Published:Updated:

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

சர்வே: வெள்ளப் பாதிப்பு கார்கள்ராகுல் சிவகுரு, படங்கள்: எம். உசேன்

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

சர்வே: வெள்ளப் பாதிப்பு கார்கள்ராகுல் சிவகுரு, படங்கள்: எம். உசேன்

Published:Updated:
ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?
ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

வை பண்டிகைக் கால விற்பனையில் உள்ள தள்ளுபடி ஆஃபர்கள் அல்ல! இது ஆன்லைன் ஏலத்தில் கிடைக்கும் சொகுசு கார்களின் அடிப்படை விலைகள்...

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? அனைத்து வசதிகளும் நிறைந்த புதிய மாருதி சுஸூகி செலெரியோ ZXI(O) மாடலின் சென்னை ஆன் ரோடு விலையே 5.90 லட்சத்தைத் தாண்டும்போது, 40 - 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள லக்ஸூரி கார்கள் மேற்கூறிய விலைக்குக் கனவில்கூடக் கிடைக்காது. ஆனால், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் இந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்ஷூரன்ஸ்

நந்தனத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு நேர்ந்த அனுபவத்தைக் கேட்டாலே நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். இத்தனைக்கும் ராமன் வைத்திருந்தது பென்ஸோ, ஆடியோ அல்ல. ஏழு ஆண்டுகளாகப் பயன்படுத்திய டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ். அந்த காரின் IDV அதாவது Insured’s Declared Value ஐந்து லட்ச ரூபாய்தான். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த காரைப் பழுதுபார்க்க, ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்று சர்வீஸ் சென்டரில் சொல்லிவிட்டார்கள்.

அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்த அவரிடம், ‘இந்த காரை சர்வீஸ் செய்வதற்குப் பதிலாக, புதிய கரோலா ஆல்ட்டிஸ் காரை வாங்கிடுங்க சார்’ என்று சர்வீஸ் சென்டரில் அட்வைஸ் சொன்னதுடன்... அவரின் பழைய ஆல்ட்டிஸ் காருக்கு ராமன் என்ன தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாரோ, அதே தொகையைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்கள்.

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனஉளைச்சலில் இருந்த ராமனுக்கு அப்போது வேறு வழி எதுவும் தென்படவில்லை. அதனால், அவர் இந்த யோசனைக்கு, ‘சரி’ என்று தலையாட்டி இருக்கிறார்.

டொயோட்டாவில் துவங்கி, ஃபோக்ஸ்வாகன், பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ  போன்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருப்பவர்களின் பலரின் நிலையும் ராமன் நிலையைப்போலத்தான் இருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களின் விலை உயர்ந்த கார்களுக்கு அதன் உரிமையாளர்கள் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் விண்ணப்பிக்க... இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இவர்களின் கார்களை இப்போது விற்பனை செய்ய ஆன்-லைன் ஏல நிறுவனங்களை அணுகி இருக்கின்றன.  ஆன்-லைன்  ஏல நிறுவனங்கள் நடத்திய ஏலத்தில்தான் முதல் பாராவில் சொன்ன விலைகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு தரம்...  இரண்டு தரம்... மூன்று தரம்!

copart.in என்ற ஆன்லைன் ஏல நிறுவனம், சென்னையை அடுத்த பெரும்புதூரில் உள்ள தனது யார்டில், சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்களை ஏல விற்பனைக்காக நிறுத்திவைத்திருந்தது.
 
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ஏல நிறுவனத்துக்கு, சென்னையில் உள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், டீலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை விற்றுத் தருவதற்கான வேண்டுகோள்கள் குவிந்து வருகின்றன. கோபார்ட் நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவு மேலாளர் ராஜீவ் கபூரிடம் இது பற்றிப் பேசியபோது, ‘‘நாங்கள் விற்பனை செய்யும் கார்களின் உரிமம் குறித்த ஆவணங்கள் பக்காவாக இருக்கும். ஆனால், விற்கப்படும் கார்களின் நிலை குறித்து நாங்கள் எந்தவிதப் பொறுப்பும் ஏற்பதில்லை!’’ எனத் தெளிவுபடுத்தினார்.

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

இத்தகைய கார்களை வாங்க விருப்பப் படும் நபர்கள், குறிப்பிட்ட அளவிலான திரும்பப் பெறக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட் [ரூ.5,000] கட்டணம் செலுத்தி, இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியில் பதிவு செய்துகொண்ட பிறகே ஏலத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜனவரி 6-ம் தேதி நடத்தப்பட்ட ஏலத்தில்தான், 2014 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 6 லட்சம் ரூபாய் துவக்க விலையிலும், 2015 ஆடி A4 நான்கு லட்சம் ரூபாய் துவக்க விலையிலும், 2012 போர்ஷே கேய்ன் 5 லட்சம் ரூபாய் என்ற துவக்க விலையிலும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன.

இந்த கார்களை வாங்குவது யார்?

‘ஆறு லட்ச ரூபாய் கொடுத்து புதிய ஸ்விஃப்ட் வாங்குவதற்குப் பதிலாக, மழையால் பாதிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் வாங்கிவிடலாமே?!’ என்று நல்லவேளையாக பொதுமக்கள் யாரும் இந்த கார்களை வாங்க முன்வரவில்லை. மாறாக, இந்த கார்களின் உதிரி பாகங்களுக்காகவே இவை வியாபாரிகளால், அதுவும் பிற மாநில வியாபாரிகளால் வாங்கப்படுகின்றன.

கோபார்ட் போலவே, செலக்ட் ஆட்டோ மார்ட் என்ற மற்றொரு ஆன்லைன் ஏல நிறுவனமும், வெள்ளம் பாதித்த கார்களை விற்பனை செய்து வருகிறது.

ஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன ?

தப்பின சின்ன கார்கள்!

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சின்ன கார்களை பலர் 10,000 - 15,000 செலவிலேயே மீட்டெடுத்துவிட்டார்கள். ஆனால், இதிலும் கணிசமானவர்களுக்கு, ‘உதிரிபாகங்கள் இல்லை’ என சர்வீஸ் சென்டர்கள் கை விரித்துவிட்ட காரணத்தினால், தங்கள் கார்களைப் பழுதுபார்க்க முடியாமல், இன்னும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.