Published:Updated:

“எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!

 “எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
“எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!

ரா.நிரஞ்சனா, படங்கள்: தே.தீட்ஷித்

“எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!

ரா.நிரஞ்சனா, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
 “எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
“எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!

பஜாஜ் சூப்பர் FE,  டிவிஎஸ் சுஸூகி,  ராயல் என்ஃபீல்டு ,  யெஸ்டி 250 கிளாஸிக்,  யமஹா RX100,  விஜய் சூப்பர் மார்க் II

கால வெள்ளத்தில் காணாமல் போனவற்றைத் திடீரெனக் காணும்போது... மனசு, மத்தாப்பு கொளுத்தும் குழந்தையாகிறது. அறிவியல் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றினால், நாம் கடந்துவந்த பாதையில், மறந்துபோன பல விஷயங்களைக் காணும்போது குதூகலமாவோம். அதேபோலத்தான் திருச்சியைச் சேர்ந்த ரமணியிடம் இருக்கும் கலெக்‌ஷனைப் பார்த்தால், உற்சாகம் கரை புரளும். இரு சக்கர வாகனங்களின் சங்கமமாக இருந்த ரமணியின் இல்லத்தில் அணிவகுக்கின்றன ஆட்டோமொபைலின் காலச் சுவடுகள்.
 
‘‘அறியாத வயதில் மனத்தில் முளைக்கும் ஆசைகளுக்கு அளவே இல்லை. ஆனால், நான் அப்போதே, ‘எனக்கென சொந்தமாக இரண்டு மோட்டார் பைக்குகள் நம் வீட்டின் முன்பு நிற்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டேன். அதற்கேற்றதுபோல படித்தது ஆட்டோமொபைல் டிப்ளமோ. பிடித்த துறையும் படித்த படிப்பும், செய்த வேலையும் ஒன்றாகும்போது, அதற்குள் கரைந்துபோவது இயல்புதானே?’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ரமணி.

 “எனது வாண்டுகள்!” - வின்டேஜ் கலெக்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘2000-ம் ஆண்டில் இருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்ட வாகனங்களைச் சேகரிக்கத் துவங்கினேன். இப்போது என்னிடம் 20 இரு சக்கர வாகனங்கள் நிற்கின்றன. என் முதல் வாகனம் 1988 மாடல் டிவிஎஸ் 50. அடுத்தடுத்து டிவிஎஸ் சுஸூகி (1989), பஜாஜ் சூப்பர் (1994), யெஸ்டி கிளாஸிக் (1987), யமஹா RX100 (1987, விஜய் சூப்பர், கைனட்டிக் ஹோண்டா (2000), ஸ்கூட்டி டீன்ஸ், பஜாஜ் சேத்தக், ராயல் என்ஃபீல்டு சில்வர் ப்ளஸ் (1983), புல்லட் (1985) மாருதி 800 என என் கலெக்‌ஷன் பட்டியல் நீளம். இரண்டு வண்டிகள் நிற்க வேண்டும் என விரும்பியவன் வீட்டில், இப்போது குறைந்தது 10 வாகனங்கள் நிற்கின்றன. ‘கிளாஸிக் வாகனங்களை எங்கு பார்த்தாலும் உடனே வாங்கத் துடிப்பேன். அது எந்த நிலையில் இருந்தாலும் சரி, வாங்கி பக்காவாக சரிசெய்து ஓட்டிக்கொண்டிருப்பேன். இன்றைக்கு எத்தனையோ நவீன வாகனங்கள் வந்திருந்தாலும், கிளாஸிக் வாகனத்தில் சாலையில் செல்லும்போது, எல்லா கண்களும் நம் மீதுதான் இருக்கும். அப்போது ஏற்படும் ஓர் உணர்வுதான் என்னை இப்படி இயங்கவைக்கிறது.

ஒவ்வொரு வாகனத்தையும் என் குடும்ப வாண்டுகளைப்போலப் பார்த்துப் பார்த்துப் பராமரிக்கிறேன். அதற்கு என் மனைவியும், மகனும் உதவி செய்கிறார்கள். என் மகன், இதை சின்ன வயதில் இருந்து பார்த்து வளர்ந்ததால், அவனுக்கும் கிளாஸிக் வாகனங்கள் மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோமொபைல் மீதுள்ள காதல், அது குறித்த அறிவியல்பூர்வமான விஷயங்களைத் தினமும் அப்டேட்  செய்துக்கொள்ளக்கூடிய ஆர்வத்தை எனக்குள் விதைத்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை என்னுடைய ஏதாவது ஒரு கிளாஸிக் வாகனத்தில் கொடைக்கானல், மூணாறு, தேக்கடி என பயணம் செல்வேன். அந்தப் பயண அனுபவம் ஆண்டு முழுவதும் என்னை ஸ்மூத்தாக இயங்கவைக்கும். எனக்கு தீராத ஆசை ஒன்று உண்டு, இந்தியா முழுவதும் கிளாஸிக் வாகனத்தில் சுற்ற வேண்டும்!’’ என வியக்கவைக்கிறார் கிளாஸிக் ரசிகர் ரமணி!