Published:Updated:

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்!

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா KUV1OO கா.பாலமுருகன்

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா KUV1OO கா.பாலமுருகன்

Published:Updated:
விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்!

திகமாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் சென்மென்ட்டில் புதிதாக ஒரு காரை அறிமுகப்படுத்தினால், ‘இது அதை வெல்லுமா, முந்துமா?’ என விவாதங்களும் ஒப்பீடுகளும் அனல் பறக்கும். ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் ‘வெரிட்டோ வைப்’ எனும் ஒரே ஒரு காரை வைத்திருக்கும் மஹிந்திரா, இந்தப் போட்டியில் நுழையும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹேட்ச்பேக் செக்மென்ட்டையே நடுங்க வைக்கும் அளவுக்கு KUV100 எனும் புத்தம் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்?


இது காம்பேக்ட் ஹேட்ச்பேக்போல இருந்தாலும், இதை மினி எஸ்யுவி என்று சொல்லவே மஹிந்திரா விரும்புகிறது.  அதனால், இதை கூல் யுட்டிலிட்டி வெஹிக்கிள் (KUV) என்கிறது. காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டில் நிறைய எஸ்யுவி கார்கள் இருக்கின்றன. ஆனால், அதில் இருந்து தனித்துவமாக ஹேட்ச்பேக் கார்களோடு போட்டி போட இருக்கிறது இந்த கூல் எஸ்யுவி.

டிஸைன்

மஹிந்திராவின் டிரேட் மார்க் டிஸைன்தான் என்றாலும், தோற்றத்தில் மிரட்டுகிறது KUV100. முன்பக்கம் இருந்து பார்த்தால் உயரமாக இருக்கிறது. மிக அகலமான கார். காருக்கு ஆக்ரோஷமான தோற்றத்தைத் தருவதே இதன் கிரீஸ் கோடுகள்தான். பேனட்டில் இருக்கும் வளைவு நெளிவுகளும் கிரில் டிஸைனும் பம்பரும் எஸ்யுவி காருக்கான கம்பீரத்தை அளிக்கின்றன. டே டைம் ரன்னிங் லைட்ஸுடன் இருக்கும் ஹெட்லைட் டிஸைன், பக்கவாட்டு பேனலின் கதவு வரை நீள்வது காருக்குத் தனித்துவத்தை அளிப்பதுடன், காரின் டிஸைனுடன் அழகாகப் பொருந்தியிருக்கிறது. ஹெட்லைட் முடிவில் நீளும் கோடு முன்பக்கக் கதவில் சட்டென மறைவது வெகு அழகு. டூயல் டோன் பம்பரும், பனி விளக்குகளின் வடிவமும், ‘இது அகலமான கார்’ என்பதைக் காட்டுகின்றன.

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ்  -  கூல் கார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்கவாட்டில் இருந்து பார்த்தால்தான் இது காம்பேக்ட் கார் என்பதே தெரிகிறது. பக்கவாட்டு கண்ணாடிகள் எஸ்யுவி கார்களைப் போலவே புஷ்டியாகவும், வீல் ஆர்ச்சுகள் அடக்கமாகவும் இருக்கின்றன. கதவுகளுக்கும் வீல் ஆர்ச்சுகளுக்கும் கீழே உள்ள கிளாடிங், காரின் டிஸைனுடன் அழகாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், ஸ்பைடர் டிஸைன் அலாய் வீல்கள் அழகாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் வீல் பொருத்தி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பின்பக்கக் கதவின் கைப்பிடி, செவர்லே பீட் காரில் இருப்பதுபோல குவார்ட்டர் க்ளாஸ் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பின்பக்கத்தில் காரின் கூரையில் இருந்து இறங்கும் ரூஃப் ரெயில், ஸ்பாய்லர், டபுள் பேரல் டெயில் லைட்ஸ், பின்பக்கப் பனி விளக்குகளின் குரோம் ஃபினிஷ், அகலமான மட் ஃப்ளாப் டிஸைன் எஸ்யுவி காருக்கான அந்தஸ்தை அளிப்பதுடன், ஸ்போர்ட்டியான லுக் தருகிறது.

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ்  -  கூல் கார்!

உள்ளே

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், சட்டென சின்ன காரில்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. காரணம், டேஷ்போர்டின் டிஸைனும் அமைப்பும் அதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், காருக்குள் தாராளமாகப் புழங்க இடவசதி இருப்பது தெரிகிறது. டூயல் டோன் மேட் ஃபினிஷ் டேஷ்போர்டு செம ஸ்டைலிஷ். அதில், சில்வர் பூச்சும் கறுப்பு வண்ண வேலைப்பாடுகளும் காரின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. கியர் லீவர், டேஷ்போர்டிலேயே இணைந்துள்ளதால், முன் வரிசை இருக்கைகளில் நிறைய இடவசதி இருப்பதுபோலத் தோற்றமளிக்கிறது. ஜாய் ஸ்டிக் போல இருக்கும் கியர் லீவர் எளிமையாக இருப்பதுடன், பயன்படுத்தவும் வசதியாகவும் இருக்கிறது. ஹேண்ட் பிரேக், டட்ஸன் காரில் இருப்பதுபோல டேஷ்போர்டிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது. டிரைவர் சீட்டில் அமர்ந்தால், சாலையை நன்றாகப் பார்க்க முடிகிறது. டிரைவிங் பொசிஷன் உயரமாக இருப்பது, பெரிய காரில் உட்கார்ந்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ரிலாக்ஸாக கால் வைத்துக்கொள்ள டெட் பெடல் கொடுக்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டில் இருக்கும் பட்டன்கள், பயன்படுத்த வசதியாகவும் கைக்கு எட்டும் விதத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாட்டில் ஹோல்டர்கள் எல்லா கதவுகளிலும் இருக்கின்றன. சீட்டின் கீழே, பொருட்கள் வைத்துக்கொள்ள ட்ரே ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கேபின் ஃப்ளோரில் ஓர் இடத்தில் பள்ளமாக வடிவமைத்து அண்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், கூலிங் க்ளாஸ் வைத்துக்கொள்ள ரூஃப்பில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ்  -  கூல் கார்!

KUV100 காரின் மற்றொரு சிறப்பம்சம், 6 பேர் பயணிக்கும் வகையில் 6 சீட்டர் அமைத்திருப்பது. கியர் லீவர், ஹேண்ட் பிரேக் ஆகியவை டேஷ்போர்டுக்கு இடம் பெயர்ந்து விட்டதால், நடுவே மிச்சமான இடத்தில் ஒரு சீட்டை இணைத்துவிட்டது மஹிந்திரா. இதை தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற சமயங்களில் டிரைவரும் கோ டிரைவர் சீட்டில் இருப்பவரும் ஆர்ம் ரெஸ்ட்டாகப் பயன்படுத்தலாம். தவிர,  5 சீட்டர் கார் போதும் என்பவர்களுக்கு அந்த ஆப்ஷனும் உண்டு.

முன்பக்கம் பக்கெட் சீட்ஸ்; பின்பக்கம் பெஞ்ச் போன்ற சீட்தான். அதில்தான் மூன்று பேர் உட்கார வேண்டும். சராசரியான மூவர் உட்கார்ந்தால் இடநெருக்கடி எதுவும் இல்லை. ஆனால், பருமனான ஒருவர் உட்கார்ந்தாலும் பின்பக்கத்தில் மூன்று பேர் வசதியாகப் பயணிப்பது சிரமமாகிவிடும். பின் சீட்டில் இருவர்தான் பயணிக்கிறார்கள் என்றால், நடுவே உள்ள இருக்கையை மடக்கி, இருவரும் ஆர்ம் ரெஸ்ட்டாகப் பயன்படுத்த முடியும்.

மாருதி ஸ்விஃப்ட், டிஸையர் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 ஆகிய கார்களுக்குப் போட்டியாக KUV100 காரை பொசிஷன் செய்கிறது மஹிந்திரா!

விலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ்  -  கூல் கார்!

ஆனால், KUV100 காரின் நீளம் வெறும் 3,675 மிமீ மட்டுமே! அதாவது, ஸ்விஃப்ட் 3,850 மிமீ, கிராண்ட் i10 3,765 நீளம் கொண்டுள்ளன. ஆனால், அகல உயரங்களில் ஸ்விஃப்ட்டைவிட 20 மிமீ அகலமாகவும் 125 மிமீ உயரமாகவும் இருக்கிறது. இது மற்ற போட்டி கார்களைவிடவும் அகலமாகவும் உயரமாகவும் இருக்கிறது. 
 
சிறப்பம்சங்கள்

KUV100 காரின் எல்லா வேரியன்ட் களிலும் ஏபிஎஸ் பிரேக்ஸ் மற்றும் இபிடி ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. பட்ஜெட் காரில் பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும் என்றால், கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை மஹிந்திரா முதன்முறையாகத் தகர்த்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு வேரியன்ட்டின் ப்ளஸ் மாடலிலும் இரண்டு காற்றுப் பைகள் அளிக்கிறது.

6 ஸ்பீக்கர் இன்ஃபோடெயின்மென்ட்ஸ் சிஸ்டத்தில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ, ப்ளூடூத், ஆக்ஸ் உடன் மொபைல் போனை இணைத்துக்கொள்ள முடியும். எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்டீயரிங்கை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிவதுடன், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்கு எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட், 4 டோர் பவர் விண்டோஸ், இம்மொபைலைஸர், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம், ஃபாலோ மி ஹோம் ஹெட் லைட்ஸ் ஆகிய வசதிகள் இருக்கின்றன.

இன்ஜின்

mFALCON G80 ஆல் அலுமினியம் டுயல் வேரியபிள் வால்வு டைமிங் (VVT) பெட்ரோல் இன்ஜின், 1,198 சிசி கொள்ளளவு கொண்டது. இது, 82bhp சக்தியை 5,500 ஆர்பிஎம்-மிலும், 11.5 kgm டார்க்கை 3,600 ஆர்பிஎம்-மிலும் அளிக்கும் என்கிறது மஹிந்திரா. அதேபோல், mFALCON D75 டர்போ சார்ஜ்டு காமென் ரெயில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டீசல் இன்ஜின், 1,198 சிசி கொள்ளளவு கொண்டது. இது, 77bhp சக்தியை 3,750 ஆர்பிஎம்-லும், 19kgm டார்க்கை 2,250 ஆர்பிஎம்-மிலும் அளிக்கும் என்கிறது.

பெட்ரோல் மாடலில் மைக்ரோ ஹைபிரிட் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் இருக்கிறது. டீசல் மாடலில் எக்கோ/பவர் மோடு பட்டன் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 18.15 கி.மீ, டீசல் இன்ஜின் லிட்டருக்கு 25.32 கி.மீ மைலேஜ் அளிக்கும் என்கிறது மஹிந்திரா. இதை முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் உண்மையான மைலேஜ் தெரியவரும்.

விலை

பெரும்பாலும் விலை விஷயத்தில்தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாறும். ஆனால், அதிலும் மஹிந்திரா சிக்ஸர் அடித்து விட்டது. ஆம், போட்டியாளராக பொசிஷன் செய்யும் கார்களைவிட விலை குறைவாக, KUV100 காரின் விலையை நிர்ணயித்துள்ளது மஹிந்திரா.

மாருதி ஸ்விஃப்ட் LXI, ஹூண்டாய் கிராண்ட் i10 Era மாடல்களின் விலை 5.60 லட்சம்; KUV100 காரின் K2 வேரியன்ட்டின் சென்னை ஆன்ரோடு விலை 5.20 லட்சம்தான். அதேபோல், டாப் எண்ட் மாடல் ஸ்விஃப்ட் ZXI விலை 7.45 லட்சம். கிராண்ட் i10 Asta(O) மாடலின் விலை 6.95 லட்சம். KUV100 K8 வேரியன்ட்டின் விலை 6.98 லட்சம் மட்டுமே! டீசல் மாடலுடன் விலைகளை ஒப்பிட்டால், 50,000 முதல் 80,000 ரூபாய் வரை விலை குறைவாக இருக்கிறது மஹிந்திரா KUV100.

ஆனால், விலை விஷயத்தில் போட்டி கார்களைவிடக் குறைவாக இருந்தாலும் பெர்ஃபாமென்ஸ் விஷயத்திலும் கில்லியாக இருந்தால்தான், போட்டியாளர்கள் மிகுந்த இந்த செக்மென்ட்டில் KUV100 தாக்குப் பிடிக்க முடியும். அது, நாம் டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, காரின் பெர்ஃபாமென்ஸ் எப்படி என்பது தெரிந்துவிடும்!