Published:Updated:

டிசையரிலும் இப்போது AMT

டிசையரிலும் இப்போது AMT
பிரீமியம் ஸ்டோரி
டிசையரிலும் இப்போது AMT

ஃபேஸ்லிஃப்ட் : மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர் AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

டிசையரிலும் இப்போது AMT

ஃபேஸ்லிஃப்ட் : மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர் AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
டிசையரிலும் இப்போது AMT
பிரீமியம் ஸ்டோரி
டிசையரிலும் இப்போது AMT

AMT கியர்பாக்ஸை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை, மாருதி சுஸூகியையே சேரும். செலெரியோ, ஆல்ட்டோ K10, வேகன்-ஆர் ஆகிய பெட்ரோல் ஹேட்ச்பேக் கார்களில் இதனைப் பொருத்தி ஆழம் பார்த்தது மாருதி சுஸூகி. வாடிக்கையாளர்கள் இதை ஏற்றுக்கொண்டதால், டிசையர் டீசல் மாடலிலும் தற்போது AMT கியர்பாக்ஸைச் சேர்த்துள்ளது. கியர்பாக்ஸ்தான் மாறியுள்ளதே தவிர, அதே 1,248 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின்தான்.

டிசையரிலும் இப்போது AMT
டிசையரிலும் இப்போது AMT

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைப்போலவே இதுவும் 74bhp@4,000rpm பவரையும், 19.37 kgm@2,000 rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும், அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டுதான் AMT கியர்பாக்ஸை வடிவமைத்துள்ளது மாருதி சுஸூகி. இந்த காருக்குச் சரியான போட்டியாளர், டாடா ஜெஸ்ட்தான். ஏனெனில், இதில் இருப்பதும் ஃபியட்டின் இன்ஜின் மற்றும் AMT கியர்பாக்ஸ்தான். ஆனால், ஜெஸ்ட்டின் பவர் 89bhp. டிசையரில் கியர் ஷிஃப்ட் ஆகும் முறை மற்ற AMT பொருத்தப்பட்ட மாருதி கார்களைப்போலவே இருக்கிறது. டிசையர், டர்போ லேக்குக்குப் பெயர் பெற்ற கார். ஆனால், அது AMT கியர்பாக்ஸால் ஓரளவுக்குச் சரிசெய்யப்பட்டிருக்கிறது. இதனால், நெருக்கடியான சாலைகளில் பயணிப்பது எரிச்சலை ஏற்படுத்தவில்லை. பெர்ஃபாமென்ஸில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆட்டோமேட்டிக் மோடில் காரை இயக்கும்போது, 2,200 rpm-ல் கியர் ஸ்மூத்தாக மாறுவதை உணர முடிகிறது. மேனுவலாக கியர்களை மாற்றுவதும் துரிதமாக நடக்கிறது. விரட்டி ஓட்டினால், 4,500 rpm வரை கியர் மாறாமல் இன்ஜின் ரெவ் ஆகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கார் என்றால், 5,200 rpm வரை இன்ஜின் ரெவ் ஆகும்.

டிசையரிலும் இப்போது AMT

இதுவே ஜெஸ்ட் காரில் 4,200 rpm வேகத்தை எட்டியதுமே கியர் தானாக மாறும். தவிர, ஜெஸ்ட்டில் இருக்கும் ஸ்போர்ட் மோடு டிசையரில் இல்லை. ஆனால், இருக்கின்ற பவரை டெலிவரி செய்யும் விதத்தில் டிசையர் ஸ்கோர் செய்கிறது. மேலும், செலெரியோவில் இருக்கும் AMT உடன் ஒப்பிடும்போது, டிசையரில் இருக்கும் AMT கியர்பாக்ஸ் மேம்பட்டிருக்கிறது. ஆனால், முன்னால் செல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்காக ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தையும் காட்டினால், கியர்கள் தானாகக் குறைந்தாலும், பவர் உடனடியாக வர மறுக்கிறது.

AMT கியர்பாக்ஸை விலை உயர்ந்த ZDi வேரியன்ட்டில் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது மாருதி சுஸூகி. இதனால், காரின் விலையை மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது, சற்று அதிகமாக  இருக்கிறது. ஆனால், நகர்ப்புறத்தில் காரை ஓட்டுவது எளிதாகி இருப்பதால், விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.