Published:Updated:

இது பல்க் போட்டி!

இது பல்க் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
இது பல்க் போட்டி!

ஒப்பீடு : எண்டேவர் Vs ட்ரெயில்பிளேஸர் Vs பஜேரோ ஸ்போர்ட் Vs ஃபார்ச்சூனர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

இது பல்க் போட்டி!

ஒப்பீடு : எண்டேவர் Vs ட்ரெயில்பிளேஸர் Vs பஜேரோ ஸ்போர்ட் Vs ஃபார்ச்சூனர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:
இது பல்க் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
இது பல்க் போட்டி!

ஸ்யுவி என்று சொன்னால்... சாலையை  ஆக்ரமிக்கும் சைஸ், ஏழு பேர் சொகுசாகப் பயணிக்கக்கூடிய வசதி, கரடுமுரடான தோற்றம், ‘என் கார்; என் சாலை’ என்ற உணர்வுகள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் ‘மைண்ட் வாய்ஸ்.’ இந்த ஃபார்முலாவை அப்படியே பின்பற்றி வந்தவைதான் செவர்லே ட்ரெயில்பிளேஸர், பஜேரோ ஸ்போர்ட், ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள். இதில், ஃபோர்டு எண்டேவர் புத்துணர்வு பெற்றுவந்திருக்கிறது.

இந்த கம்பாரிஸனுக்காக, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதில், பஜேரோ ஸ்போர்ட் மற்றும் ட்ரெயில்பிளேஸர் ஆகிய இரண்டு கார்களின் ஆட்டோமேட்டிக் மாடலில், டூவீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கின்றன. எண்டேவரில் ஆட்டோமேட்டிக் மாடல் 4 வீல் டிரைவ் மாடல் கிடைக்கிறது. ஃபார்ச்சூனரில் 3.0 லிட்டர் இன்ஜின் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடல், இந்த கம்பாரிஸனில் பங்கேற்கிறது.

இது பல்க் போட்டி!

டிஸைன்

நான்கு எஸ்யுவி கார்களுமே உயரமான தோற்றத்தைக்கொண்டவை. ரியர்வியூ மிரரில், இவற்றில் ஒன்றைப் பார்த்தாலே வழிவிட வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு மிரட்டல் மாஸ் கார்கள் இவை. இதில், எண்டேவர் மற்றும் ட்ரெயில்பிளேஸர் ஆகிய இரண்டும்தான் மிகப் பெரிய காராகத் தெரிகின்றன. இதற்கு, பானெட் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம். ஃபோர்டு எண்டேவர், ஒரு டேங்க்போல இருந்தாலும் சிக்கல் இல்லாத டிஸைன்.

கேட்கக் கேட்க எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுப் பிடிக்கிறதோ, அதேபோல செவர்லே ட்ரெயில்பிளேஸர் பார்த்தவுடன் வசீகரிக்கவில்லை. ஆனாலும், பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது. ஃபார்ச்சூனர், இன்னும் ஸ்டைலாகத் தோன்றுவதற்குக் காரணம், க்ரோம்தான். பஜேரோ ஸ்போர்ட் காரின் டிஸைனுக்கு வயதாகிவிட்டது.

உள்ளே

புதிய அறிமுகம் என்பதால், ஃபோர்டு எண்டேவரின் உள்பக்கம்தான் மாடர்ன். சாஃப்ட் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ள டேஷ்போர்டு வெகு அழகு. பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களும், வண்ணங்களும் கச்சிதமாக இருக்கின்றன. இரண்டு திரைகள்கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் , பெரிய டச் ஸ்க்ரீனும் விமானத்தின் காக்பிட்டுக்குள் அமர்ந்திருக்கிற உணர்வைத் தருகின்றன. பொருட்கள் வைக்க இடங்களும் அதிகம். முன்னிருக்கைகள் சொகுசானவை.

ட்ரெயில்பிளேஸர் கேபின், தரத்தில் ஃபோர்டு அளவுக்கு இல்லை. ஆனால், ஒரு மாடர்ன் காரில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தருகிறது. கமாரோ காரை நினைவூட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் சூப்பர். டவின் க்ளோவ் பாக்ஸ் செட்-அப் அருமை. கிளைமேட் கன்ட்ரோலை வட்டமான குடுவைக்குள் வைத்ததும் நைஸ் டச். டேஷ்போர்டு தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலை தெளிவாகத் தெரிகிறது. முன்பக்க இருக்கைகளுக்கு உயர்தர லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!

எண்டேவர், ட்ரெய்ல்பிளேஸர் ஆகியவற்றை ஓட்டிவிட்டு, பஜேரோ ஸ்போர்ட் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களுக்குள் நுழைந்தால், இவை பழைய கார்களாகத் தோன்றுகின்றன. பஜேரோவில் சென்டர் கன்சோலுக்கு மேலே உள்ள மல்ட்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே டெம்பரேச்சர், ரியல் டைம் மைலேஜ் போன்ற தகவல்களைக் காட்டினாலும், ‘டாட் மேட்ரிக்ஸ்’ டிஸ்ப்ளே மிகப் பழையதாகத் தெரிகிறது. ஆனால், முன் இருக்கைகள் நல்ல சப்போர்ட் அளிக்கின்றன.

ஃபார்ச்சூனர் டேஷ்போர்டில் இருக்கும் பிளாஸ்டிக், இனோவாவை நினைவூட்டுகிறது. சென்டர் கன்ஸோல் டச் ஸ்க்ரீன், ஒட்டுமொத்த டிஸைனில் இருந்து தனித்து நிற்பது ரசிக்கும்படி இல்லை.
வசதிகள் இந்த நான்கு கார்களிலுமே தலா ஏழு இருக்கைகள். ஆனால், இரண்டாவது, மூன்றாவது இருக்கைகளின் சொகுசு விஷயத்தில், நான்கும் நாலு விதம். எண்டேவரின் நடுவரிசை இருக்கைகள் தாழ்வாக அமைக்கப்பட்டிருந்தாலும், சீட்டிங் பொசிஷன் சிறப்பாக உள்ளது. டைட்டானியம் வேரியன்ட்டில் சன் ரூஃப் இருப்பதால், உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் குறைவு. அதேபோல், நடு இருக்கையில் அமர்பவர்களுக்கு நடுவே உள்ள டனல் இடைஞ்சலாக இருக்கும். எண்டேவரின் மூன்றாவது வரிசை இருக்கை நன்றாக இல்லை. இருக்கைக்குச் செல்வதும் வசதியாக இல்லை. இடவசதியும் குறைவுதான். பெரியவர்களுக்கு எண்டேவரின் மூன்றாவது வரிசை இருக்கைகள் மிகச் சிரமமாக இருக்கும்.

செவர்லே ட்ரெயில்பிளேஸரில்தான் மூன்றாவது வரிசை இருக்கைகள் உபயோகமாக இருக்கின்றன. இரண்டாவது வரிசை இருக்கைகள் அருமை. குஷன் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. கால்களுக்கும், தலைக்கும் இடவசதி மிக அதிகமாகவே இருக்கிறது. தளம் தட்டையாக இருப்பதால், நடுவே உட்கார்பவருக்கு இடைஞ்சல் இல்லை. ஆனால், இந்த நான்கு கார்களில், ட்ரெயில்பிளேஸரில் மட்டும்தான் நடுவரிசை இருக்கைகளைத் தள்ளி அமைக்க முடியாது.

ஃபார்ச்சூனரின் நடுவரிசை இருக்கைகளில் இடவசதி அதிகமாகவே உள்ளன. இருக்கையின் சொகுசு நன்றாகவே இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளில் ஹெட்ரூம் குறைவாக இருந்தாலும், சமாளிக்கலாம்.

இந்த நான்கு கார்களில், பஜேரோவில் மூன்றாவது வரிசை இருக்கையை எளிதாக அடையலாம். ஆனால், சீட்டிங் பொசிஷனும், ஹெட்ரூமும் சுமார்தான். இரண்டாவது வரிசையில் மூன்றுபேர் சொகுசாகச் செல்ல முடியாது.

ஃபார்ச்சூனரில்தான் லக்கேஜை எடுத்துச் செல்ல அதிக இடம் உண்டு. ஆனால், எண்டேவரில்தான் மூன்றாவது வரிசை இருக்கைக்கு பவர்டு ஆபரேஷன் இருக்கிறது.

இன்ஜின், பெர்ஃபாமென்ஸ்

இரண்டு டன் எடை இருந்தாலும், 0-100 கி.மீ வேகத்தை 10 விநாடிகளுக்குள் அடையும் ஒரே கார், செவர்லே ட்ரெயில்பிளேஸர்தான். 20-80 கி.மீ, 40-100 கி.மீ வேகங்களிலும் ட்ரெயில்பிளேஸர்தான் பெஸ்ட். இதன் 4 சிலிண்டர், 2.8 லிட்டர் டியூராமேக்ஸ் இன்ஜின் 3,600 ஆர்பிஎம்-ல் 197 bhp சக்தியையும், 2,000 ஆர்பிஎம்-ல் 50.9 kgm டார்க்கையும் அளிக்கிறது. இந்த நான்கு கார்களில் மிக ஜாலியான இன்ஜின் என்றால், ட்ரெயில்பிளேஸர்தான். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே சிறப்பாக உள்ளது கார்.

இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!

ஃபோர்டு எண்டேவரில் இருப்பது 5 சிலிண்டர், 3.2 லிட்டர் இன்ஜின். இதுவும் 197 bhp (3,000 ஆர்பிஎம்) சக்தியையும், 47.9 kgm டார்க்கையும் அளிக்கிறது. 3.2 லிட்டர், 4X4 எண்டேவரின் எடை 2,394 கிலோ. இதுதான் இங்கே எடை அதிகமான கார். ஆனால் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவும், திராட்டில் ரெஸ்பான்ஸ் நன்றாகவும் இருக்கின்றன. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இங்கே மிக அமைதியான இன்ஜின் என்றால், அது எண்டேவர்தான்.

இந்த நான்கு கார்களில், ஃபார்ச்சூனரின் 3.0 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின்தான் அதிக சத்தம் போடுகிறது. குறிப்பாக, ஃபேன் சத்தம் மிக அதிகம். ஆனால், வேலையில் ஃபார்ச்சூனர் இன்ஜின் கில்லி. பவர் (167 bhp) குறைவு என்றாலும், ஓட்டும்போது ஸ்ட்ராங்கான இன்ஜின் என்ற உணர்வைத் தருகிறது. பஜேரோ ஸ்போர்ட்டில் 4 சிலிண்டர், 2.5 லிட்டர் இன்ஜின் 175 bhp சக்தியையும், 35.7 kgm டார்க்கையும் அளிக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே சீரான பவர் டெலிவரி கொடுக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை மேனுவல் மோடில் இயக்கினால், 4,900 ஆர்பிஎம் வரை சென்று கியர் மாற்ற முடியும். நான்கு எஸ்யுவி கார்களில் பேடில் ஷிஃப்ட் கொண்ட ஒரே எஸ்யுவி, பஜேரோதான்.

இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!

ஓட்டுதல் தரம், கையாளுமை

எண்டேவரின் எலெக்ட்ரிக்கல்- அசிஸ்டட் ஸ்டீயரிங், எல்லா வேகங்களிலும் சிறப்பாக இருக்கிறது. க்ரிப்பும் மற்ற எஸ்யுவி கார்களைவிட நன்றாக உள்ளது. வளைவுகளில் மேடு பள்ளங்கள் இருந்தாலும் தடுமாறாமல் செல்கிறது எண்டேவர். பாடி ரோல் இருந்தாலும், ஸ்டெபிலிட்டி நன்றாக இருக்கிறது. மேலும், சஸ்பென்ஷனில் இருந்து சத்தம் மிகக் குறைவே.

ஓட்டுதல் தரத்தில் ட்ரெயில்பிளேஸர் சுமார்தான். கார் மேலும் கீழுமாக அதிகம் ஆட்டம் போடுகிறது. திருப்பங்களில் நம்பிக்கையாக வளைத்து ஓட்டலாம் என்றாலும், பாடி ரோல் அதிகம். காரின் சைஸ் பெரிதாக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

ஃபார்ச்சூனரின் ஸ்டீயரிங் எடை அதிகமாக இருப்பதால், குறைந்த வேகங்களில் பயில்வான் பலம் வேண்டும். மேலும், குறைந்த வேகங்களில் கார் அதிகமாக ஆடிச் செல்கிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க, இது குறைந்தாலும் எண்டேவர் அளவுக்குச் சிறப்பாக இல்லை. கையாளுமையிலும் ஃபார்ச்சூனர் அன்ஃபார்ச்சூனேட்!

இது பல்க் போட்டி!
இது பல்க் போட்டி!

பஜேரோவை ஓட்டும்போது பெரிய கார் என்று உணர முடிவதில்லை. பாடி ரோல் அதிகமாக இருந்தாலும், ஸ்டீயரிங் ஃபீட்பேக் சிறப்பாக இருக்கிறது. மெதுவான வேகங்களில் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருந்தாலும், மேடு பள்ளங்களில் சுமார்தான்.

ஆஃப் ரோடிங்கைப் பொறுத்தவரை, இங்கே ரியர் வீல் டிரைவ் கார்களாக இருக்கும் ட்ரெயில்பிளேஸரும், பஜேரோ ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக்கும் பாவம்தான். ஆனால், ஓரளவு சமாளிக்கின்றன. எண்டேவரும் பார்ச்சூனரும்தான் ஆஃப் ரோடிங்குக்கு ஏற்றவை. இரண்டு கார்களுமே லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் கொண்டிருக்கின்றன. ஃபார்ச்சூனரில் மெக்கானிக்கல் டைப் கியர் செலெக்டர் இருக்க, எண்டேவரிலோ ரோட்டர் டயல் செலெக்டர் சூப்பராக இருக்கிறது. மேலும் பிரேக்கிங், டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளன. டார்க் டிஸ்ட்ரிபியூஷன், ரோல் ஆங்கிள், பிட்ச் ஆங்கிள் ஆகியவையும் காட்டப்படுகிறது.

இது பல்க் போட்டி!

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் விலை, 31.23 லட்சம். இதுதான் இங்கே விலை குறைந்த எஸ்யுவி. இதன் ப்ளஸ் பாயின்ட், இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸ். ஆனால் வயதாகிவிட்டதே! பஜேரோ, முன்புபோல பார்க்க துள்ளலாகத் தெரியவில்லை. கேபின் டிஸைன் ரொம்பவே பழசு. பிறகு, மிட்சுபிஷியின் நம்பகத்தன்மை? புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகமாகியும் இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

டொயோட்டாவிடம் உள்ள புதிய ஃபார்ச்சூனர், இங்கே 2017-ல்தான் விற்பனைக்கு வரும். ஆனால், புதிய போட்டியாளரான எண்டேவர் வந்தபிறகு, பழைய ஃபார்ச்சூனரால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம். இன்ஜின், நல்ல இடவசதி, ஆஃப் ரோடிங் என ஃபார்ச்சூனர் நல்ல ப்ளஸ் பாயின்ட்டுகளைக்கொண்டிருந்தாலும் தரத்திலும், ரிஃபைன்மென்ட்டிலும் மைனஸ்தான். 33.36 லட்ச ரூபாய்க்கு ஃபார்ச்சூனர் புது கார் இல்லை!

இது பல்க் போட்டி!

செவர்லே ட்ரெயில்பிளேஸர் 32.44 லட்சம் ரூபாய். 4 வீல் டிரைவ் இல்லாததை ஒரு மைனஸாக நீங்கள் கருதாவிட்டால், ஒரு நல்ல காராக வலம் வருகிறது ட்ரெயில்பிளேஸர். பெர்ஃபாமென்ஸ் செம சூப்பர். கேபின் இடவசதியும் மிக சிறப்பாக இருக்கிறது. இங்கே ஒரு நல்ல 7-சீட்டர் காரும் இதுதான்.

ஃபோர்டு எண்டேவர்... அழகாக, அம்சமாக இருக்கிறது. கேபின் தரம் டாப் கிளாஸ். வசதிகளுக்கும் குறைவில்லை. பெர்ஃபாமென்ஸில் கில்லி இல்லை. ஆனால், ஓட்டும்போது அது தெரியவில்லை என்பது ப்ளஸ். கையாளுமை அருமை. ஓட்டுதல் தரம், ரிஃபைன்மென்ட் என முக்கிய விஷயங்களில் ஸ்கோர் செய்கிறது. மூன்றாவது இருக்கைக்கு மைனஸ் மார்க். விலை உயர்ந்த மாடல் உத்தேசமாக 34.5 லட்சம் ரூபாய். பரவாயில்லை... நல்ல காருக்கு நல்ல விலை!