Published:Updated:

மல்ட்டி க்ராஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி S-க்ராஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

மல்ட்டி க்ராஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி S-க்ராஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:

S-க்ராஸ் ஒரு சிறப்பான கார் என்றாலும், இதன் விலை காரின் விற்பனையைப் பாதித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.  1.3 லிட்டர் இன்ஜின் (DDIS 200) பொருத்தப்பட்ட S-க்ராஸின் விலை 1.6 லிட்டர் இன்ஜின் (DDIS 320) பொருத்தப்பட்ட S-க்ராஸின் விலையை விட 4 லட்ச ரூபாய் குறைவு. ஆனால், சிறப்பம்சங்கள் மற்றும் காரின் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

இங்கே நாம் டெஸ்ட் செய்திருக்கும் ALPHA 200 வேரியன்ட்டில், ALPHA 320 வேரியன்ட்டில் இருக்கும் அத்தனை வசதிகளையும் காண முடிகிறது. ஆனால், இன்ஜின் மாறியிருப்பதால், பவர் மற்றும் டார்க் அளவுகளில் ஏகப்பட்ட வித்தியாசம்.

மல்ட்டி க்ராஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் உள்ள 1,248 சிசி இன்ஜின், சியாஸ் மற்றும் எர்டிகாவைப் போலவே, 88.5bhp பவர், 20.4kgm டார்க் வெளிப்படுத்துகிறது. ஆனால், விலை அதிகமான 1,598 சிசி இன்ஜின்கொண்ட ALPHA 320 S-க்ராஸ், 118bhp பவரையும், 32.6kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

 பவர் 30bhp குறைவு என்பதால், 0-100 கி.மீ வேகத்தை, ALPHA 200 கார் 13.72 விநாடிகளில்தான் எட்டிப் பிடிக்கிறது. இது, ALPHA 320 வேரியன்ட்டைவிட 2 விநாடிகள் அதிகம். வேகம் அதிகமாக அதிகமாக, இரு கார்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகரத்தில் பயணிக்கும்போதும், நெடுஞ்சாலையில் ரிலாக்ஸாக காரை ஓட்டும்போதும், இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை.

மல்ட்டி க்ராஸ்!

பொதுவாகவே, ஃபியட் இன்ஜின்களின் ஆரம்ப வேகம் சிறப்பாக இருக்காது. 2,000 ஆர்பிஎம் தாண்டிய பிறகுதான் டர்போ சார்ஜர் இயங்க ஆரம்பிக்கும். அதனால், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் சூப்பராக இருக்கும். ALPHA 200 காரின் ஆரம்ப வேகம் நன்றாக இருக்கிறது. மிட் ரேஞ்ச் ALPHA 320போல அதிரடியாக இல்லாவிட்டாலும், போதுமானதாக இருக்கிறது. ALPHA 200 வேரியன்ட்டின் பவர் குறைவு என்றாலும், இருக்கின்ற பவரைச் சீராக வெளிப்படுத்துகிறது. ALPHA 320 வேரியன்ட்டில் உள்ள இன்ஜின், சடாரென மொத்த பவரையும் வெளிப்படுத்துவது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அதிக வேகத்தை எட்டும்போது, போட்டியாளர்களைவிட இந்த இன்ஜின் அதிகமாகச் சத்தம் போடுகிறது. மேலும், ALPHA 320 வேரியன்ட்டில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்க, ALPHA
200-ல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். மற்ற மாருதி டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, கிளட்ச் ஹெவியாக இருப்பதுடன், கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இல்லாதது ஏமாற்றமே! சஸ்பென்ஷன் இறுக்கமாக இருந்தாலும் ஓட்டுதல் தரம் நன்றாகவே இருக்கிறது.

காரைக் கையாள்வது நல்ல அனுபவம் என்றாலும், டல்லான ஸ்டீயரிங் அதனைக் குலைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ALPHA 200-ன் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, பவர்ஃபுல்லான ALPHA 320 காரைப் போலவே இருக்கிறது. இதனால், சரியான விலையில் போதுமான பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பம்சங்களை அளிக்கக்கூடிய S-க்ராஸ் ALPHA 200 காரை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும்!