Published:Updated:

வின்டேஜ் கலெக்டர்!

ச.ஜெ.ரவி , படங்கள்:தி.விஜய்

வின்டேஜ் கலெக்டர்!

ச.ஜெ.ரவி , படங்கள்:தி.விஜய்

Published:Updated:

கோவையை அடுத்த வாளையாறு பகுதியைச் சேர்ந்த நவீனுக்கு, வயது 26. ஆனால், வின்டேஜ் வாகனங்கள் மீதான அவரின் காதலுக்கு வயது 22. நான்கு வயதில் இருந்தே வாகனங்களின் மீது தீராக் காதலுடன், கார் பைக்குகளுடனே வளர்ந்து வந்தவர் நவீன். ‘வின்டேஜ், கிளாஸிக்’ என 27 கார்களை பழைமை மாறாமல் புதுப்பித்து இன்றளவும் பயன்படுத்தியும் வருகிறார்.
 
வின்டேஜ், கிளாஸிக் வாகனங்களைப் பாதுகாத்ததில் தனக்கு உள்ள அனுபவத்தின் மூலம், இப்போது வின்டேஜ் கார்களைப் புதுப்பித்துக் கொடுக்கும் வேலையையும் செய்துவருகிறார்.
ஒரு முற்பகல் நேரத்தில் வாளையாறில் உள்ள தோட்ட வீட்டில் நவீனைச் சந்தித்தோம். தான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்களை நம்மிடம் காட்டி, கார் வாங்கியதன் பின்னணியை ஆர்வத்துடன் விவரித்தார்.

“எனக்கு கார்கள் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். என் தாத்தா பழனியப்பன், 1954 மாடல் ‘ஹிந்துஸ்தான் 14’ மாடல் கார் வைத்திருந்தார். அதனாலோ என்னவோ, என் நான்காவது வயதில் இருந்தே கார் என்றாலே ஓடிப் போய் வேடிக்கை பார்க்கும் ஈர்ப்பு இருந்தது.

நான் பத்தாவது படிக்கும்போது, ஹிந்துஸ்தான் 14 மாடல் கார்களைச் சேகரிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதில் இருந்து ஹிந்துஸ்தான் 14 மாடல் கார் எங்கே கிடைக்கும் என விசாரிக்கத் துவங்கினேன்.

வின்டேஜ் கலெக்டர்!

2008-ல் வின்டேஜ் கார் ராலிக்குள் நுழைந்தேன். மோட்டார் விகடனுடைய  தொடர்பும் மிக உதவியாக இருந்தது. நீலகிரி வின்டேஜ் கார் ராலிக்கு மூன்று ஹிந்துஸ்தான் 14 மாடல் கார்களைக் கொண்டு போனேன். ‘ஹிந்துஸ்தான் ஃபேமிலி’ என எங்களைச் சொல்வார்கள். ஊட்டி வின்டேஜ் கார் கிளப்பின் தலைவராக இருந்த ரஜினிகாந்த் தொடர்பு கிடைத்த பிறகு, ‘ஒரே மாடல் வாகனத்தை மட்டும் கலெக்ட் செய்தால் போதாது; எல்லா மாடல் வாகனத்தையும் கலெக்ட் பண்ணு’ எனச் சொன்னார். சொன்னதோடு பேபி ஹிந்துஸ்தான் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். அதன் பின்புதான் மற்ற கார்கள் மீதும் ஆர்வம் வந்தது. மோரிஸ் மைனர், ஆஸ்டின் 8, ஆஸ்டின் A40, ஆஸ்டின் 10/4 என அடுத்தடுத்து பல கார்களை வாங்கினேன்.

இதற்்கிடையில் என் தாத்தா ஒரு கான்டெஸா காரைப் பிறந்த நாளுக்குப் பரிசாகத் தந்தார். இப்படி என்னிடம் 27 கார்கள் இருக்கின்றன. இதில், மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய கார் ஆஸ்டின் 10/4 தான். 1935-ம் ஆண்டு மாடலான இந்த கார், தூத்துக்குடியில் ஒருவரிடம் இருப்பது தெரிந்து, இடைவிடாமல் முயற்சி செய்தேன். தினசரி போன் செய்துகொண்டே இருப்பேன். ஆனால், அவர் கொடுக்கும் ஐடியாவில் இல்லை. ஆனாலும், தொடர்ந்து நான் போன் செய்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில், ‘வந்து எடுத்துக்கோ’ என அவரே சொல்லும் அளவுக்கு நான் அந்த காரை வாங்குவதில் ஆர்வத்தோடு இருந்தேன்!” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வின்டேஜ் கலெக்டர்!

‘‘ஒரு காரோடு துவங்கி இப்போ 27 கார்கள் வரை சேகரித்துவிட்டீர்கள். அடுத்தது என்ன?’’ என்று நாம் கேட்க... ‘‘வின்டேஜ் கிளப் வாகனங்களுக்கு எந்த வேலை இருந்தாலும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இது போதாது; இந்த கார்களை எல்லாம் வைத்து மியூஸியம் தயார் செய்ய வேண்டும். இப்போதுதான் வின்டேஜ் கார்களுக்கான ரீ-ஸ்டோரேஷன் யூனிட் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறேன். 

வின்டேஜ் கார்கள் வெறும் கார்கள் மட்டுமல்ல... நம் முன்னோர்கள் பற்றிய நினைவை நம்மிடம் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுபவை. இந்த கார்களில் கிடைக்கும் சுகம் எந்த காரிலும் கிடைக்காது. எனவே, இந்த கார்களை மூலையில் போட்டு பாழ்படுத்திவிடக் கூடாது!” என்கிறார் நவீன்.

உண்மைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism