Published:Updated:

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!
பிரீமியம் ஸ்டோரி
YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

டெஸ்ட் டிரைவ் : யமஹா YZF R3 தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

டெஸ்ட் டிரைவ் : யமஹா YZF R3 தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:
YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!
பிரீமியம் ஸ்டோரி
YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

டந்த 2014 அக்டோபரில், யமஹா நிறுவனம் YZF-R3 பைக்கைக் காட்டியதில் இருந்தே பிடித்துக் கொண்டது ஃபீவர். இந்திய பைக் ஆர்வலர்களிடையே சமீப காலத்தில் அதிகம் எதிர்பார்ப்பைக் கிளப்பிய YZF-R3 பைக், இப்போது இந்தியாவில் விற்பனையில்!

டிஸைன்,  இன்ஜினீயரிங்

யமஹா YZF-R3 பைக்கின் டிஸைன் ரொம்பவே ஸ்போர்ட்டி. இரண்டு ஹெட்லைட்ஸும், பைலட் லேம்ப்புகளும் அழகாக உள்ளன. மிரர்கள் அகலமாக இருப்பதால், பின்னால் நடப்பதைக் கவனிப்பது எளிதாக உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸைன் ஷார்ப்பாக உள்ளது. அனலாக் டேக்கோ மீட்டரும், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்விட்ச் கியர்தான் உயர்தரம்.
கட்டுமஸ்தாகக் காட்சியளிக்கும் பெட்ரோல் டேங்க், சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இருக்கை, நீண்ட தூரப் பயணங்களிலும் சொகுசாக உள்ளது. பில்லியன் இருக்கை எதிர்பார்த்ததுபோலவே உயரமாகவும் சிறிதாகவும் உள்ளது.

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

யமஹா YZF-R3 பைக்கில் 321 சிசி, லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் உள்ளது. ஒவ்வொரு சிலிண்டரிலும் நான்கு வால்வுகள், டூயல்  கேம்ஷாஃப்ட்டுகள் உள்ளன. சிலிண்டர்களுக்கு யமஹாவின் டிரேட் மார்க் DiASil கோட்டிங் செய்யப்பட்டுள்ளன. இது உராய்வைக் குறைக்கும். R3 இன்ஜின், எல்லா ஆர்பிஎம்களிலும் படு ஸ்மூத்தாக, அதிர்வுகள் இன்றி இயங்குகிறது.
அதிகபட்சமாக 41.4bhp சக்தியை 10,750 ஆர்பிஎம்-லும், 3kgm டார்க்கை 9,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது இந்த இன்ஜின். பவர் டெலிவரி சீராக இருந்தாலும், 3,000 ஆர்பிஎம் தாண்டியதும் சீற்றம் அதிகமாகிறது. 6,000 ஆர்பிஎம்-க்குப் பின்பு இன்னும் வேகம் அதிகரிக்கிறது. 12,500 ஆர்பிஎம் ரெட் லைன் வரை ஃப்ரீயாக ரெவ் ஆகிறது இன்ஜின்.

ஆனால், பெர்ஃபாமென்ஸில் மிரட்டல் காட்டும் இன்ஜின், எக்ஸாஸ்ட் சத்தத்தில் மட்டும் அடக்கியே வாசிக்கிறது. கியர்பாக்ஸ் செம ஸ்மூத். கிளட்ச் இயக்கமும் கச்சிதம்.

0-60 கி.மீ வேகத்தை 2.62 விநாடிகளில் கடக்கிறது R3. மணிக்கு 100 கி.மீ வேகத்தைக் கடக்க 6.75 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ.

ஓட்டுதல் தரம், கையாளுமை

நாம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது R3. ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது. முன்பக்கம் 41 மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால், கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது ஓட்டுதல் தரம். அதிக வேகங்களில் இந்த செட்-அப்தான் ஸ்டேபிளாக உணரவைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

ஆனால், R3 பைக்கின் டயர்கள் ஏமாற்றம் அளிக்கின்றன. நீண்ட காலம் உழைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த டயர்களில், கிரிப் அவ்வளவாக இல்லை. அதனால், ஈரமான சாலைகளிலும், வேகமாக ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

பைக்கின் பிரேக்குகள் நல்ல ஃபீட்பேக் கொண்டுள்ளன. ஒரு பக்கம் கிரிப் இல்லாத டயர், இன்னொரு பக்கம் ஏபிஎஸ் பிரேக்கும் இல்லை. ஏன் யமஹா இப்படி?

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

மைலேஜ்

சிட்டி டிராஃபிக்கில் யமஹா YZF-R3 லிட்டருக்கு 22.8 கி.மீ மைலேஜ் அளித்தது. நெடுஞ்சாலையில் 24.7 கி.மீ மைலேஜை அளித்தது. பைக்கில் காட்டும் மைலேஜ் அவ்வளவு கச்சிதமாக இல்லை.
‘தி பெஸ்ட்’ என்பதை நெருங்கி நின்றுவிட்டது யமஹா. R3 பைக்கின் முக்கிய விஷயங்களில்

YAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்!

டிஸ்டிங்ஷன் பெறும் யமஹா, ஏனோ ஏபிஎஸ், டயர் விஷயத்தில் பின்தங்கிவிட்டது. இன்ஜினைக் குறை சொல்ல முடியாது. 3.69 (சென்னை ஆன்ரோடு) லட்சம் ரூபாய்க்கு ஒரு தம்ஸ்-அப்!

‘தி பெஸ்ட்’ என்பதை நெருங்கி நின்றுவிட்டது யமஹா. R3 பைக்கின் முக்கிய விஷயங்களில் டிஸ்டிங்ஷன் பெறும் யமஹா, ஏனோ ஏபிஎஸ், டயர் விஷயத்தில் பின்தங்கிவிட்டது. இன்ஜினைக் குறை சொல்ல முடியாது. 3.69 (சென்னை ஆன்ரோடு) லட்சம் ரூபாய்க்கு ஒரு தம்ஸ்-அப்!