Published:Updated:

850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!

850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!
பிரீமியம் ஸ்டோரி
850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!

COIMBATORE MOTOR PARTS DEALER ASSOCIATION ச.ஜெ.ரவி, படங்கள்: த.ஸ்ரீனிவாசன், சு.ரகுராம்

நான்காவது ஆண்டாக, கடந்த டிசம்பரில் கோயமுத்தூர் ஆட்டோ ஷோவை வெற்றிகரமாக நடத்தியுள்ளது, கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன்.
லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 170-க்கும் அதிகமான நிறுவனங்கள், 850 கோடி ரூபாய்க்கான வர்த்தகப் பேச்சுவார்த்தை என இந்தக் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடந்து முடிந்ததாகச் சொல்கிறார், ஆட்டோ ஷோவின் தலைவர் சிவக்குமார். அவரிடம் பேசினோம்.

“கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன், 1966-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எங்கள் சங்கத்தின் சார்பில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஆட்டோ ஷோ நடத்தி வருகிறோம். கண்காட்சி நடைபெற்ற 3 நாட்களில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சி மூலம் 700 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்ப்புக்கு மேலாக 850 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து டீலர்கள் பங்கேற்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து பல நிறுவனங்களும் பங்கேற்றன.

850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!

ஆட்டோமொபைல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள்அறிமுகம் ஆகின்றன. அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில்தான் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். அதுபோல், இளம் தொழிலதிபர்களுக்குத் தொழிலை விரிவுபடுத்துவதற்கான ஐடியாக்களை இந்தக் கண்காட்சி வழங்குகிறது. புதிய ஏஜென்சிகளை நியமிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்தது.

2009-ம் ஆண்டு முதன்முதலில்  இந்த கண்காட்சியை நடத்தியபோது பார்வையாளர்கள் வெறும் 10,000 பேர்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!

2015-ல் 170 அரங்குகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என வளர்ந்துள்ளது. அடுத்த கண்காட்சி 300 அரங்குகளுடன் அமைக்க இருக்கிறோம். சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களை இதில் பங்கேற்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்!