Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் தற்போது டிவிஎஸ் மேக்ஸ் 100ஆர் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தினசரி அதில்தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன் [20 கி.மீ]. இப்போது புது பைக் வாங்க உத்தேசித்திருக்கிறேன். அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்போர்ட்டியான பைக் எது? எனக்கு யமஹா ஃபேஸர், டிவிஎஸ் அப்பாச்சி போன்றவை மிகவும் பிடித்திருக்கின்றன. மைலேஜ் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், பைக் ஸ்டைலாக இருக்க வேண்டும்.

குகன், திருப்பூர்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

2 ஸ்ட்ரோக் பைக்குடன் ஒப்பிடும்போது, 4 ஸ்ட்ரோக் பைக்கின் பராமரிப்பு முறை வித்தியாசமானது. எனவே, உங்களுக்குப் பழக்கப்பட்ட டிவிஎஸ் நிறுவனத் தயாரிப்பைத் தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். மேலும், முற்றிலும் புதிய அப்பாச்சி பைக்கை விரைவில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது டிவிஎஸ். ‘காத்திருக்க முடியாது; உடனடியாக பைக் வாங்கியாக வேண்டும்’ என்றால், நீங்கள் சுஸூகி ஜிக்ஸர் SF அல்லது பஜாஜ் பல்ஸர் AS150 ஆகியவற்றை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து, உங்களுக்கான பைக் எது என்பதை முடிவெடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் 2 லட்ச ரூபாயில் யூஸ்டு கார் வாங்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். தினசரி 10 கி.மீ தூரமும், வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்றுவர மட்டுமே காரைப் பயன்படுத்துவேன். குறைந்த பராமரிப்புச் செலவுகள், அதிக எரிபொருள் சிக்கனம், 4 பேர் உட்கார்வதற்கான இடவசதி ஆகியவை அவசியம்.  எனக்கேற்ற கார் எது?

எஸ். ஸ்ரீதர், இமெயில்.

மாருதி சுஸூகி வேகன் - ஆர் உங்களுக்கான சரியான காராக இருக்கும். ஏனெனில், உங்கள் தேவைகளான இடவசதி, எரிபொருள் சிக்கனம், பராமரிப்புச் செலவு ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதுடன், ரீ-சேல் வேல்யூ மற்றும் ஓட்டுவதற்கு எளிதான காராகவும் இருக்கும் வேகன்-ஆர். இதில் உள்ள ஒரே குறை, கார் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்காது. சற்றுப் பெரிய கார் வேண்டுமென்றால், மாருதி சுஸூகி ரிட்ஸ் பரிசீலிக்கலாம்.

நான் ஒரு நெடுஞ்சாலைப் பயண விரும்பி. மாநிலம் விட்டு மாநிலம் இரவு நேரங்களில் பயணம் செய்பவன். நான் முதன்முறையாக பைக் ஓட்டப் பழகியது யமஹா RX-Z. என் பட்ஜெட் 2 லட்சம். சக்தி வாய்ந்த இன்ஜின், குறைவான அதிர்வுகள், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, திறன்மிக்க பிரேக்குகள் ஆகிய அம்சங்கள்கொண்ட, எனக்கு ஏற்ற பைக் எது?

சுதாஹர் சங்கர், இமெயில்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

உங்கள் பட்ஜெட்டில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500, ஹோண்டா CBR 250, பெனெல்லி TNT25, KTM RC200 ஆகிய பைக்குகள் கிடைக்கும். இவற்றில் தண்டர்பேர்டு, நெடுஞ்சாலையில் இருவர் வசதியாகப் பயணிப்பதற்கு ஏற்றது. ஆனால், பைக் வெளிப்படுத்தும் அதிர்வுகள் அதிகம் என்பதுடன், பராமரிப்புச் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். RC200 பைக்கின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமை சிறப்பாக இருந்தாலும், இன்ஜின் சூடு மற்றும் சொகுசு ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. பெனெல்லி TNT25 இடவசதி, கையாளுமை போன்றவற்றில் ஈர்த்தாலும், பிரேக்குகளின் திறன் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் குறைவாக இருப்பது பலவீனம். CBR 250 போதுமான பெர்ஃபாமென்ஸ், இடவசதி, சர்வீஸ் தரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், ஸ்டைல் மற்றும் கட்டுமானத் தரத்தில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இவற்றில் உங்களுக்குப் பொருத்தமான பைக் ஹோண்டாதான். ஆனால், பட்ஜெட்டைச் சற்று அதிகப்படுத்த முடியும் என்றால், யமஹா YZF-R3 பைக்கை வாங்குவது நல்ல சாய்ஸ்.

12 - 14 லட்சத்தில் புதிதாக கார் வாங்க உள்ளேன். ஹோண்டா சிட்டி சிறந்த கார் என்பது தெரியும். ஆனால், சிட்டியில் இருக்கும் அனைத்து வசதிகளும் மாருதி சுஸூகி சியாஸிலும் உள்ளது. ஹோண்டா சிட்டி கார் வாங்க வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. ஒரே குழப்பமாக உள்ளது. எதை வாங்கலாம்?

கி.தினேஷ்ராஜ், திருப்பத்தூர்.

ஹோண்டா சிட்டி- டிஸைன், சொகுசு, இன்ஜின் செயல்பாடு, கையாளுமை ஆகியவற்றில் காலங்களைக் கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள கார். இதிலுள்ள பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத் பெர்ஃபார்மர் என்ற பெயர் பெற்றது. ஆனால், டீசல் இன்ஜின் அதிக சத்தம் போடுகிறது. தவிர, ஒட்டுமொத்தத் தரம் காரின் அதிக விலையை நியாயப்படுத்தும் வகையில் இல்லை. மாருதி சுஸூகி சியாஸின் ஸ்டைலிங் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், ஒரு காரை வாங்கத் தூண்டும் அம்சங்களான இடவசதி, சிறப்பம்சங்கள், மைலேஜ் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. அதேசமயம், இதில் இடம்பிடித்துள்ள இரண்டு இன்ஜின்களுமே பவர்ஃபுல்லாக இல்லை. ஆனால், ஹோண்டாவைவிட மாருதியின் டீலர் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் தரம் என அதிக பலம் கொண்டுள்ள சியாஸ், உங்களுக்குப் பொருத்தமான காராக இருக்கும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

தற்போது நான் ஹோண்டா ஷைன் 125 சிசி பயன்படுத்தி வருகிறேன். எனக்கு பைக் ரைடிங் மிகவும் பிடிக்கும். மாதத்துக்கு 1,000 கி.மீ வரை ஓட்டுவேன். எனவே, நீண்ட தூரம் செல்வதற்கு ஏற்ற டூரர் பைக் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய பட்ஜெட் 1.5 லட்சம். அதில் குறைவான பராமரிப்புச் செலவுகள் கொண்ட பைக் வாங்க விரும்புகிறேன்.

தியாகராஜன், சிதம்பரம்.

உங்களின் பட்ஜெட்டில் டூரர் பைக் இல்லை. ஆனால், இந்தியாவின் விலை குறைந்த க்ரூஸர் பைக் எனப் பெயர் பெற்றுள்ள பஜாஜ் அவென்ஜரை நீங்கள் பரிசீலிக்கலாம். இது, பராமரிப்புச் செலவு மற்றும் மைலேஜ் விஷயத்தில், பர்ஸைப் பதம் பார்க்காது. மேலும், போதுமான பவரை வெளிப்படுத்தும் ஸ்மூத்தான 220சிசி இன்ஜின், சொகுசான ஓட்டுதல், விலைக்கேற்ற தரம் என அனைத்து வயதினரையும் ஈர்க்கிறது இந்த பைக். இன்னும் பவர்ஃபுல்லான பைக் வேண்டும் என்றால், பஜாஜ் பல்ஸர் AS200 நல்ல சாய்ஸாக இருக்கும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. மெயில்: motor@vikatan.com