Published:Updated:

கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!
பிரீமியம் ஸ்டோரி
கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

பிக்-அப் டிரக்: மஹிந்திரா இம்பீரியோகா.பாலமுருகன்

கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

பிக்-அப் டிரக்: மஹிந்திரா இம்பீரியோகா.பாலமுருகன்

Published:Updated:
கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!
பிரீமியம் ஸ்டோரி
கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

ம் நாட்டில், பிக்-அப் ட்ரக் செக்மென்ட்டில் மஹிந்திரா எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. ஸ்டேஷன் வேகன் வகை வாகனங்களுக்கு நம் நாட்டில் மதிப்பு இல்லை. ஆனால், அதுவே பிக்-அப் வேகனாக இருந்தால்தான் ஓகே.

கமர்ஷியல் வாகனம் என்றாலே - அதிக சக்தி, கூடுதல் கொள்ளளவு, சுமார் டிஸைன் மற்றும் குறைந்த விலையுடன் இருந்தால் போதும் என்ற காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பிக்-அப் ட்ரக் சந்தையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திவரும் மஹிந்திரா, சமீபத்தில் இம்பீரியோ எனும் பிரீமியம் பிக்-அப் ட்ரக்கை அறிமுகம் செய்திருக்கிறது.  கம்பீரமான எஸ்யுவி வாகனம்போலத் தோற்றம் அளிக்கும் இம்பீரியோவில் என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே இருக்கும் மஹிந்திரா ஜீனியோவின் மறுஉருவாக்கம்தான் இந்த இம்பீரியோ. ஆனால், டிஸைன் முற்றிலும் புதுசு. ஜீனியோ, செடான் கார் போன்ற டிஸைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்பீரியோ முரட்டு எஸ்யுவி போன்ற டிஸைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் இம்பீரியோவின் முகப்பில் இருக்கும் வளைவு நெளிவுகள், கமர்ஷியல் வாகனச் சந்தைக்குப் புதுசு. பொதுவாக, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பொருளை எடுத்துச் செல்வது என்றால், அதில் டிரைவருடன் இன்னொரு பயணி மட்டுமே செல்ல முடியும். ஆனால், இம்பீரியோவில் 5 பேர் செல்லலாம். அடுத்ததாக, இதன் கேபினில் காரில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கின்றன.

கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

இம்பீரியோவின் முன்பக்கத்தைப் பார்த்தால் கிரில், ஹெட்லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ், பம்பர், பக்கவாட்டுக் கண்ணாடிகள், 16 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் என ஒரு எஸ்யுவி காருக்கான அத்தனை விஷயங்களையும் அழகாக வடிவமைத்திருப்பது தெரிகிறது.

அதேபோல், டேஷ்போர்டு தேவையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன் ஏ.சி, 2 டின் ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோஸ், கீலெஸ் என்ட்ரி, கப் அண்டு பாட்டில் ஹோல்டர்ஸ், பக்கெட் சீட்ஸ், அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய பவர் ஸ்டீயரிங் ஆகிய வசதிகளும் இருக்கின்றன.  
 
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இதில் ‘ஃப்யூல் ஸ்மார்ட்’ தொழில்நுட்பம் உண்டு. 2.5 லிட்டர் 4 சிலிண்டர் DI CRDe இன்ஜின், 75bhp சக்தியையும் 22kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. லிட்டருக்கு 13.55 கி.மீ மைலேஜ் அளிக்கும் என்கிறது மஹிந்திரா. மேலும், ஈகோ/ பவர் என இரு ‘மோடுகள்’ அளிக்கப்பட்டிருக்கின்றன. 1,240 கிலோ எடையை இழுத்துச் செல்லும் திறன் படைத்த இம்பீரியோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

சுமார் 70 கோடி முதலீட்டில், சென்னையில் இருக்கும் மஹிந்திரா டிஸைன் சென்டரில் வடிவமைக்கப்பட்ட இம்பீரியோ, புனே அருகில் உள்ள சக்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிங்கிள் கேபின் மற்றும் டபுள் கேபின் என இரண்டு பாடி ஆப்ஷன்களுடன், இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது இம்பீரியோ. மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கி.மீ-க்கு வாரன்டி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா.