Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

Published:Updated:

ஓட்டுதல் தரம், மைலேஜ், கையாளுமை போன்றவற்றில் அசத்தும் பைக் எது? எனக்கு சுஸூகி ஜிக்ஸர் SF பைக் பிடித்திருக்கிறது. அது எனக்கான சரியான சாய்ஸாக இருக்குமா?

கெளதம் ரமேஷ், இமெயில்:


விலை குறைவான ஃபுல் ஃபேரிங் பைக், சுஸூகி ஜிக்ஸர் SF. ஓட்டுதல் தரம், மைலேஜ், கையாளுமை என நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களிலும் நிறைவாக இருக்கிறது. இதே விலையில், சக்திவாய்ந்த பைக் வேண்டும் என்றால், பஜாஜ் பல்ஸர் AS200 பைக் சரியான தேர்வாக இருக்கும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் தற்போது ஹோண்டா யூனிகார்ன் பைக் உபயோகப்படுத்தி வருகிறேன். ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்பது என் விருப்பம். 2 லட்ச ரூபாய்க்குள் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் எது?

- எஸ்.கார்த்திகேயன், இமெயில்.


உங்கள் பட்ஜெட்டில், கேடிஎம் RC200, ஹோண்டா CBR 250R, பஜாஜ் பல்ஸர் RS200 ABS ஆகிய பைக்குகள் அடங்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கலாம். புதிய பைக்கை, தினசரி பயன்படுத்துவீர்கள் என்றால், ஹோண்டா CBR சரியான சாய்ஸாக இருக்கும். வார இறுதியில் மட்டும் புதிய பைக்கைப் பயன்படுத்துவீர்கள் என்றால், கேடிஎம் RC200 சரியான தேர்வாக இருக்கும். குறைந்த விலையிலே ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவம் வேண்டும் என்றால், பஜாஜ் பல்ஸர் RS200ABS பைக் நல்ல சாய்ஸ்.

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வாங்கப்போகும் புதிய காருக்கு, வீட்டுக்கு அருகே பார்க்கிங் செய்வதற்கான இடவசதி இல்லை. குறைவான பராமரிப்புச் செலவு, அதிக எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுடன், வெளிச்சாலையில் நிறுத்தினாலும் காரை பயமின்றி நிறுத்துவதற்கு, பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய காரை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.

- சீனிவாசன், இமெயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மாருதி சுஸூகியின் கார்கள், முதன்முறை கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுபவை. எனவே, மாருதி செலெரியோ உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும். தற்போது வரும் கார்கள் அனைத்திலும் ரிமோட்  லாக் மற்றும் இன்ஜின் இம்மொபலைஸர் வசதிகள் இருக்கின்றன. காரை அவ்வளவு எளிதாகத் திருட முடியாது.  இருப்பினும், சாலைகளில் காரை நிறுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. கொஞ்சம் கவனத்தோடு இருங்கள்!

18 முதல் 23 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், பாதுகாப்பான, சொகுசான கார் எது? நான் ஒரு மாதத்துக்கு, 5,000 கி.மீ தூரம் காரில் பயணிப்பேன் என்பதால், நீண்ட தூரப் பயணத்துக்கு அது உகந்ததாக இருக்க வேண்டும்.

-சிபி சக்கரவர்த்தி, கோயம்புத்தூர்.


உங்கள் பட்ஜெட்டில், ஸ்கோடா ஆக்டேவியா, ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ரெனோ ஃப்ளூயன்ஸ், ஹூண்டாய் எலான்ட்ரா, செவர்லே க்ரூஸ் போன்ற பிரீமியம் செடான் கார்கள் கிடைக்கும். இவற்றில் சொகுசு, ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, பாதுகாப்பு, பெர்ஃபாமென்ஸ் ஆகிய விஷயங்களில் ஆல்ரவுண்டராக அசத்துவது ஜெட்டா. செவர்லே க்ரூஸ் காரையும் நீங்கள் பரிசீலிக்கலாம். அதிக மைலேஜ் தரக்கூடிய, அதிக இடவசதிகொண்ட கார் இது.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

எனது உயரம் 156 செ.மீ. நான் தற்போது ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் வைத்துள்ளேன். நான் வாங்கப்போகும் புதிய ஸ்கூட்டர், டிஸைன், ரீசேல் வேல்யூ, மைலேஜ் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதாக இருத்தல் அவசியம். ஹோண்டா டியோ, ஹீரோ டூயட், ஹீரோ ப்ளெஷர் ஆகியவற்றில் எது பெஸ்ட்? தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- விஜயலட்சுமி, கோயம்புத்தூர்.


நீங்கள் ஸ்கூட்டிக்குப் பழகி விட்டதால், 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டி ஜெஸ்ட், உங்களுக்கு ஏற்ற சாய்ஸாக இருக்கும். குறைந்த எடை, போதுமான மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ், தேவையான சிறப்பம்சங்கள், கட்டுபடியாகக்கூடிய விலை எனப் பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்களை,  நீண்ட காலமாக டிவிஎஸ் தயாரித்து வருகிறது. சற்று பெரிய ஸ்கூட்டரை நீங்கள் விரும்பினால், டிவிஎஸ் ஜூபிட்டரை வாங்கலாம்.

புதிய டாடா இண்டிகா, எப்போது விற்பனைக்கு வரும்?

- நவீன் ராஜ், கோயம்புத்தூர்.


டாடா மோட்டார்ஸ், இண்டிகாவுக்கு மாற்றாக, ஸைக்கா என்ற பெயரில் ஒரு ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பழைய காரின் பலமான - விலை, பராமரிப்பு, இடவசதி, மைலேஜ், ஓட்டுதல் தரம் ஆகியவற்றுடன் ஸ்டைல், சிறப்பம்சங்கள், தரம், கையாளுமை என இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில், முற்றிலும் மேம்பட்ட காரைத் தயாரித்துள்ளது டாடா. மேலும், ஸைக்காவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு காம்பேக்ட் செடான் காரையும் களமிறக்குகிறது டாடா.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

பைக்கை மாற்றலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன். எனது உயரம் 180 செ.மீ. தினசரி 60 கி.மீ தூரம் பைக்கில் பயணிப்பேன் என்பதால், மைலேஜும் முக்கியம். 1 லட்சம் பட்ஜெட்டில், ஸ்போர்ட்டியான லுக்குடன் இருக்கும் சுஸூகி ஜிக்ஸர் மற்றும் யமஹா FZ V2.0 ஆகிய இரண்டு பைக்குகளில்  எதை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது. எனக்கேற்ற பைக்கைப் பரிந்துரையுங்கள்.

- முரளி கார்த்திக், கரூர்.


நீங்கள் கூறிய இரண்டு பைக்குமே ஸ்டைலானவை என்றாலும்கூட, மைலேஜைப் பொருத்தமட்டில், நகருக்குள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 45 கி.மீ-க்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இது உங்களுக்கு ஒரு பிரச்னை இல்லை என்றால், உங்கள் உயரத்துக்கு சுஸூகி ஜிக்ஸர் சரியாக இருக்கும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. மெயில்: motor@vikatan.com