொம்பவே சுமார் ரகம். இதனால், டிராஃபிக்கில் அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டியிருக்கிறது. அதிக வேகங்களில் காருக்குள் இன்ஜின், கியர்பாக்ஸ் சத்தமும் கேட்கிறது. நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்யும்போது கியர் குறைத்தே ஆகவேண்டும்.

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

ஓட்டுதல் தரம், கையாளுமை

 க்விட் காரின் முன்பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்டுகள், பின்பக்கம் காயில் ஸ்ப்ரிங் மற்றும் டார்சன் பீமும் சஸ்பென்ஷனாக இயங்குகின்றன. ரெனோ கார்களுக்கே உரிய பக்குவமான ஓட்டுதல் தரம் இந்த காரில் உள்ளது. குறைந்த வேகங்களில் இறுக்கமாக இல்லாமலும், அதிக வேகங்களில் சாஃப்ட்டாக இல்லாமலும் கச்சிதமாக செட் செய்யப்பட்டுள்ளது சஸ்பென்ஷன். மோசமான சாலைகளைத் திறமையாகச் சமாளிக்கிறது. அதிக வேகங்களிலும் ஸ்டேபிளாகச் செல்கிறது.

கையாளுமைதான் ஏமாற்றம். உயரமான கார் என்பதால் பொறுத்துக்கொள்ளக்கூடிய பாடி ரோல் இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங்கில்தான் எந்த ஃபீட்பேக்கும் இல்லை. க்விட் காரின் விலை குறைந்த வேரியன்ட்டுகளில் ஸ்டீயரிங்குக்கு பவர்  அஸிஸ்டன்ஸ் கிடையாது. எனவே, எல்லா மாடல்களிலும் ஸ்டீயரிங் மிக எளிதாக செட் செய்யப்பட்டுள்ளது. சிட்டி டிராஃபிக்கில் இது ப்ளஸ் என்றாலும், கொஞ்சமாவது ஃபீட்பேக் வேண்டுமே! நெடுஞ்சாலையில் இந்த ஸ்டீயரிங் கடுப்பேற்றும்.

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

மைலேஜ்

க்விட் காரின் ARAI மைலேஜ் - லிட்டருக்கு 25.17 கி.மீ. நம் டெஸ்ட்டிங்கில் நகர எல்லைக்குள் லிட்டருக்கு 15.3 கி.மீ; நெடுஞ்சாலையில் 21.5 கி.மீ மைலேஜ் அளித்தது. க்விட்தான் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார். ஆனால், சின்ன 28 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொடுத்துவிட்டது ரெனோ. அதிகபட்சம் ஒரு ஃபுல் டேங்குக்கு சுமார் 515 கி.மீ செல்லலாம்.
இந்தியாவில் ரெனோ இன்னும் சின்ன நிறுவனம்தான். இப்போதைக்கு மாருதிக்கு நேரடிப் போட்டி

க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா க்விட்?

இல்லை. தயாரிப்பு, விற்பனை போன்ற விஷயங்களில் ஹூண்டாய்க்கும் பெரிய சவாலாக ரெனோ இல்லை. ஒரு செக்மென்ட் மேலே உள்ள கார் போன்ற உணர்வை அளித்தாலும், 3.28 முதல் 4.37 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது, நல்ல யுக்தி. விலை உயர்ந்த ஆல்ட்டோ 800 மாடலைவிட டச் ஸ்க்ரீன், காற்றுப் பை கொண்ட க்விட் மாடல் 20 ஆயிரம் ரூபாய்தான் அதிகம்.

மூன்று மாதங்களில் 75 ஆயிரம் முன்பதிவுகளைப் பெற்றுள்ளது க்விட். இன்ஜின் தரம் சுமார்தான். ஸ்டீயரிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். வசதிகள், இடம், யதார்த்தம் ஆகிய மூன்றில் நன்றாக ஸ்கோர் செய்துவிட்டது க்விட். வழக்கமான பட்ஜெட் கார் செக்மென்ட்டுக்கு ரெனோ க்விட் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. ஆம், நம் டெஸ்ட்டில் பாஸ் ஆகிவிட்டது க்விட்.