Published:Updated:

உலகம் சுற்ற பைக் போதும்!

உலகம் சுற்ற பைக் போதும்!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்ற பைக் போதும்!

சாதனை பயணம்நிவேதா அஷோக் , படங்கள்: தே.தீட்ஷித்

உலகம் சுற்ற பைக் போதும்!

சாதனை பயணம்நிவேதா அஷோக் , படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
உலகம் சுற்ற பைக் போதும்!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்ற பைக் போதும்!

விடுமுறை தினம் என்றாலோ அல்லது சீஸன் என்றாலோ, நட்சத்திர வடிவில் இருக்கும் கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள சாலை - சைக்கிள், பைக், பாதசாரிகள் என பரபரப்பாக இருக்கும். அதில், கேடிஎம் சூப்பர் பைக்கில் கம்பீரமாக வெளிநாட்டுப் பயணி ஒருவர் பந்தாவாக வலம் வந்தார்.

பொங்கல் விடுமுறைக்கு நம்ம ஊர் கேடிஎம் பைக்குகளில் கொடைக்கானலுக்கு ட்ரிப் வந்த பைக்கர்ஸ் பாய்ஸ் கண்களில் அவரது பைக் உறுத்தவும், அந்தப் பயணியைப் பின்தொடர்ந்து சென்று, தங்களை ‘கேடிஎம் பைக்கர்ஸ்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரது பைக் பற்றி ஆச்சரியத்தோடு விசாரித்தனர். உற்சாகமாகிய அந்த வெளிநாட்டுக்காரர், அவர்களோடு சேர்ந்து கொடைக்கானலைச் சுற்றிவந்தார். அவர் பெயர் ரூபர்ட் கார்ட்னர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு உலகத்தை பைக்கிலேயே சுற்றுவதுதான் தற்போதைய தலையாய வேலை.

உலகம் சுற்ற பைக் போதும்!

அவருக்கு நாமும் கை குலுக்கி வாழ்த்துகள் சொன்னோம். இங்கிலாந்தைச் சேர்ந்த 41 வயது ரூபர்ட் கார்ட்னருக்கு காதல், மனைவி, குழந்தை எல்லாமே பைக்தான். ஓர் இசைக் கலைஞராக இருந்த ரூபர்ட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது - 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ட்ரையம்ப் 1050 Sprint ST பைக்கில் மேற்கொண்ட இரண்டு மாத ஐரோப்பியப் பயணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் பைக் ப்ரியன். ஒருமுறை விடுமுறையில் ஊர் சுற்றிவிட்டு வேலைக்குத் திரும்பினேன். ஆனால், என்னால் வேலையை முழுக்கவனத்தோடு செய்ய முடியவில்லை. அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது நெடுந்தூர பைக் பயணம் என்பதை உணர்ந்தேன். உடனே வேலையை உதறிவிட்டு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்’’ என்றவரிடம், ‘‘கேடிஎம் உங்கள் ஃபேவரைட் பைக்கா?’’ என்று கேட்டோம்.

‘‘முதலில் பிஎம்டபிள்யூ GS1200 பயன்படுத்தி வந்தேன். அது மிகவும் கனமாக இருந்ததால், ட்ரையம்ப் அட்வென்ச்சர் வாங்கினேன். அதில் டர்னிங்கில் கன்ட்ரோல் செய்வது சிரமமாக இருந்தது. கேடிஎம் அட்வென்ச்சர் 1190 பயன்படுத்திப் பார்த்தேன். மிக வசதியாக இருந்தது. கனமாக இருந்தாலும் சுலபமாக பேலன்ஸ் செய்ய முடிகிறது. அதனால் கேடிஎம் பைக்கில் ஃபிக்ஸ் ஆகிவிட்டேன்!’’ என்ற கார்ட்னர், இந்தியப் பயணம் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.

உலகம் சுற்ற பைக் போதும்!

‘‘ஆசிய நாடுகள் அனைத்துக்கும் செல்வதுதான் இலக்கு. சிங்கப்பூரில் இருந்து நானும் பைக்கும் விமானம் மூலம் மும்பையில் இறங்கினோம். புனே, கோவா, ஹம்பி, உடுப்பி, கல்பேட்டா, கொச்சி, மூணாறு சென்றுவிட்டு கொடைக்கானல் வந்தேன். அடுத்து ஊட்டி, மைசூர் வழியாக பெங்களூர் செல்கிறேன். அங்கு இருந்து திரும்ப சிங்கப்பூர்!’’ எனப் பேசிக்கொண்டே சென்றவரை, ‘‘இப்படி ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறீகளே... உங்கள் மனைவியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ என்று நிஜமான கரிசனத்துடன் கேட்டோம்.

உலகம் சுற்ற பைக் போதும்!

சிரித்துக்கொண்டே, ‘‘இன்னும் எனக்குத் திருமணமே ஆகவில்லை. ஆனால், எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிறார். முதலில் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு பிறகுதான் திருமணம், குழந்தை என்று முடிவு செய்திருக்கிறேன்” என்றவர், ‘‘இந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து திரும்பி ஒரு வருடம் வேலை செய்து, கொஞ்சம் பணத்தைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கப்போகிறேன்’’ என்றார். 

‘‘நாடு நாடாக சுற்றுவதால், ஈடு இணையற்ற சுதந்திரத்தை என்னால் உணர முடிகிறது. பைக்கின் மேல் எனக்கு உள்ளது வெறும் காதல் அல்ல... அதுதான் என்னை இயங்கவைக்கிறது. அதுதான் எனக்கு வேறு ஒரு உலகை அறிமுகப்படுத்துகிறது” என்று ஃபீலிங்கோடு சொன்னார் ரூபர்ட் கார்ட்னர்!