Published:Updated:

“பாதுகாப்பு என்றால் வால்வோ!”

ரீடர்ஸ் ரெவ்யூ: வால்வோ XC90ஞா.சுதாகர் , படங்கள்: ஏ.சிதம்பரம்

“பாதுகாப்பு என்றால் வால்வோ!”

ரீடர்ஸ் ரெவ்யூ: வால்வோ XC90ஞா.சுதாகர் , படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:

மோட்டார்  விகடன் என்று ஒரு மாத இதழ் வரப்போகிறது என்பதற்கான முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பே, மோட்டார் விகடன் இதழுக்கு உத்தேசமாக ஒரு தொகையை அனுப்பிவைத்து, என்னை மோட்டார் விகடனின் முதல் சந்தாதாரர் ஆக்கிக்கொண்டேன். மோட்டார் விகடனின் முதலாம் ஆண்டு சிறப்பிதழ் வெளிவந்தபோது, நான் டாடா சஃபாரி வைத்திருந்தேன். ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளிவந்தபோது, பென்ஸ் E-கிளாஸ் வைத்திருந்தேன். தற்போது பத்தாம் ஆண்டு இதழ் வரும்போது, வால்வோ XC90 வைத்திருக்கிறேன். உங்களுடன் சேர்ந்து நானும் வளர்ந்து வருவது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என மோட்டார் விகடன் வாசகராக தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ரஜப் முகம்மது, தனது வால்வோ பற்றி இங்கே கூறுகிறார்.

“இதுவரைக்கும் பத்து கார்கள் வாங்கி பயன்படுத்தி விட்டேன். அம்பாஸடர் முதல் வால்வோ வரை அப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப என்னுடைய  காரை அப்டேட் செய்துகொண்டே இருப்பது என் வழக்கம்.

“பாதுகாப்பு என்றால் வால்வோ!”

ஏன் வால்வோ XC90?

எல்லாருமே பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி போன்ற கார்களைச் சிலாகித்துப் பார்ப்பார்கள். அதேசமயம், வால்வோ கார் என்றால் அந்த எண்ணம் இல்லாமல், பாதுகாப்பான கார் என மட்டும்தான் நினைப்பார்கள். முந்தைய சொகுசு கார்களைப் போலவே அதே கம்பீரத்துடனும் தன்னடக்கத்துடனும்  இருப்பதுதான் வால்வோவின் பலம்.

ஏழு சீட்டர் வசதிகொண்ட எஸ்யுவியான XC90 காரை நான் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணம் - தொழில் சம்பந்தமாக அடிக்கடி பலருடன் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதும்தான்.

ஷோரூம் அனுபவம்

கோவை வால்வோ ஷோரூமில்தான் காரை புக் செய்தேன். அப்போது முதல், இப்போது வரை மிகவும் கெளரவமாக நடத்துகிறார்கள். திருநெல்வேலியில் இருக்கும் எனக்கு சர்வீஸ் செய்ய வேண்டுமென்றாலும்கூட, கோவையில் இருந்து அடுத்த நாளே வந்து எனது குறைகளைச் சரிசெய்து கொடுக்கின்றனர். அந்த வகையில் அவர்களை நிச்சயம் பாராட்டலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பாதுகாப்பு என்றால் வால்வோ!”

எப்படி இருக்கிறது  வால்வோ XC90?

இதில் நான் எதிர்பார்த்தது சொகுசான பயணம் மட்டும் தான். அதைச் சரியாகப் பூர்த்தி செய்கிறது வால்வோ XC90. நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்ற வகையிலும் மென்மையாக இருக்கிறது இதன் சொகுசான இருக்கைகள். ஏழு பேர் உட்கார தாராளமான இடவசதி இருக்கிறது. சென்னை, ஊட்டி போன்ற இடங்களுக்கு லாங் டிரைவ் சென்று வந்துவிட்டேன். மலைப் பகுதியில் ஏறும்போதும், நெடுஞ்சாலையில் சீறும்போதும் பவர் டெலிவரியில் எந்தக் குறையும் இல்லை. 180 கி.மீ வேகம் வரைகூட செல்ல முடிகிறது. டீசல் இன்ஜின் என்றாலும்கூட, பெரிய அதிர்வுகளோ, எரிச்சலூட்டும் சத்தமோ உள்ளே கேட்பது கிடையாது. ஏ.சி வென்ட் பின் இருக்கைகளிலும் இருப்பதால், கார் முழுக்க குளுமையாக இருக்கிறது. அதேபோல, மற்ற சொகுசு கார்களைவிட, இதன் சர்வீஸ் செலவு மிகவும் குறைவு. மேடு பள்ளங்கள்கொண்ட சாலை என்றாலும் கூட, காரினுள் எந்த அதிர்வும் இல்லாத அளவுக்கு சஸ்பென்ஷன் மென்மையாக இருப்பதால், நீண்ட தூரப் பயணம் செய்ய இது சிறந்த கார். வளைவுகளில் காரைத் திருப்பும்போது, பாடிரோல் சுத்தமாக இல்லை.

“பாதுகாப்பு என்றால் வால்வோ!”
“பாதுகாப்பு என்றால் வால்வோ!”
“பாதுகாப்பு என்றால் வால்வோ!”

ப்ளஸ்:

 ** ஏழு இருக்கைகளுக்கும் 8 ஏர் பேக்குகள் இருப்பதால், பாதுகாப்பாக உணரலாம்.

  ** இருக்கைகள் மிக மென்மையாக,  செளகரியமாக இருப்பதால், பயணக் களைப்பு, முதுகு வலி போன்றவை இல்லை.

  ** முன் வரிசை முதல் மூன்றாம் வரிசை வரையிலுமே, எந்தக் குறையும் இல்லாத அளவுக்கு தாராளமான இடவசதி. லெக்ரூம் அதிகம் என்பதால், கால்களை  நீட்டி மடக்கி உட்கார வசதியாக இருக்கிறது.

  ** டேஷ்போர்டு டிஸைன் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

  ** கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால், பயமின்றி ஆஃப் ரோடுக்குக் கூடப் பயன்படுத்தலாம்.

  ** சத்தம் இல்லாமல், சீரான பவர் கொடுக்கும் இன்ஜின் அருமையாக செயல்படுகிறது.

மைனஸ்:

  **  இதன் டிஸைனை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கொஞ்சம் பழைய கார் போல இருக்கிறது.

  **  ஷோரூம்கள் இன்னும் தென்பகுதியில் இல்லை என்பது மிகப் பெரிய ஒரு மைனஸ்.

என் தீர்ப்பு

நீண்ட தூரப் பயணம் செல்பவர்களுக்கும், ஒரு பெரிய குடும்பத்துக்கு  ஏற்ற - மிகவும் அதிக இடவசதிகொண்ட ஒரு பாதுகாப்பான எஸ்யுவி வாங்க வேண்டும் என்பவர்களுக்கும், வால்வோ XC90 சரியான சாய்ஸ்!