ஆட்டோ எக்ஸ்போவின் மற்ற அரங்குகளைவிட, மாருதியின் அரங்கில் கூட்டம் அள்ளியது. காரணம் - விட்டாரா பிரெஸ்ஸா. இது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி மட்டுமல்ல... இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதும்கூட. இதை டிஸைன் செய்தது, மாருதியின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவைச் சேர்ந்த சி.வி.ராமன் தலைமையிலான டீம். ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாகக் களம் இறங்கவிருக்கும் இதன் இன்ஜின், எக்கோஸ்போர்ட்டைப் போலவே குறுக்கு வாட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே உள்ள இதில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் விருப்பத் தேர்வாகக்கூடக் கொடுக்கப்படவில்லை.

டிஸைன்

‘பார்த்ததும் பரவசப்படுத்த வேண்டும்’ என்ற நோக்கத்துடன் விட்டாரா பிரெஸ்ஸா டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட கார் என்றாலும் இது ஒரு எஸ்யுவி என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது இதன் டிஸைன். மாருதியின் எந்த காரிலும் இல்லாத புதிய க்ரோம் கிரில் இதில் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஹெட்லைட்ஸ் (டாப் வேரியன்ட்டில் புரொஜெக்டர் லேம்ப்) மற்றும் பனி விளக்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. எல்இடி ரன்னிங் லைட்ஸ் அட்டகாசம். ஸ்பிளிட் ஏர்-டேம், ஷோல்டர் லைன், கதவுகளுக்குக் கீழே இருக்கும் கிளாடிங் ஆகியவை இதன் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. ‘ஃப்ளோட்டிங் ரூஃப்’ எஃபெக்ட் கொடுக்கும் பொருட்டு, A, B மற்றும் C பில்லர்களுக்குக் கறுப்பு வண்ணமும் ரூஃப்புக்கும், D பில்லருக்கும் பாடி கலரும் கொடுத்திருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் விரும்பினால், ரூஃப்புக்கும் D பில்லருக்கும் கான்ட்ராஸ்ட் கலரைக்கூடத் தேர்ந்தெடுக்கலாம். விட்டாராவை மேலும் பர்சனலைஸ் செய்துகொள்ள விரும்பினால் கிளாமர், ஸ்போர்ட்டி, அர்பன் என மூன்றுவிதமான பேக்கேஜ் மாருதி அளிக்கிறது. காரின் பின்பக்கத் தோற்றத்தை கிளாடிங்கும், க்ரோமில் மின்னும் ‘விட்டாரா பிரெஸ்ஸா’ என்ற முத்திரையும் தீர்மானிக்கின்றன.

விட்டாராவின் 328 லிட்டர் கொள்ளளவுகொண்ட பெரிய டிக்கி, பொருட்களை வைக்க செளகரியமான வகையில் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. ‘போதாது மேலும் இடம் வேண்டும்’ என்றால், 60:40 என்ற வகையில் இருக்கைகளை மடக்கிக்கொள்ளலாம்.

பொதுவாக, டிக்கி பெரிதாக இருந்தால், கேபின் ஸ்பேஸ் பெரிதாக இருக்காது. ஆனால், இந்த இரண்டையும் மாருதி அற்புதமாகச் சமாளித்திருக்கிறது. பின்வரிசையில்கூட கை கால்களை நீட்டி மடக்கி உட்கார, தாராளமான இடம் இருக்கிறது. பின்னிருக்கைகளில் நடுவே கைகளை வைக்க ஆர்ம் ரெஸ்ட் உண்டு. சற்றே உயரமாக இருக்கும் சென்டர் கன்ஸோலில், இரட்டை க்ளோவ்பாக்ஸ் (அதிலே ஒன்று குளிரூட்டப்பட்டது), இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேக்லிட் லைட் டயல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஸ்டீயரிங் மற்றும் பவர் விண்டோஸ் ஸ்விட்ச்சுகள் மற்ற மாருதி கார்களில் இருப்பவைதான். 6 வேரியன்டுகளாக விற்பனைக்கு வரவிருக்கும் விட்டாராவின் ZDi வேரியன்டில் மாருதியின் ஸ்மார்ட்ப்ளே டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இதை ஆப்பிள் மொபைல் மூலம் மட்டுமே ‘கார்ப்ளே’ உடன் இணைத்துக்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு போனுடன் இப்போதைக்கு இணைக்க வசதி இல்லை.

விட்டாராவின் டாப் வேரியன்ட்டில், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, காற்றுப்பைகள், ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் ஆகியவை உள்ளன. விட்டாராவை இயக்கப்போவது, DDiS200 எனும் பெயர்கொண்ட ஃபியட்டின் 1.3 லிட்டர் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின். இது, 20.4Kgm டார்க், 89bhp சக்தியை வெளிப்படுத்தும். 5 கியர்களைக்கொண்ட விட்டாராவில், அடுத்து பெட்ரோல் வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டிருக்கிறது. 1.2 லிட்டர் K12 இன்ஜின் அல்லது ஃபோர்டு எக்கோ பூஸ்ட் இன்ஜினை எதிர்கொள்ளும் வகையில், 110bhp சக்தியை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜினுடன் விட்டாரா பிரெஸ்ஸா வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விட்டாராவின் முன் சக்கரங்களுக்கு மெக்பர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்பக்கச் சக்கரங்களுக்கு டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் கொடுத்திருக்கிறார்கள். 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இதில் 215/60 R16 டயர்களைப் (மிடில் மற்றும் டாப் வேரியன்ட்டுக்கு) பொருத்தியிருக்கிறார்கள்.

இது, மாருதியின் வழக்கமான ஷோ ரூம்களில் மார்ச் முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது.