Published:Updated:

வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா கஸ்ட்டோ 125வேல்ஸ்

வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா கஸ்ட்டோ 125வேல்ஸ்

Published:Updated:
வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

ஹிந்திராவின் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டர், கஸ்ட்டோ 110. இந்தப் பெருமையைச் சொல்லி மட்டும் ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடியுமா? அதனால், மேலும் சக்தி வாய்ந்த கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா. புதிய கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை, புனே அருகே மலைகள் சூழ்ந்த ரம்மியமான ஆற்றங்கரையில் அமைந்துள்ள லாவாஸா எனும் ஊரில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

டிஸைன்

தோற்றத்தில், கஸ்ட்டோ 110 போலவே இருக்கிறது 125. அதே பாக்ஸ் டைப் லுக். சமையல் கலைஞர்கள் கழுத்தில் கட்டியிருக்கும் ஏப்ரன் போன்ற அதே முன்பக்க ஸ்டைலிங். இதன் சீட் உயரத்தை நம் தேவைக்கு ஏற்ற மாதிரி கூட்டவும் குறைக்க முடியும். அதனால் உயரமானவர்களும் சரி, சற்று உயரம் குறைந்தவர்களும் சரி... இதை செளகரியமாக ஓட்ட முடியும்.

கஸ்ட்டோவின் ஹைலைட் என்று இதன் சிறப்பம்சங்களைப் பட்டியல் இடலாம். அதாவது, காரில் இருப்பதுபோல ஸ்டைலான ஃப்ளிப் கீ, ஃபாலோ மீ லேம்ப்ஸ், ஃபைண்டு மீ லேம்ப்ஸ் ஆகியவை கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் பலங்கள். அதேபோல, முன்புறம் இருந்து பின்புறமாகத் திறக்கும் சீட்டைத் திறந்தால், போதுமான ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. ஃபைபர் பாடியில் இருக்கும் தரமான பெயின்ட், கிராஃபிக்ஸ் கவனிக்கப்பட வேண்டியவை. 110சிசியில் இருந்து 125சிசிக்கு உயரும்போது, மற்ற விஷயங்களிலும் முன்னேற்றத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். உதாரணத்துக்கு பில்லியன் ரைடர், ஃபுட் ரெஸ்ட் பயன்படுத்த வாகாக இல்லை. பாடி கலரிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் மிரர்களும் அட்ஜெஸ்ட் செய்ய வசதியாக இல்லை.

வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் இருப்பது, 4 ஸ்ட்ரோக் 124.6 சிசி திறன்கொண்ட இன்ஜின். கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரோடு ஒப்பிடும்போது, இது வெளிப்படுத்தும் சக்தி 8bhp-ல் இருந்து 8.5bhp ஆக உயர்ந்திருக்கிறது. இது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், ஓட்டும்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அதேபோல, 110 சிசி ஸ்கூட்டரைவிட இது அமைதியாகவும் செயல்படுகிறது. இதை ‘பெஸ்ட் இன் கிளாஸ்’ பெர்ஃபாமென்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால், லோ ரேஞ்சிலும் மிட் ரேஞ்சிலும் இதன் பெர்ஃபாமென்ஸ் அசத்துகிறது. அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வரை இதில் செல்ல முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

சஸ்பென்ஷன்

இதை காய்ந்து கிடக்கும் மலையோர ஆற்றுப்படுகைக்கு ஓட்டிச் சென்றோம். முன்பக்கம் இருக்கும் டெலிஃஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்பக்கம் இருக்கும் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும், நல்ல கிரிப் கொடுக்கும் 12 இன்ச் வீல்களும், மலைப் பாதைச் சவாரியை அலுப்பில்லாமல் செல்ல உதவி செய்தன. முன்/பின் என்று இரண்டு பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பின்பக்க வீல் அளவுக்கு, முன்பக்க வீல் அத்தனை சுறுசுறுப்பாக தன் வேலையைச் செய்யவில்லை. அதனால், மஹிந்திரா முன்பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக் கொடுக்க வேண்டியது பற்றித் தீவிரமாக யோசித்தாக வேண்டும்.

சில முன்னேற்றங்கள் தேவைப் பட்டாலும் சத்தம் போடாமல் இயங்கும் இன்ஜின், பயனுள்ள அம்சங்கள் ஆகியவற்றைக் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவரப் பார்க்கிறது மஹிந்திரா!