Published:Updated:

பவர் ரேஞ்சர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் இவோக் தொகுப்பு: ராகுல் சிவகுரு

பவர் ரேஞ்சர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் இவோக் தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:

மார்ச் 2015-ல் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட இவோக் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியது. தோற்றத்தில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன், முற்றிலும் புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அந்த காரில் பொருத்தப்பட்டது. மேலும், புனேவில் உள்ள தொழிற்சாலையில் கார் அசெம்பிள் செய்யப்படுவதால், அதன் விலையும் வேரியன்ட்டுக்கு ஏற்ப 6 முதல் 9 லட்சம் வரை குறைந்தது. சரியாக எட்டு மாத இடைவெளியில், மீண்டும் ஒரு ஃபேஸ்லிஃப்ட்டை இவோக் காருக்கு அளித்துள்ளது ஜாகுவார் லேண்ட்ரோவர்.
விலை அதிகமான ரேஞ்ச்ரோவர் கார்களில் இருக்கும் டிஸைன் கோட்பாடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், காரின் சைஸை மறந்துவிட்டுப் பார்த்தால், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் போலவே இருக்கிறது இவோக்.

பவர் ரேஞ்சர்!

காரின் புதிய ஆரஞ்சு நிறம் அட்டகாசம். ஆனால், 18 இன்ச் அலாய் வீலின் டிஸைன் மிகச் சுமார். காரின் பின்பக்கத்தில், மேம்படுத்தப்பட்ட டெயில் லைட்ஸ் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் கொண்ட மிரட்டல் பம்பர் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் உள்பக்கத்தில் கலர் ஆப்ஷன்கள் மட்டுமே மாறியுள்ளன. டேஷ்போர்டின் மேல்பகுதி தொடுவதற்கு மென்மையான லெதர் ஃபினிஷிலும், கீழ்ப்பகுதி தரமான பிளாஸ்டிக்கிலும் ரேஞ்ச்ரோவர் கார்களின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. 360 டிகிரி கேமரா, இன்டீரியர் லைட்டிங், HEADS UP டிஸ்ப்ளே, 17 ஸ்பீக்கர்கள், 825 வாட்
MERIDIAN ஆடியோ சிஸ்டம் என சிறப்பம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பவர் ரேஞ்சர்!

காரில் உள்ள டச் ஸ்கிரீன், பயன்படுத்த வசதியாக இல்லை. வேரியன்ட்டுகளின் எண்ணிக்கை நான்காக உயர்த்தப்பட்டுள்ளது. இவோக்கில் இருப்பது 188bhp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் SD4 டீசல் இன்ஜின். இதன் சிறப்பு என்றால், பவரை சீராக வெளிப்படுத்துவதுதான். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், அதிக மைலேஜுக்காக வடிவமைக்கப்பட்டது. அதனால், நெடுஞ்சாலையில் இன்ஜின் ரிலாக்ஸாக இயங்க துணை நிற்கிறது. ஆனால், ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களில் இருக்கும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்போல  ஸ்மூத்தாக இல்லை. ஸ்போர்ட்ஸ் மோடில் ஓட்டும்போது, செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. 2011-ல் வெளியான காருடன் ஒப்பிடும்போது, ஒரு முழுமையான எஸ்யுவியாக மாறியுள்ளது இவோக்.

பவர் ரேஞ்சர்!

இதே விலையில் கிடைக்கும் டிஸ்கவரி ஸ்போர்ட், ஏழு இருக்கைகள், லேட்டஸ்ட் தொழில்நுட்பம், ரிச் லுக் என கடும் போட்டியை ஏற்படுத்தினாலும், தனித்துவமான ஸ்டைலால் வெல்கிறது ரேஞ்ச்ரோவர் இவோக்!