Published:Updated:

திரும்பவும் விக்டர்!

திரும்பவும் விக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
திரும்பவும் விக்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் விக்டர் 110 ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

திரும்பவும் விக்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் விக்டர் 110 ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
திரும்பவும் விக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
திரும்பவும் விக்டர்!

விக்டர்... இந்தப் பெயரை எங்கேயோ கேட்டதுபோல இருக்கும். ஆம்! சுஸூகியிடம் இருந்து பிரிந்த பிறகு டிவிஎஸ் தயாரித்த முதல் பைக், விக்டர். கடந்த 2002-ல் அறிமுகமான இந்த பைக், போட்டி மிகுந்த 110சிசி மற்றும் 125 சிசி பிரிவுகளில் களமிறங்கி வெற்றிக்கொடி நாட்டியது. விற்பனை நன்றாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து வந்த பல புதிய ஸ்டைலான பைக்குகளின் அணிவகுப்பால், விக்டர் மெள்ள மெள்ள தன் இடத்தை இழந்தது. ஸ்டார் சிட்டியின் வெற்றி மற்றும் பிரீமியம் கம்யூட்டர் பைக்குக்கான தேவை ஆகியவற்றால், தற்போது 2016-ல் புதிய அவதாரத்தில் மீண்டு வந்திருக்கும் இந்த பைக்கை, ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையின் டெஸ்ட் ட்ராக்கில் ஓட்டினோம்.

டிஸைன், சிறப்பம்சங்கள்

ஒரு 110சிசி பைக்குக்கு ஏற்ற மாடர்ன் தோற்றம் இருந்தாலும், மற்ற 110சிசி பைக்குகளில் இருந்து தனித்துத் தெரியக்கூடிய டிஸைனாக இல்லை. 60 வாட் திறன்மிக்க பல்புகள், நல்ல வெளிச்சத்தை அளிக்கும் என்கிறது டிவிஎஸ். அனலாக் டேக்கோ மீட்டருடன், தெளிவான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம். அதில், டிவிஎஸ் பைக்குகளுக்கே உரித்தான ECO -
POWER மோடுகள், சர்வீஸ் இண்டி கேட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஃபீனிக்ஸ் பைக் போலவே இதிலும் HAZARD WARNING வசதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க், ஸ்டார் சிட்டியை நினைவுப் படுத்தினாலும் அதன் மூடி, ரசிக்கும்படியாக நல்ல தரத்தோடு இருக்கிறது. நீளமான சீட், உயரமான ஹேண்டில்பார், நடுவே ஃபுட் ரெஸ்ட் ஆகியவை இது கம்யூட்டர் பைக் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக க்ரோமில் பைக்கின் லோகோ செய்யப்பட்டிருப்பது கவர்கிறது.

திரும்பவும் விக்டர்!

கைப்பிடிகள், ஸ்விட்சுகள், லீவர்கள் ஆகியவற்றின் தரம் நன்றாக இருக்கின்றன.  ரியர் வியூ மிரர்கள், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. பெயின்ட் தரம் மற்றும் பைக்கின் கட்டுமானத் தரம் நிறைவாக இருக்கிறது. 6 கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக்கின் எடை போட்டியாளர்களுடன் ஒப்பிடும் வகையில், 113 கிலோ என்ற அளவில் உள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஸ்டார் சிட்டி, ஃபீனிக்ஸ் பைக்குகளைத் தொடர்ந்து, விக்டர் பைக்கிலும் ECOTHRUST சீரிஸ் இன்ஜின் [109.7சிசி] பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஃப்ளேம் பைக்கைப் போல 3 வால்வு சிஸ்டம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு 125சிசி பைக்குக்கு இணையான பவர் வெளிப்படும் என்கிறது டிவிஎஸ். இது 9.46bhp@7500rpm பவரையும், 0.96kgm@6000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
நகர்ப்புற நெரிசலில் எளிதாகப் பயணிப்பதற்குத் தேவையான ஆரம்ப வேகம் மற்றும் மிட் ரேஞ்ச் வேகம் குறை சொல்ல முடியாதபடி உள்ளது. 70 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிகிறது. இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதை நம்பி அதற்கு மேல் வேகத்தை அதிகரித்தால், பெட்ரோல் டேங்க்கில் அதிர்வுகள் எட்டிப் பார்க்கின்றன. கிளட்ச் லைட்டாக இருப்பதுடன், 4 கியர்களும் எளிதாக மாறுகின்றன. அதிகபட்சம் 95 கி.மீ வேகம் வரை டெஸ்ட் ட்ராக்கில் செல்ல முடிந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 76 கி.மீ தூரம் செல்ல முடியும் என்கிறது டிவிஎஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரும்பவும் விக்டர்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

ரைடிங் பொசிஷன் வசதியாக இருப்பதுடன், அகலமான இருக்கையில் இருவர் வசதியாக உட்கார முடிகிறது. டிவிஎஸ்ஸின் REMORA ட்யூப்லெஸ் டயர்கள் போதுமான க்ரிப்பை அளிக்கின்றன. பைக் எடை குறைவு என்பதால், வளைத்து நெளித்து ஓட்ட ஏதுவாக இருக்கிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் ஃபீனிக்ஸ் பைக்கைப் போலவே இதிலும் இரட்டை ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது போலத் தெரிந்தாலும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வுகளை, சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக் கொள்கிறது. ஆக மொத்தம், ஓட்டுதல் தரம் நன்றாகவே இருக்கிறது. முன்பக்கம் 130 மிமீ டிரம்/240 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 110 மிமீ டிரம் பிரேக் உள்ளன. இவற்றில் டிஸ்க் பிரேக்கின் செயல்பாடு அட்டகாசம் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்!

திரும்பவும் விக்டர்!
திரும்பவும் விக்டர்!

சொக்க வைக்கும் ஸ்டைல் இல்லாவிட்டாலும், அதிக சிறப்பம்சங்கள், போதுமான பவரை வெளிப்படுத்தும் ஸ்மூத்தான இன்ஜின், நல்ல கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரம், பவர்ஃபுல் டிஸ்க் பிரேக், ஒட்டுமொத்த தரம் என எல்லா விஷயங்களிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது விக்டர். கம்யூட்டர் பைக் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், விக்டருக்கு விக்டரி ரொம்பவும் தூரம் இல்லை!