Published:Updated:

சிக்னலில் தானாகவே நியூட்ரல்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா XUV5OO ATதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

சிக்னலில் தானாகவே நியூட்ரல்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா XUV5OO ATதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

ரு வழியாக அறிமுகமாகிவிட்டது மஹிந்திரா XUV500 ஆட்டோமேட்டிக் மாடல். புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஏற்கெனவே உள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது புதிய ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் காரில் உள்ள DSI கியர்பாக்ஸ் இல்லை. இது Aisin நிறுவனத்தின் கியர்பாக்ஸ். எப்படி இருக்கிறது XUV500 ஆட்டோமேட்டிக்?

மேனுவல் மாடலில் உள்ள சுமாரான கிளட்ச்சும், கியர்பாக்ஸ் ஷிஃப்ட்டும் இந்த காரில் கிடையாது என்பதே பெரிய திருப்தி. புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இன்ஜினுடன் நன்றாகவே பொருந்தியுள்ளது. ஃபுல் - ஆட்டோ மோடில் கியர் ஷிஃப்ட் மிக ஸ்மூத்தாகவும், துரிதமாகவும் செயல்படுகிறது. ரெஸ்பான்ஸிவ்வாகவும் இருக்கிறது. தேவைப்பட்டால் 1,500 ஆர்பிஎம்-ல்கூட அப்-ஷிஃப்ட் ஆகிறது. ஆக்ஸிலரேட்டரைத் தொடர்ந்து மிதித்தால், 3,500-4,500 ஆர்பிஎம் வரை கியர் மாற்றவில்லை  என்றாலும் தாங்குகிறது. மேனுவல் மோடு பயன்படுத்தும் எண்ணம் எழவில்லை. மேனுவலில் ஓட்ட வேண்டும் என்றால், பேடில் ஷிஃப்ட் கிடையாது. எனவே, ‘+/-’ வழிதான்.

சிக்னலில் தானாகவே நியூட்ரல்!

0-100 கி.மீ வேகத்தை 13.16 விநாடிகளில் கடக்கிறது XUV500 ஆட்டோமேட்டிக்.  சிட்டி டிராஃபிக்கில் ஜெர்க் இல்லாமல் ஓட்ட முடிகிறது. சிக்னலில் அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தால், கியர்பாக்ஸ் தானாகவே நியூட்ரலுக்கு ஷிஃப்ட் ஆகிவிடுகிறது. ஆக்ஸிலரேட்டரை மிதித்தவுடன் மீண்டும் கியர் மாறிக்கொள்ளும்.

மற்றபடி, இன்ஜின் சத்தம் அப்படியே உள்ளது. வளைவுகளில் அண்டர்-ஸ்டீயர் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே அப்டேட் செய்யப்பட்ட கார் என்பதால், உள்ளே மாற்றங்கள் இல்லை.
ஆட்டோமேட்டிக் மாடலில் ESP, ஹில் ஹோல்டு, ஹில் டிஸென்ட் கன்ட்ரோல், 6 காற்றுப் பைகள், லெதர் இருக்கைகள், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை W8 ஃப்ரன்ட் வீல் டிரைவ் வெர்ஷனில் கிடைக்கின்றன. W10 ஆல்-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடலில், மேலே உள்ள வசதிகளுடன் சன் ரூஃப், பவர்டு டிரைவர் சீட், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால், கீ-லெஸ் கோ, பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், மைக்ரோ-ஹைபிரிட் ஆகிய வசதிகள் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்னலில் தானாகவே நியூட்ரல்!

ஆட்டோமேட்டிக் மாடலின் ARAI மைலேஜ், லிட்டருக்கு 13.85 கி.மீ. மேனுவல் மாடலின் மைலேஜ், லிட்டருக்கு 16 கி.மீ. வழக்கமான மாடல்களின் விலையைவிட ஆட்டோமேட்டிக் மாடல் சுமார் ஒரு லட்சம் ரூபாய் விலை அதிகம்.

XUV500 ஆட்டோமேட்டிக் மாடலுக்குத்தான் காத்திருக்கிறீர்கள் என்றால், சில வசதிகள் இல்லை என்பது பெரிய விஷயம் அல்ல. ஆட்டோமேட்டிக் மாடல், மேனுவல் மாடலைவிட ஓட்ட மிக எளிதாக இருக்கிறது. சாதாரணமாக XUV500 வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒருமுறை ஆட்டோமேட்டிக் மாடலை டெஸ்ட் செய்து பார்த்தால், மனது மாறக்கூடும்!