Election bannerElection banner
Published:Updated:

வென்ட்டோ வெர்ஷன் 2.0

வென்ட்டோ வெர்ஷன் 2.0
வென்ட்டோ வெர்ஷன் 2.0

ஃபர்ஸ்ட் லுக்: ஃபோக்ஸ்வாகன் ஏமியோ தொகுப்பு: ராகுல் சிவகுரு

 ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான காம்பேக்ட் செடான் காரான ஏமியோ, வெளிவருவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டிருக்கிறது. எதிலும் சமரசம் செய்யாமல், தனது கோட்பாடுகளுக்கு ஏற்ப காரைத் தயாரிக்க மெனக்கெட்டதால், காலதாமதம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிட் சைஸ் செடான் கார்களுக்கான மார்க்கெட்டை எடுத்துக்கொண்டால், விற்பனையாகும் கார்களில், 82 சதவிகிதம் காம்பேக்ட் செடான் கார்கள்தான். அதனாலேயே, இந்த செக்மென்ட் மேலும் வளர்வதற்கு வாய்ப்பு அதிகம். செக்மென்ட் லீடரான மாருதி சுஸூகி டிஸையர் (மாதந்தோறும் 20,000 கார்கள் விற்பனை), கடந்த ஆண்டுதான் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. ஹோண்டா அமேஸ் (மாதந்தோறும் 4,500 கார்கள் விற்பனை), விரைவில் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் வரவிருக்கிறது. எனவே, இந்த இரண்டு கார்களைத் தாண்டி, வெல்லுமா ஏமியோ?

வென்ட்டோ வெர்ஷன் 2.0

டிஸைன்

காரின் முன்பக்கம், அப்படியே போலோ/வென்ட்டோ கார்களின் ஜெராக்ஸ்தான். ஆனால், க்ரோம் மற்றும் மெட்டல் பயன்படுத்தப்பட்ட விதம், க்ளாஸ். முன்பக்க பம்பர், வீல் ஆர்ச்சுடன் இணைவது அழகு. இதுபோன்ற விஷயங்கள், ஏமியோ ஸ்டைலான கார் என்பதை மீண்டும் உறுதிப்படுகிறது. ஹெட்லைட்டில் இருந்து செல்லும் பாடி லைன், டெயில் லைட் வரை தடங்கல் இன்றிச் செல்கிறது. காரின் பக்கவாட்டுத் தோற்றம் அம்சமாக இல்லை. போலோவை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஏமியோவின் 2,456 மிமீ வீல்பேஸில், மாற்றங்கள் இல்லாவிட்டாலும் பூட் திடீரென முடிந்துவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. தவிர, ரூஃப் பகுதி டிக்கியுடன் சரிவர இணையவில்லை. டிக்கியில் சின்ன ஸ்பாய்லர், புதிய டெயில் லைட்ஸ் ஆகியவை காரின் பின்பக்கத்தை ஸ்டைலாகக் காட்ட முயற்சித்தாலும், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட் போல ஏமியோவின் டிஸைன் சீராக இல்லை.

வென்ட்டோ வெர்ஷன் 2.0

டாப் வேரியன்ட்டில் 15 இன்ச் அலாய் வீல்கள். டிக்கி கொள்ளளவு, வெறும் 330 லிட்டர்தான். இதுவே ஹோண்டா அமேஸில், 400 லிட்டர்; ஹூண்டாய் எக்ஸென்ட்டில் 407 லிட்டர். ஆனால், இடம் தேவைப்பட்டால், ஏமியோவின் பின்பக்க இருக்கையை மடித்துக்கொள்ளலாம். போலோவில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான் ஏமியோவிலும் இடம்பிடித்துள்ளது. எனவே, பயன்படுத்த வாட்டமான ஸ்டீயரிங் வீல் - கியர் லீவர் - டோர் பேடு, தெளிவான இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், மெட்டல் வேலைப்பாடுகள் கொண்ட சென்டர் கன்ஸோல் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. காரின் பாதுகாப்புக்காக 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகியவை எல்லா வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த செக்மென்ட் கார்களில் இல்லாத சிறப்பம்சங்களான க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், கார்னரிங் லைட்ஸ், MirrorLink வசதியுடன்கூடிய டச் ஸ்கிரீன் என ஆச்சரியப்படுத்துகிறது ஏமியோ. டாப் வேரியன்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க ஏ.சி வென்ட், பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், கூல்டு க்ளோவ்பாக்ஸ், அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் ஆகியவை இடம் பிடித்துள்ளன. போலோவுடன் ஒப்பிடும்போது, முன்பக்க இடவசதியில் மாற்றம் இல்லாவிட்டாலும், பின்பக்க இடவசதியில் முன்னேற்றம் தெரிகிறது. இருக்கையில் நன்கு சாய்ந்து வசதியாக உட்கார முடிகிறது. ஆனால், முன் பக்கத்தில் உயரமான நபர்கள் உட்கார்ந்தால், பின் பக்கம் இருப்பவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படும்.

வென்ட்டோ வெர்ஷன் 2.0
வென்ட்டோ வெர்ஷன் 2.0

போலோவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (73bhp) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (89bhp) ஏமியோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பின்னாளில் டீசல் மாடலில் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், பெட்ரோல் மாடலில் TSI இன்ஜினும் அறிமுகமாகும். இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை வாக்கில் அறிமுகமாக இருக்கும் ஏமியோவின் விலை, 5.5 முதல் 9.5 லட்ச ரூபாய் வரை இருக்கும். கூடுதலாக, அட்டகாசமான வாரன்ட்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜையும் காருடன் வழங்குவோம் என்கிறது ஃபோக்ஸ்வாகன். என்னதான் காரின் பின்பக்கத் தோற்றம், இடவசதி ஆகியவை சிறப்பாக இல்லாவிட்டாலும் கட்டுமானத் தரம், கேபின் தரம், கையாளுமை, பவர்ஃபுல் டீசல் இன்ஜின், ஆப்ஷனல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றில், செமத்தியாக ஸ்கோர் செய்கிறது ஏமியோ. காம்பேக்ட் செடான்களான ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், மாருதி சுஸூகி டிஸையர், ஹூண்டாய் எக்ஸென்ட் கார்களுக்கு... ஜெர்மன் போட்டி உருவாகிவிட்டது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு