Published:Updated:

ஹானஸ்ட் ஹார்னெட்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா சிபி ஹார்னெட் 160Rதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹானஸ்ட் ஹார்னெட்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா சிபி ஹார்னெட் 160Rதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:

ன்றாடப் பயன்பாட்டுக்கான பைக்குகளைத் தயாரிப்பதில், நிலையான இடத்தைப் பிடித்துள்ளது ஹோண்டா. அதற்குச் சிறந்த உதாரணம், யூனிகார்ன்.

 யூனிகார்ன், பார்ப்பதற்கு ‘டல்’ அடித்தாலும், போதுமான பெர்ஃபாமென்ஸைத் தரக்கூடிய ஸ்மூத் இன்ஜினைச் சிலாகித்திருப்போம். ஆனால், 150சிசி செக்மென்ட்டில், யூனிகார்ன் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஹோண்டா தவறிவிட்டது. அதை அடுத்து வெளிவந்த டேஸ்லர், ட்ரிகர், யூனிகார்ன் 160 என எதுவுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், போட்டியாளர்களான யமஹா FZ, பஜாஜ் பல்ஸர் 150, சுஸூகி ஜிக்ஸர் ஆகிய பைக்குகளை விற்பனையில் வெற்றியடைய வைத்த தந்திரத்தை, ஹோண்டா இப்போது கற்றுக்கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடாக அறிமுகமாகியுள்ளது ஹார்னெட் 160R.

ஹானஸ்ட் ஹார்னெட்!

டிஸைன்

வெளிநாடுகளில் விற்பனையாகும் ஹார்னெட் CB600F பைக்கை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பைக்கை ஷார்ப்பாக வடிவமைத்திருக்கிறது ஹோண்டா. ஹார்னெட்டின் ஹெட்லைட் டிஸைன் இதனை உறுதிப்படுத்துகிறது. முழுக்க டிஜிட்டலாக இருக்கும் ஸ்பீடோ மீட்டர், யூனிகார்ன் 160/ட்ரிகர் பைக்குகளில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. ஹேண்டில் பார் ஃப்ளாட்டாக இருப்பதுடன், பயன்படுத்த மென்மையான கைப்பிடிகளைக் கொண்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், ஹோண்டாவின் 110சிசி பைக்குகளில் இருக்கும் அதே ஸ்விட்ச்கள், இந்த பைக்கிலும் இருப்பது நெருடல். இரட்டை வண்ண பெட்ரோல் டேங்க் அட்டகாசமாக டிஸைன் செய்யப்பட்டிருப்பதுடன், பைக்குக்கு கட்டுமஸ்தான தோற்றத்தைத் தருகிறது. அலாய் ஸ்ப்ளிட் கிராப் ரெயில், தனித்துவமான X வடிவ LED டெயில் லைட்டுடன் இயைந்துபோகிறது.

இன்ஜின்

யூனிகார்ன் 160 பைக்கில் இருக்கும் அதே ஸ்மூத்தான 162.7 சிசி இன்ஜின்தான், ஹார்னெட் 160R பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிக சக்தி மற்றும் குறைவான மாசு வெளிப்படுத்தும் நோக்கத்தில் இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளதால், இது 8,500 ஆர்பிஎம்-ல் 15.7bhp பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 1.5kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனால், ஆரம்ப வேகங்களில் இன்ஜினின் செயல்பாட்டில், யூனிகார்னைவிட முன்னேற்றம் தெரிகிறது. மிட் ரேஞ்ச் அசத்தல் ரகம். எடை குறைவான கிளட்ச், கியர்களை எளிதாக மாற்ற உதவுகிறது. இதன் காரணமாக, இடநெருக்கடியான நகரச் சாலை அல்லது நெடுஞ்சாலையில் பைக்கை ஓட்டுவது நல்ல அனுபவமாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹானஸ்ட் ஹார்னெட்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

சீட்டிங் பொசிஷன், சற்று முன்னோக்கி அமர்ந்து கால்களை சற்றுப் பின்தள்ளி வைப்பது போலவே இருந்தாலும், பைக்கை ஓட்டுவது வசதியாகவே இருக்கிறது. மேலும், ஹார்னெட்
160R-ன்  கையாளுமை ஓட்டுநருக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால், திருப்பங்களில் பைக்கை வேகமாகச் செலுத்த முடிகிறது. போட்டியாளர்களைப் போலவே, முன்பக்கம் டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக், பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் அமைப்பைக் கொண்டுள்ள ஹார்னெட்டின் சஸ்பென்ஷன், மோசமான சாலையிலும் அருமையான ஓட்டுதல் தரத்தை அளிக்கும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளன. 5 ஸ்போக் அலாய் வீல்களில், அகலமான 17 இன்ச் MRF ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பிடித்துள்ளன. இப்படி யூனிகார்ன் 160 உடன் ஒப்பிடும்போது, மெக்கானிக்கலாக சில மாற்றங்கள் காரணமாக, ஹார்னெட் 160R பைக்கின் எடை 5 கிலோ அதிகம். பிரேக்கிங்கைப் பொறுத்தவரை, முன்பக்கம் 276 மிமீ மற்றும் பின்பக்கம் 220 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் / 130மிமீ டிரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்ஷனலாக அளிக்கப்படும் ஹோண்டாவின் CBS - கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், பைக்கின் பிரேக்கிங் திறனை மேம்படுத்துகிறது.

ஹானஸ்ட் ஹார்னெட்!
ஹானஸ்ட் ஹார்னெட்!

தற்போது 150 - 160சிசி செக்மென்ட்டில், சாம்பியனாகத் திகழ்வது சுஸூகி ஜிக்ஸர் - ஜிக்ஸர் SFதான். என்னதான் சில விஷயங்கள் மாறியிருந்தாலும், அடிப்படையில் ஹார்னெட், ஒரு யூனிகார்ன் 160 என்பதை மறுக்க முடியாது. சென்னை ஆன்ரோடு விலையான ரூ.91,732 (STD) - ரூ.96,644 (DLX) -ஐப்  பார்க்கும்போது, போட்டியாளர்களைவிட அதிக விலையில் ஹார்னெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இது எந்த அளவுக்கு விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, காலம்தான் சொல்லும்!