Published:Updated:

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஒப்பீடு : பல்ஸர் AS150 vs ஹோண்டா CB ஹார்னெட் 160R vs சுஸூகி ஜிக்ஸர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஒப்பீடு : பல்ஸர் AS150 vs ஹோண்டா CB ஹார்னெட் 160R vs சுஸூகி ஜிக்ஸர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

150 சிசி செக்மென்ட்டில் எது பெஸ்ட்? இந்தக் கேள்விக்கு பெரும்பாலோனோரின் பதில், சுஸூகி ஜிக்ஸர் அல்லது பஜாஜ் பல்ஸர் AS150 என்றுதான் இருக்கும். ஆனால், இப்போது ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விற்பனைக்கு வந்துவிட்ட  நிலையில், எது பெஸ்ட் என்ற கேள்விக்கான விடை என்னவாக இருக்கும்?

டிஸைன்

ஷார்ப்பான கோடுகளைக்கொண்டிருக்கிறது ஹார்னெட் பைக்கின் வடிவமைப்பு. அந்தக் கோடுகள், எல்லா பாகங்களையும் ஒருங்கிணைத்துக் காட்டுவது கச்சிதம். ஹார்னெட்டுடன் சேர்ந்து நிற்கும்போது, ஜிக்ஸரும் பல்ஸரும் சாஃப்ட்டாகத் தெரிகின்றன. பல்ஸர், ஸ்லிம்மாக இருந்தாலும் விண்ட் டிஃப்ளெக்டர் இருப்பதால், உயரமாகத் தெரிகிறது.

அனலாக் மற்றும் டிஜிட்டல் கலவையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்ஸரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஹார்னெட் பைக்கின் ஃபுல் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், மாடர்னாக இருந்தாலும் சூரிய ஒளியில் பளிச்செனத் தெரியவில்லை. சுஸூகி ஜிக்ஸரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் நிறைய தகவல்கள் இருந்தாலும், பார்க்க சுமாராக இருக்கிறது. ஸ்விட்ச் கியர்களைப் பொறுத்தவரை பல்ஸர் மற்றும் ஜிக்ஸரில் உள்ள தரம், ஹார்னெட்டில் இல்லை. மேலும், இன்ஜினை அணைக்கும் கில் ஸ்விட்ச் இல்லை.

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

இன்ஜின்

இந்த மூன்று பைக்குகளில் ஹார்னெட்டில்தான் பெரிய இன்ஜின். 162.7 சிசி ஏர்- கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின், 15.7 bhp சக்தியையும், 1.5 kgm டார்க்கையும் அளிக்கிறது. பெரிய இன்ஜின் என்றாலும் பவர் டெலிவரியில் ஹார்னெட் கொஞ்சம் வீக்தான்.

ஜிக்ஸரின் 155 சிசி இன்ஜின், 14.6 bhp சக்தியை அளிக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் இந்த இன்ஜின் செம ஸ்ட்ராங். 149.5 சிசி பல்ஸர் இன்ஜின், 16.8 bhp சக்தியை அளிக்கிறது. இந்த இன்ஜின் எல்லா ஆர்பிஎம்-மிலும் நல்ல ஆக்ஸிலரேஷனை அளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

மூன்று பைக்குகளிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். ஹோண்டா என்றாலே ‘ஸ்மூத்’ என்பார்கள். ஆனால், இந்த மூன்று பைக்குகளில் சுமாரான ஸ்மூத்னெஸ் கொண்ட கியர்பாக்ஸ், ஹார்னெட்தான்.
0-60 கி.மீ வேகத்தை அடைய ஹார்னெட் 5.02 விநாடிகளை எடுத்துக்கொள்ள, ஜிக்ஸர் 5.61 விநாடிகளும் பல்ஸர் 5.11 விநாடிகளும் எடுத்துக்கொள்கின்றன. ஹார்னெட் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 119 கி.மீ. பல்ஸர், 118 கி.மீ; ஜிக்ஸர் 116 கி.மீ. மைலேஜைப் பொறுத்தவரை மூன்று பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஓட்டுதல் தரம் & கையாளுமை

ஹார்னெட் பைக்கின் சீட்டிங் பொசிஷன் அகலமாக இருப்பதால், உட்கார்ந்து ஓட்ட மிக சொகுசாக இருக்கிறது. குறைந்த தூரப் பயணங்களுக்கு பல்ஸரின் சீட்டிங் பொசிஷன் நன்றாக இருக்கும். ஜிக்ஸரின் ரைடிங் பொசிஷன் ரொம்பவே ஸ்போர்ட்டி.

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சுஸூகி ஜிக்ஸரின் கையாளுமை மிகச் சிறப்பாக உள்ளது. இரண்டாவதாக பஜாஜ் பல்ஸர் AS150 வருகிறது. ஹார்னெட் கையாளுமை கொஞ்சம் ஷார்ப். எனவே, ஓட்டுவதற்கு மற்ற இரண்டு பைக்குகளைப்போல நம்பிக்கையாக இல்லை.

குறைந்த வேகங்களில் ஹார்னெட்டின் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கிறது. அதிக வேகங்களில் ஹார்னெட்டின் முன் வீல், மோசமான சாலைகளில் ஸ்டேபிளாக இல்லை. ஆனால், பல்ஸர் AS150 பைக் மோசமான சாலைகளை எளிதாகச் சமாளித்துவிடுகிறது. ஆனால், ரொம்பவே விரட்டி ஓட்டினால் கவனம் தேவை.

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?
ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஜிக்ஸரின் ஓட்டுதல் தரம் ரொம்பவே இறுக்கமாக இருப்பதால், மேடு பள்ளங்களில் ஷார்ப்பாக இருக்கிறது. வளைவுகளில் பைக் நல்ல ஸ்டெபிலிட்டியைக் கொண்டுள்ளது. ஜிக்ஸரின் உயர்தரமான சாஃப்ட் டயர்கள் நல்ல க்ரிப் கொண்டுள்ளன. பல்ஸரிலும் நல்ல க்ரிப் இருக்கிறது. ஹார்னெட்டில் அந்த அளவுக்கு க்ரிப் இல்லை.

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

மூன்று பைக்குகளின் பிரேக்குகள் ஒரே மாதிரி சிறப்பாக உள்ளன. ஹோண்டாவில் மட்டும் காம்பி-

ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

பிரேக் சிஸ்டம் இருப்பதால், பாதுகாப்பில் ஒரு பாயின்ட் எக்ஸ்ட்ரா!

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R த்ரில்லுக்காக உருவாக்கப்பட்ட பைக் இல்லை. ஸ்டைலிங் நன்றாக இருந்தாலும் பெர்ஃபாமென்ஸில் கொஞ்சம் வீக்தான்.

இன்ஜின் தரம், கையாளுமை, வசதிகள் என பல்ஸர் AS150 விலைக்கேற்ற மதிப்பைத் தரும் பைக்காக உள்ளது.

சுஸூகி ஜிக்ஸர்... சந்தேகமே இல்லை; இதுதான் சிறந்த 150 சிசி பைக். அள்ளித்தரும் பெர்ஃபாமென்ஸ், ஸ்போர்ட்டி கையாளுமை, போதுமான வசதிகள் என நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஏற்ற மதிப்பைத் தரும் பைக் இது!