Published:Updated:

இவன் வேற மாதிரி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

இவன் வேற மாதிரி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

நீண்ட காலத்துக்குப் பிறகு ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு முக்கியமான பைக் அறிமுகமாகியுள்ளது, ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின்.
ஏன் இது முக்கியமான பைக்? ட்ரையம்ப்பின் மிக முக்கியமான பைக்கான போனவில்லுக்கு மாற்றாக, இனி இந்த போனவில் ஸ்ட்ரீட் ட்வின்தான்.

ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஹெட்லைட்டிலேயே ட்ரையம்ப் லோகோ அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. நாம் டெஸ்ட் செய்த பைக்கில் கறுப்பு-சில்வர் கலர் தீம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஹேண்டில்பார், ஹேண்ட் க்ரிப், கண்ணாடிகள் ஆகியவை கறுப்பு வண்ணத்திலும் மற்றவை சில்வர் வண்ணத்திலும் கவர்கின்றன. டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், ஸ்பீடோ மட்டும் அனலாக். டேக்கோ மீட்டர் இல்லை.

இவன் வேற மாதிரி!

பழைய பைக்கைவிட புதியதில் பெட்ரோல் டேங்க் கொஞ்சம் சிறிதாக இருக்கிறது. ஆனால், நீர்த்துளி போன்ற வடிவமைப்பு, வெகு அழகு. இருக்கை நல்ல சப்போர்ட் கொடுக்கிறது. நீளமான சைலன்ஸர்கள் பைக்கின் வடிவமைப்போடு கச்சிதமாகப் பொருந்துகின்றன. 10-ஸ்போக் கறுப்பு அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஒட்டுமொத்த டிஸைன் ஒரிஜினல் போனவில் டிஸைன் உணர்வை அப்படியே கொண்டிருக்கிறது.

நுணுக்கமான அம்சங்களில்கூட தரம் சிறப்பாக உள்ளது. கட்டுமானத் தரம், பாகங்களின் தரத்தில் குறை சொல்ல முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவன் வேற மாதிரி!

இன்ஜின்

ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் 900 சிசி இன்-லைன், 2 சிலிண்டர் இன்ஜின் முற்றிலும் புதிய இன்ஜின். 5,900 ஆர்பிஎம்-ல் 54bhp சக்தியையும், 3,230 ஆர்பிஎம்-ல் 8.2 kgm டார்க்கையும் அளிக்கிறது. லிக்விட் கூலிங் கொண்ட இந்த இன்ஜின், எளிதாக ரெவ் ஆகிறது. குறைந்த வேகங்களில் சீரான இயக்கம் கொண்டுள்ளது. ஆனால், மணிக்கு 90 கி.மீ-க்கு மேல் க்ரூஸ் செய்யும்போதுதான் சிறப்பாக இருக்கிறது. எக்ஸாஸ்ட் சத்தம் முன்பைவிட மிரட்டல் அதிகம்.

இவன் வேற மாதிரி!

ஓட்டுதல் தரம், பெர்ஃபாமென்ஸ்

பைக்கில் நேராக உட்காரும் விதத்தில் ரைடிங் பொசிஷன் இருக்கிறது. எர்கனாமிக்ஸும் சூப்பர். முன்பைவிட சேஸி லைட்டாக இருப்பதை உணர முடிகிறது. ஸ்மூத்தான சாலைகளில் ஓட்டுதல் தரம் மிக அருமை. முன்பக்கம் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கம் உள்ள டூயல் ஷாக் அப்ஸார்பர்களும் பெரிய சைஸ் பள்ளங்களையும் எளிதாகச் சமாளிக்கின்றன.

இவன் வேற மாதிரி!
இவன் வேற மாதிரி!

பைக்கை வேகமாக ஓட்டும்போதும் கையாளுமை சிறப்பாக இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்ஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோலை தேவைப்பட்டால் ஆஃப் செய்துகொள்ளலாம். பழைய பைக்கைவிட அதிக வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், பைக்கின்  எடை குறைந்துள்ளது. பழைய பைக் 209 கிலோ. புதிய பைக் 198 கிலோதான். ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின் பைக் பார்க்க, ஓட்ட சிறப்பாக உள்ளது. பாகங்களின் தரம் ஃபர்ஸ்ட் கிளாஸ். எக்ஸாஸ்ட் சத்தமும், டார்க்கும் முன்பைவிட சிறப்பாக உள்ளன. புது பைக் என்பதால், ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் அப்டேட் செய்யாமல், முற்றிலும் புதிய பைக்காகக் களமிறங்கி இருக்கிறது ஸ்ட்ரீட் ட்வின். விரைவில் இங்கே விற்பனைக்கு வரும் இந்த பைக்கின் விலைதான் இப்போது சஸ்பென்ஸ்!