Published:Updated:

தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!
பிரீமியம் ஸ்டோரி
தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

ஃபேஸ்லிஃப்ட்: டாடா சஃபாரி ஸ்டார்ம் தொகுப்பு: ராகுல் சிவகுரு

தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

ஃபேஸ்லிஃப்ட்: டாடா சஃபாரி ஸ்டார்ம் தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!
பிரீமியம் ஸ்டோரி
தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

டொயோட்டா, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பாளர்கள்  ஃபேஸ்லிஃப்ட் செய்யும்போது, அதை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் வடிவமைத்து இருப்பார்கள். ஆனால் டாடா இதில் இருந்து விதிவிலக்காக, காரின் அடிப்படை டிஸைனில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாவிட்டாலும், மெக்கானிக்கலாக [சேஸி, இன்ஜின், சஸ்பென்ஷன்) காரை அப்டேட் செய்யும். அதற்கான சிறந்த உதாரணம்தான், டாடா சஃபாரி ஸ்டார்ம். ஏனெனில், 1998-ல் அறிமுகமான மாடலுடன் இப்போதைய ஸ்டார்ம் மாடலை ஒப்பிட்டால், மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புலப்படும்.

தற்போது இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்தி, சஃபாரியில் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா. டர்போ சார்ஜர், பிஸ்டன், சிலிண்டர் ஹெட், உறுதியான சிலிண்டர் ப்ளாக் ஆகியவை காரணமாக, 148bhp-ல் இருந்து 154bhp ஆக பவர் உயர்ந்து, 32.6kgm-ல் இருந்து 40.8kgm ஆக அதிகரித்திருக்கிறது. கூடுதல் பவரைத் தாங்கும் வகையில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுக்குப் பதிலாக முற்றிலும் புதிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

0 - 100 கி.மீ வேகத்தை 12.84 விநாடிகளிலேயே எட்டிப் பிடிக்கிறது சஃபாரி ஸ்டார்ம். இது பழைய காரை விட சுமார் 2 விநாடிகள் குறைவு. மேலும், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், நன்கு ரெவ் ஆகிறது. அதிக டார்க் காரணமாக மிட் ரேஞ்ச்சில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருப்பதால், நெரிசலான சாலைகளில் இந்த பவர்ஃபுல் காரை ஓட்டுவது ஜாலியாக இல்லை. மேலும், கியர்பாக்ஸ் துல்லியமாக இல்லாதது மைனஸ். ஆனால், கிளட்ச் எடை குறைவாக இருப்பது ஆறுதல். அதிக வேகத்தில் இயங்கும்போது, இன்ஜின் சத்தம் எழுப்புகிறது. ஆனால், மிதமான வேகத்தில் செல்லும்போது இன்ஜின் சத்தமின்றிச் செயல்படுகிறது.

அனைத்து வேகத்திலும் ஓட்டுதல் தரம் நன்றாக இருப்பதுடன், பெரிய பள்ளங்களில் கார் இறங்கி ஏறும்போது உண்டாகும் அதிர்வுகளைக் காருக்குக் கடத்தாமல், சஸ்பென்ஷன் உள்வாங்கிக் கொள்கிறது. ஸ்டெபிலிட்டி மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை நிறைவாக இருப்பதை நம்பி திருப்பங்களில் அதிக வேகத்தில் காரைச் செலுத்தினால், பாடி ரோல் அதிகமாக இருக்கிறது. இதற்கு காரின் அதிக உயரம் மற்றும் எடையே காரணம். தவிர, சஸ்பென்ஷன் மென்மையாக இருப்பதால், திடீரென பிரேக் பிடிக்கும்போது கார் குலுங்கித்தான் நிற்கிறது. காரின் கேபினைப் பொறுத்தமட்டில் சொகுசான இருக்கைகள், அதிக இடவசதி, இரட்டை (கறுப்பு - சில்வர்) வண்ண டேஷ்போர்டு என பலங்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் XUV5OO ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, சஃபாரியின் பழைய டிஸைன் டேஷ்போர்டு உறுத்தலாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாறுமாறு பவருடன் புதிய சஃபாரி!

சென்னை ஆன் ரோடு `16.30 (4X2) - `17.95 (4X4) லட்ச ரூபாய் விலைக்கு விற்பனையாகும் சஃபாரி ஸ்டார்ம் (VX 400NM) காரில் டச் ஸ்கிரீன் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என மாடர்ன் விஷயங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரிய மைனஸ். ஆனால், சஃபாரி ஸ்டார்ம் காரின் உண்மையான விசுவாசிகள்/ரசிகர்களுக்கு, இந்த காரை வாங்குவதற்கான சரியான நேரம் இதுதான்!