Published:Updated:

மாறியது இன்ஜின்!

ஃபேஸ்லிஃப்ட்: ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

மாறியது இன்ஜின்!

ஃபேஸ்லிஃப்ட்: ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

றிமுகமாகிவிட்டது 2016 ஃபோர்டு எக்கோஸ்போர்ட். ‘பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..!’ என்கிறீர்களா? உண்மைதான் புதிய எக்கோஸ்போர்ட்டின் வெளிப்புற டிஸைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், மெக்கானிக்கலாக மிக முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

எக்கோஸ்போர்ட் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் இப்போது, ஃபிக்ஸட் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இன்ஜினின் சக்தி 8.9bhp, டார்க் 1.1kgm அளவுகளில் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த bhp உயர்வு பெர்ஃபாமென்ஸில் வெளிப்படவில்லை. பழைய எக்கோஸ்போர்ட்டைவிட 0-100 கி.மீ வேகத்தை வெறும் 0.05 விநாடிதான் குறைவாக அடைகிறது. இன்ஜின் முன்பைவிட மிகச் சீரான பவர் டெலிவரியைக் கொடுக்கிறது. டர்போ லேக்கை அதிகம் உணர முடியவில்லை. ஐடிலிங்கிலும், இயக்கத்திலும் முன்பைவிட ஸ்மூத்தாக இருக்கிறது இந்த இன்ஜின். அதிக ஆர்பிஎம்-ல் மட்டும்தான் இன்ஜின் சத்தம் நெருடல்.

மாறியது இன்ஜின்!

இன்ஜினைத் தவிர, வேறு எதிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. டே-டைம் ரன்னிங் லைட்ஸ் இப்போது ஃபாக் லேம்ப்பிலேயே இணைக்கப்பட்டுள்ளன. பின்னால் டிக்கி ரிலீஸ், ஹேண்டிலுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய கலர் சாய்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வளவுதான் வெளிப்புற மாற்றங்கள்.

காருக்கு உள்ளே இப்போது வலதுபக்கம் இண்டிகேட்டர், ஹெட்லைட்ஸ் கன்ட்ரோல்கள் உள்ளன. ஹேண்ட் பிரேக்குக்கு லெதர் கவர் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய காரில் இருக்கையின் அருகே இருந்த ஹேண்ட் பிரேக் இப்போது வலது பக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது இன்டீரியர்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், எலெக்ட்ரோ-க்ரோமேட்டிக் ரியர்வியூ மிரர் ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாறியது இன்ஜின்!

காரின் டிஸைன் இன்னும் ஃப்ரெஷ்ஷாகவே இருப்பதால், ரொம்பவும் மாற்றங்கள் செய்யாமல் விட்டுவிட்டது ஃபோர்டு. எல்லா மாற்றங்களையும் சேர்த்து 24,000 ரூபாய்தான் விலை உயர்வு!