Published:Updated:

வெஸ்பாதான் பெஸ்ட்!

ரீடர்ஸ் ரெவ்யூ: பியாஜியோ வெஸ்பா 150 ஜெ.விக்னேஷ்

வெஸ்பாதான் பெஸ்ட்!

ரீடர்ஸ் ரெவ்யூ: பியாஜியோ வெஸ்பா 150 ஜெ.விக்னேஷ்

Published:Updated:

2014 ஜூன் மாதத்தில் என்னுடைய முதல் ஸ்கூட்டரான யமஹா ஆல்ஃபாவை வாங்கினேன். வெறும் நான்கு லிட்டர் பெட்ரோல் டேங்க்கோடு புறநகர் பகுதிகளுக்குச் சென்று வீடு திரும்புவது, ரிஸ்க்கானதாகப்பட்டது. அதனால், அதிக டேங்க் கொள்ளளவு கொண்ட ஃபெமினைன் ஸ்கூட்டர்களைத் தேட ஆரம்பித்தேன்.

ஏன் வெஸ்பா?

அழகும் அதிக கொள்ளளவும் நிறைந்த ஸ்கூட்டராக வெஸ்பா 125 இருந்தது. திரைப்படங்களில் பார்த்தபோது, அது என்னுடைய கனவு வாகனமாக மாறியது. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும், வெஸ்பா டீலரான பிள்ளை மோட்டார்ஸுக்குச் சென்ற போது, அவர்கள் அடுத்த வெர்ஷனான வெஸ்பா 150சிசி VXL ரிலீஸ் ஆகப்போவதாகக் கூறினார்கள். டிஜிட்டல் டிஸ்ப்ளேவும்,  கூடுதல் சிறப்பம்சங்களும், அகலமான டயர்களும் வெஸ்பா 150சிசியின் ப்ளஸ்ஸாக எனக்குப் பட்டது. அதனால், செப்டம்பர் மாதம் வரை காத்திருந்தேன்.

வெஸ்பாதான் பெஸ்ட்!

ஷோரூம் அனுபவம்

செப்டம்பர் மாத இறுதியில், டீலரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஸ்கூட்டரைப் பற்றிய சந்தேகங்களை டெக்னீஷியன்களே தீர்த்துவைத்தனர். சஸ்பென்ஷன், பிரேக்கிங், ஃப்யூல் எக்கானமி போன்ற அனைத்தையும் அவர்கள் விளக்கிய பிறகு, ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்தேன். டெஸ்ட் டிரைவ் முழு திருப்தி அளித்தது. உடனே 5,000 ரூபாய் முன்பணம் செலுத்தி, ஸ்கூட்டரை புக் செய்துவிட்டேன். நவம்பர் மாதம், அவர்களே ஸ்கூட்டரை பதிவுசெய்து, நம்பர் பிளேட்டுடன் என்னிடம் அளித்தனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெஸ்பாதான் பெஸ்ட்!

எப்படி இருக்கிறது வெஸ்பா?

ஸ்கூட்டரை வாங்கிய அடுத்த நாள், நண்பர்களுடன், மாயாஜால் வரை டிரைவ் சென்றேன். பிக்-அப் நன்றாக இருந்தது. ஹேண்டில் பாரும் மிகவும் ஸ்டேபிளாக இருந்தது. மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், சஸ்பென்ஷன் சிறப்பாக இருந்ததால், ஓட்டுவது சிரமமாக இல்லை. டிராஃபிக்கில் செல்லும்போதுகூட, மிகவும் வசதியாக உள்ளது. லாங் டிரைவுக்கும் சரி, சிட்டி டிரைவுக்கும் சரி... வெஸ்பா மிகவும் சௌகரியமான ஸ்கூட்டராக உள்ளது. சிக்னலில் காத்திருக்கையில் இதனுடைய கிளாஸிக் லுக், அனைவரின் பார்வையையும் கவர்ந்திழுக்கிறது. 

பிடித்தது

7.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, இதன் மிகப் பெரிய ப்ளஸ். பார்ஷியல் ஓடோ மீட்டர், நம் பயண தூரத்தைச் சுலபமாக அறிய உதவுகிறது. இதில், இரு ட்ரிப் மீட்டர்கள் உள்ளன. இதில் ஒன்றை, ஜீரோவில் செட் செய்துவிட்டால், நம் பயணத்தின் முடிவில், பயண தூரத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஹெட் லேம்ப்களும் வெஸ்பாவில் தனித்துவமாக உள்ளன. லோ பீம் ஹெட் லேம்பிலேயே, மிகக் குறைந்த வெளிச்சத்தை அளிக்கும் பார்க்கிங் லேம்ப்பும் உள்ளது. ஹைபீம் ஹெட் லேம்ப்கள், இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்தை அளிக்கின்றன. காரின் தரத்தில் உள்ள ஸ்பீடோ மீட்டரில், எண்கள் மிகுந்த வெளிச்சத்துடனும் மினுமினுப்புடனும் உள்ளன. இதுவும் இரவு நேரப் பயணத்தின் போது உதவுகிறது. முன் பக்கம் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பு.

வெஸ்பாதான் பெஸ்ட்!

பிடிக்காதது

சிவப்பு நிற ஸ்கூட்டருக்கு, மேட்ச்சிங்காக பீஜ் நிற சீட் கவர் பொருத்தப்பட்டிருந்தாலும், மாசு நிறைந்த சாலைகளில் பயணிக்கும்போது அழுக்கு படிந்துவிடுகிறது. இதனால், சீட் கவரை மாற்ற வேண்டி உள்ளது. கறுப்பு நிற சீட் கவர் பொறுத்தப்பட்டிருந்தால், அழகாகவும், மாசு படாமலும் இருந்திருக்கும். ஹெட் லேம்ப்புக்கும், இண்டிகேட்டர் லேம்ப்களுக்கும் கிரில் கவரிங் அளித்திருக்கலாம். ஸ்பீடோ மீட்டர் முழுக்க டிஜிட்டலாக இருந்திருந்தால், இதன் அழகு மேலும் கூடியிருக்கும்.

வெஸ்பாதான் பெஸ்ட்!

என் தீர்ப்பு

கிளாஸிக் லுக் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் வேறு எந்த ஸ்கூட்டராலும், வெஸ்பாவை அடித்துக்கொள்ள முடியாது. ஒரு லட்சம் ரூபாய்க்கு வொர்த்தான டிரைவிங் அனுபவத்தைத் தருவதில் வெஸ்பா இஸ் தி பெஸ்ட்!