Published:Updated:

ரியல் ஆஃப்ரேட்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோர்டு எண்டேவர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரியல் ஆஃப்ரேட்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோர்டு எண்டேவர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:

புதிய ஃபோர்டு எண்டேவரின் சைஸைப் பார்த்து விக்கித்து நின்றுவிட்டேன். இத்தனைக்கும் காரின் நீளம் 5 மீட்டருக்கும் குறைவு. ஆனால், உயரமான ஒரு நபர் காருக்கு முன்னே நின்றால், பானெட் அவரது மார்பை முட்டும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், காரின் பிரமாண்டத்தைக் கூட்டுகின்றன. தாய்லாந்தில் விற்பனையாகும் எண்டேவரில் 20 இன்ச் வீல்கள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு வரவிருக்கும் காரில், 18 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், வீலுக்கும் வீல் ஆர்ச்சுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பது, காரின் கம்பீரத்தைச் சற்று குறைத்துவிடுகிறது. பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய எண்டேவரின் பின்பக்கம், ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. அதாவது, பின்பக்கக் கதவில் இருக்க வேண்டிய ஸ்பேர் வீல், காருக்கு அடியில் சென்றுவிட்டது.

சிட்டி டிரைவிங்

காரின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங், குறைவான வேகங்களில் எடை குறைவாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கிறது. இதனால், காரை சடாரென எளிதாகத் திருப்ப முடிகிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பிரேக் பெடல், ஆக்ஸிலரேட்டர் பெடல் ஆகியவை பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. பழைய கார்போல, ஸ்பேர் வீல் கதவில் இல்லாததால், புதிய காரை ரிவர்ஸ் எடுப்பது எளிது. காரின் வேகத்தை அதிகரித்தபோது, ஸ்டீயரிங்கின் எடை கூடுவதை உணர முடிந்தது. இதனால், லேன் மாறுவது சுலபமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2.4 டன் எடை இருந்தாலும், காரைக் கையாள்வது ஸ்போர்ட்டியான அனுபவமாகவே இருக்கிறது.

ரியல் ஆஃப்ரேட்டர்!
ரியல் ஆஃப்ரேட்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சஸ்பென்ஷன்

உயரமான ஸ்ப்ரிங்குகள் மூலம், காரின் ஓட்டுதல் தரத்தை நன்றாக ட்யூன் செய்திருக்கிறது ஃபோர்டு. இதனால், சாலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், கார் அத்தனை இடர்பாடுகளையும் ஈஸியாகச் சமாளிக்கிறது. இந்த நேரங்களில் சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், எடை அதிகமான லேடர் ஃப்ரேம் சேஸி அமைப்பைக்கொண்டிருக்கும் எண்டேவருக்கு, இதுதான் சரியான சஸ்பென்ஷன் செட்-அப்.

 இன்ஜின்

கார் விற்பனைக்கு வரும்போது, 2.2 லிட்டர் 4 சிலிண்டர் மற்றும் 3.2 லிட்டர் 5 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இந்த இரண்டு இன்ஜின்களுமே வாகன நெரிசல்  மிகுந்த சாலையில் சிறப்பாகவே செயல்பட்டன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 4 சிலிண்டர் 2.2 லிட்டர் இன்ஜின், ஓட்டுநரின் கட்டளைக்கு ஏற்ப உடனடியாக இயங்குகிறது. காரின் எடையுடன் ஒப்பிடும்போது, இது வெளிப்படுத்தும் 38kgm டார்க் பெரிதாகத் தெரியாவிட்டாலும், ஆரம்ப வேகம் நன்றாக இருப்பதால், இது ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆனால், 3.2 லிட்டர் இன்ஜினின் ஆக்ஸிலரேட்டரை மிதித்தவுடன், கார் துள்ளிக்கொண்டு முன்னே செல்கிறது. இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கெடுத்துவிடுகிறது. டிரைவ் மோடில் வைத்து கியர்பாக்ஸைப் பயன்படுத்தும் போது, இன்ஜின் வேகத்தை அதிகரித்தால், அது உடனடியாக சக்கரங்களுக்குச் செல்ல மறுக்கிறது. ஆனால், மேனுவல் மோடில் வைத்து காரை ஓட்டும்போது, கியர்பாக்ஸின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது.

ரியல் ஆஃப்ரேட்டர்!
ரியல் ஆஃப்ரேட்டர்!

ஹைவே டிரைவிங்

நெடுஞ்சாலைக்கு ஏற்ற அதிக வேகத்தில் செல்லும்போதுகூட, கார் அலைபாயாமல், நிலையாகச் செல்கிறது. இதற்கு காரின் துல்லியமான ஸ்டீயரிங் துணை புரிகிறது. எந்த வேகத்தில் சென்று திரும்பினாலும் ஸ்டேபிளாகப் பயணிக்கிறது.

எடை அதிகமான 4X4 எண்டேவரில், பாடி ரோல் மிகக் குறைவாகவே இருந்தது. சடர்ன் பிரேக் அடித்தாலும், கார் ஆட்டம் போடாமல் நிற்கிறது. ஆனால், பிரேக்குகளின் திறன் குறைவு என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். 2.2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் வெளிப்படுத்தும் 158bhp பவர், நெடுஞ்சாலையில் ரிலாக்ஸாகப் பயணிக்கப் போதுமானதானதாக இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 13.53 விநாடிகளில் எட்டும் இந்த காரின் பெர்ஃபாமென்ஸ், மோசமாக இல்லாவிட்டாலும் மற்ற கார்களை அதன் வேகத்திலே ஓவர்டேக் செய்வதற்கான பவர் மிஸ்ஸிங். ஆனால், அன்றாடப் பயன்பாட்டுக்கான சிறந்த இன்ஜின் இதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

ட்ரெய்ல்பிளேஸருக்கு இணையான 197bhp பவரை வெளிப்படுத்தும் 3.2 லிட்டர் 5 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட காரின் டார்க் அதிகமாக இருப்பதால், வேகம் செல்வதே தெரியவில்லை. 0-100 கி.மீ வேகத்தை 11.33 விநாடிகளிலேயே எட்டுவதுடன், 120 கி.மீ-க்கு மேல் செல்கிறோம் என்பதை, ஸ்பீடோ மீட்டரைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மிட் ரேஞ்ச் அட்டகாசமாக இருப்பதால், எண்டேவர் - ஃபார்ச்சூனரைவிட வேகமாக இருந்தாலும், வேகப் போட்டியில் வெல்வது ட்ரெய்ல்பிளேஸர்தான். ஆனால், அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது, இதில் உள்ள  5 சிலிண்டர் இன்ஜின் சத்தம் போடுவதுடன், காருக்குள்ளும் கேட்கிறது. டார்க்கை நம்பி ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டும்போது, எண்டேவரின் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை.

இன்டீரியர்

பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய கார் அகலமாக இருப்பதால், முன் வரிசை இடவசதி அதிகமாகியிருக்கிறது. நடுவரிசை இருக்கைகள் சற்று தாழ்வாக இருப்பதுபோலத் தோன்றினாலும், பயணிப்பதற்கு வசதியாக மட்டுமல்ல, சொகுசாகவும் இருக்கின்றன. சன் ரூஃப் இருக்கும் காரில், ஹெட்ரூம் சற்று குறைந்துவிடுவது நெருடல். கடைசி வரிசை இருக்கையை எட்டிப் பிடிப்பது சிரமமாக இருப்பதுடன், அதில் பெரியவர்கள் உட்காருவதற்கு ஏற்ற இடவசதி இல்லை. மூன்று வரிசை இருக்கையிலும் ஆட்கள் உட்கார்ந்த பிறகும்கூட, டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இருக்கிறது. பழைய காரைவிட, புதிய காரின் கேபின் பலமடங்கு முன்னேறியிருக்கிறது.  இன்டீரியர் தரம் மற்றும் சிறப்பம்சங்கள் பட்டியலும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

டாப் வேரியன்ட்டான TITANIUM வேரியன்டில், SYNC2, ப்ளு-டூத், வாய்ஸ் கமாண்ட், தானாக காரை ரிவர்ஸ் பார்க்கிங் செய்யும் ஆக்டிவ் பார்க் அசிஸ்ட், LED உடன் ஹெட்லைட் என சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. ஸ்டோரேஜ் ஸ்பேஸ் பொறுத்தவரை, அனைத்து கதவிலும் பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் கைப்பிடிகள், USB SLOT என ப்ராக்டிக்கலான கேபினாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எண்டேவரின் கேபின், இந்த விலை கார்களை வாங்குபவர்களுக்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது.

ரியல் ஆஃப்ரேட்டர்!
ரியல் ஆஃப்ரேட்டர்!

லேடர் ஃப்ரேம் சேஸி அமைப்பு கொண்ட எஸ்யுவிகளில் சிறப்பான காராக இருப்பதற்கான தகுதிகள், புதிய எண்டேவரில் தென்படுகின்றன. ஏனெனில், கட்டுமானத் தரம், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், 4 வீல் டிரைவ், தொழில்நுட்பம், சிறப்பம்சங்கள் என ஒரு பெரிய எஸ்யுவிக்குத் தேவையான அனைத்திலும் அசத்துகிறது. 2016 துவக்கத்தில் உத்தேசமாக 24 லட்சம் (2.2 லிட்டர் 4X2 மேனுவல்) - 30 லட்ச ரூபாயில் (3.2 லிட்டர் 4X4 ஆட்டோமேட்டிக்) கார் அறிமுகமாகும்போது, ஃபார்ச்சூனரின் விற்பனை பாதிக்கப்படும் எனத் தோன்றுகிறது.