Published:Updated:

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ஃபேஸ்லிஃப்ட்: செவர்லே க்ரூஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ஃபேஸ்லிஃப்ட்: செவர்லே க்ரூஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ந்தியாவில் விற்பனை செய்யப்படும் க்ரூஸ் செடானுக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ளது செவர்லே. முற்றிலும் புதிய ஃப்ளாட்பாட்மில் தயாரிக்கப்பட்ட க்ரூஸ், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் காரை ப்ரெஷ் ஆகக் காட்டுவதற்கான முயற்சியாக, இந்த ஃபேஸ்லிஃப்ட் பார்க்கப்படுகிறது. காரின் முன்பக்கத்தில் செவர்லே ஸ்பெஷல் ஸ்ப்ளிட் கிரில்லில் க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பம்பருக்கு புரொஜெக்டர் பனி விளக்குகள் மற்றும் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஆகியவை அழகு சேர்க்கின்றன. க்ரூஸின் பின்பக்கத்தில் லிப் ஸ்பாய்லர் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் அதிக அளவில் இல்லாவிட்டாலும், கார் பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கிறது. காரின் கேபினில், MYLINK டச் ஸ்கிரீன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆக்ஸ், யுஎஸ்பி, ப்ளூடூத், STITCHER இன்டர்நெட் ரேடியோ, வாய்ஸ் ரெககனைஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இவையெல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் இல்லையென்றாலும், டச் ஸ்கிரீன் துரிதமாக இயங்குகிறது.

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!
க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ஆனால், டிரைவர் சீட்டில் இருந்து இதனை இயக்குவது வசதியாக இல்லை. ரிவர்ஸ் கேமரா வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும், கார் கேபினின் பின்பக்கத்தில் ஏ.சி வென்ட் இல்லாதது நெருடல். நாங்கள் டெஸ்ட் செய்த கார் டாப் வேரியன்ட்டான LTZ என்பதால், சன் ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் (டிரைவர் இருக்கை மட்டும்), 4 காற்றுப் பைகள், லெதர் இருக்கைகள், கீலெஸ் கோ என சிறப்பம்சங்கள் உண்டு. இருக்கைகள் சொகுசாக இருந்தாலும், இடவசதி அதிகம் இல்லாதது மைனஸ். மற்றபடி தொழில்நுட்பரீதியாக எவ்வித மாற்றங்களும் க்ரூஸில் செய்யப்படவில்லை. இதிலுள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 164bhp பவரை ஸ்மூத்தாக வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு திருப்தியளிக்கிறது. ஆனால், இதன் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, இந்த விலையில் கிடைக்கும் மற்ற கார்களுடன் போட்டியிடும் வகையில் இல்லை. மேலும், க்ரூஸின் விலை மற்றும் இன்ஜின் பவர் காருக்கு பலம் சேர்த்தாலும், கேபின் தரம் மற்றும் இடவசதி ஆகியவற்றில் முன்னேற்றம் தேவை. அடுத்த ஆண்டு புதிதாக வர இருக்கும் க்ரூஸாவது அந்தக் குறையைத் தீர்த்துவைக்கும் என நம்பலாம்!