Published:Updated:

ஜென் நிலை!

ஜென் நிலை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் நிலை!

கிளாஸிக் கார் : மாருதி ஜென் ராகுல் சிவகுரு, படங்கள்: ப.சரவணகுமார்

ஜென் நிலை!

கிளாஸிக் கார் : மாருதி ஜென் ராகுல் சிவகுரு, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஜென் நிலை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் நிலை!

ந்தியாவின் கவர்ச்சி கரமான முதல் ஹேட்ச்பேக்’ என்ற பெருமை, மாருதி ஜென் காருக்கு உண்டு. ‘சுஸூகி சர்வோ மோட்’ எனும் செடான் காரை அடிப்படையாக வைத்துத்தான் ஜென் உருவாக்கப்பட்டது.

ஒருமுறை இந்த காரை ஓட்டிப் பார்த்தாலே இதன் அசுர வெற்றிக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில், பவர்ஃபுல் 4 சிலிண்டர் 1.0 லிட்டர் MPFI இன்ஜின், ஸ்மூத்தான கியர் ஷிஃப்ட், கையாளச் சுலபமான எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், கச்சிதமான வடிவம் என ஒரு பக்கா ஓட்டுநரின் காருக்கான தகுதிகளுடன் வெளிவந்தது ஜென். இது, மாருதி 800 மற்றும் ஆம்னி கார்களுக்குப் பிறகு, 1993-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், 50bhp பவர், கார்புரேட்டர், அலுமினியம் இன்ஜினுடன் 730 கிலோ எடை மட்டுமே கொண்ட காராக இருந்ததால், பெர்ஃபாமென்ஸ் வியக்கும் அளவுக்கு இருந்தது. 0-100 வேகத்தை அடைய இது எடுத்துக்கொண்ட நேரம் 15 விநாடிகள் என்பதுடன், அதிகபட்ச வேகம் 140 கி.மீ ஆக இருந்ததால், கார் பிரியர்கள் மத்தியில் ‘மாடர்ன் மினி ராக்கெட்’ என்ற அந்தஸ்தைப் பெற்றது.

தவிர ஏ.சி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் 1997-ல் களமிறங்கிய ஜென் VXi வேரியன்ட்டில் இருந்தது.

ஜென் நிலை!

1998-ல் ஃபியட் யுனோ, டாடா இண்டிகா போன்ற சின்ன டீசல் கார்கள் அறிமுகமாகி இருந்தன. இவற்றுடன் போட்டி போடுவதற்காக, பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற கார் தயாரிப்பாளரான பெஜோவுடன் கூட்டணி அமைத்து, இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான 1.5 லிட்டர்  TUD 5 என்ற டீசல் இன்ஜினை, ஜென் காரில் பொருத்தி ‘ஜென் D’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது மாருதி.
1,527 சிசி அளவுகொண்ட இந்த இன்ஜின், 57bhp திறனை அளித்தது. பின்னாளில் இதே இன்ஜினுடன் பெஜோ நிறுவனம், 309 என்ற செடான் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஹேட்ச்பேக் கார்களின் படையெடுப்பால் இதன் தோற்றம் பழையதாகவும், அளவில் மிகச் சிறிதாகத் தோன்றத் துவங்கியதால், விற்பனையும் கணிசமாகக் குறைந்தது. அதனால், கார் அறிமுகமாகி சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2003-ல் காருக்குப் புத்துணர்வு அளிக்கும் விதமாக, சற்று நீளம் குறைவான இரட்டைக் கதவுகளுடன் கூடிய கூபே மாடலை, லிமிடெட் எடிஷன் மாடலாக அறிமுகப்படுத்தியது மாருதி.

‘கார்பன்’ மற்றும் ‘ஸ்டீல்’ எனப் பெயர் சூட்டப்பட்டு, இரு வேரியன்ட்டுகளில் முறையே கறுப்பு, சில்வர் நிறங்களில் வெளிவந்தன. இதில் வழக்கமான காருடன் ஒப்பிடும்போது அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர், அலுமினியம் பெடல்கள், கியர் நாப் போன்ற சிறப்பம்சங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து 12 ஆண்டு காலமாக இந்தியச் சாலைகளை ஆட்சி செய்தநிலையில், 2005-ல் இதன் தயாரிப்பை நிறுத்தியது மாருதி. இந்த காருக்கு மாற்றாக அறிமுகமான ஜென் எஸ்திலோ, விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜென் நிலை!

வெறும் 600 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கூபே மாடல் கார்களில், வேரியன்ட்டுக்கு இரண்டு என நான்கு மாருதி ஜென் கார்களைத் தன்வசம் வைத்துள்ளார், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சையத் பாஷா. இன்டீரியர் டெகரேட்டர் தொழில் செய்துவரும் இவர், ஆட்டோமொபைல் ஆர்வலரும்கூட!

“பிஎம்டபிள்யூவுக்கு மினி கூப்பர் எப்படியோ, மாருதிக்கு ஜென் ஸ்போர்ட்ஸ் கூபே எனச் சொல்லலாம்.

எனக்குத் திருமணமான புதிதில், எனது மனைவியுடன் யமஹா RD-350 பைக்கில் செல்லாத ஊரே இல்லை. எங்களுக்கு குழந்தை பிறந்ததும், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ வாங்கினேன். ஆனால், கிளாஸிக்கான யமஹா பைக்போல, கிளாஸிக் கார் ஒன்று வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பல கட்ட ஆராய்ச்சி மற்றும் தேடுதலுக்குப் பின்பு, எனக்கான கிளாஸிக் கார் மாருதி ஜென் லிமிடெட் எடிஷன்தான் என முடிவெடுத்து, இந்த கார்களை வாங்கினேன். குடும்பத்துடன் இதில் பயணிப்பதற்கான இடவசதி இல்லை என்றாலும், இதற்கு என்று ஒரு தனி டிமாண்ட் உண்டு.

மழை வெள்ளத்தால் சென்னை பாதிப்புக்கு உள்ளானபோது, நண்பர்களுடன் சேர்ந்து எனது மாருதி ஜிப்ஸியில் நீரில் தத்தளித்த பலரைக் காப்பாற்றினோம். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, ஜென் கார்களில்தான் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அந்த நேரத்தில் என்னுடைய ஒரு ஜென் பழுதடைந்தது மனதை வெகுவாகப் பாதித்தது. ஆனால், மக்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது, அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை!” என்றார் பாஷா.

2000-ம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த கார்களில் கார்புரேட்டர் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் விலை 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரையிலும் விற்பனையாகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த கார்களில் மாசு அளவுகளைக் குறைப்பதற்காக MPFI சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. இவை 1 லட்ச ரூபாய் முதல் 1.5 லட்ச ரூபாய் வரை விலை போகின்றன. இடையே 2003-ல் வெளியான லிமிடெட் எடிஷன் கார்கள் அதிகளவில் தயாரிக்கப்படாததால், வாகனத்தின் கண்டிஷனைப் பொறுத்து, அதிகபட்சம் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை விலை போகிறது!’’ என்றார் சையது பாஷா.

தயாரிப்பை நிறுத்தி 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், இன்றைக்கும் பழைய கார் சந்தையில் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது மாருதி ஜென். அதில், 2 டோர் கூபே மாடல் இன்னும் சிறப்பு வாய்ந்த காராகப் பார்க்கப்படுகிறது. மாருதியின் தயாரிப்பு என்பதால், சர்வீஸ்,  ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில் பிரச்னை இல்லை.
ஜென் நிலை என்பது இதுதான்!