ஆசியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் திருவிழா, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ. 13-வது நிகழ்வான இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, அதிக அளவில் கார், பைக், ட்ரக் தயாரிப்பாளர்கள் கடை விரித்திருந்தார்கள். எதிர்பார்த்ததுபோலவே காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவிகளின் படையெடுப்பு அதிகமாக இருந்தது. ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் வேட்டைக்காடாக இருந்த இந்த எக்ஸ்போவின் ரிங் சைட் வியூ இது...

பிஎம்டபிள்யூ

எக்ஸ்போவில் மிக முக்கியமான இரண்டு கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது பிஎம்டபிள்யூ. புதிய தலைமுறை X1 எஸ்யுவி, 29.9 லட்சம் ரூபாய் முதல் 39.9 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை விலையுடன் அறிமுகமானது. தற்போது டீசல் இன்ஜின் மாடல் மட்டுமே! இந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 189bhp சக்தியை அளிக்கிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. பென்ஸ் GLA, ஆடி Q3 ஆகிய போட்டி கார்களால் தடுமாறிய X1 காரின் விற்பனை, இனி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

1.11 கோடி ரூபாய் ஆரம்ப விலையுடன் அறிமுகமானது, புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான். காரின் அதிகபட்ச விலை 1.55 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). முன்பைவிட எடை குறைவாகவும், அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது 7 சீரிஸ். கார்பன் - ஃபைபர் கட்டுமானம், புதிய இன்ஜின், உயர்தர இன்டீரியர் என எல்லாமே புதிது. 261bhp சக்தியை அளிக்கும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் இன்ஜின், 444bhp சக்தியை அளிக்கும் 4.4 லிட்டர் ட்வின் - டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் ஆகியவை உள்ளன.

செவர்லே

இன்னும் பீட் காரையே நம்பியிருக்கிறது செவர்லே. 2017-ம் ஆண்டு புதிய தலைமுறை பீட் இங்கே விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில், பீட் காரை அடிப்படையாகக் கொண்ட எஸென்ஷியா காம்பேக்ட் செடான், ஆக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் கான்செப்ட் கார்களை, ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது செவர்லே.

பாடி கிளாடிங், சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ், ரூஃப் ரெயில்ஸ், LED ஹெட்லைட்ஸ், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது எஸென்ஷியா. இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்பின் எம்பிவி, GM-ன் காமா-II பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் இன்ஜினுடன் 2017-ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. ஆறாவது தலைமுறை கமாரோ, 2016 கார்வெட் ஸ்டிங்ரே ஆகிய ஸ்போர்ட்ஸ் கார்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.

மஹிந்திரா

2016 ஆட்டோ எக்ஸ்போ வில் கான்செப்ட் கார்களால் கலர் கலராக கலக்கிய நிறுவனம், மஹிந்திரா. எஸ்யுவி-கூபே கான்செப்ட்டாக உருவாகியிருக்கும் ‘XUV ஏரோ’ காரை வடிவமைத்தது, மஹிந்திரா சமீபத்தில் வாங்கிய பினின்ஃபரினா டிஸைன் நிறுவனம்.

சூசைட் டோர்ஸ், வளைவான ரூஃப் லைன், கட்டுமஸ்தான பம்பர்கள் காரைத் தனித்துக் காட்டுகின்றன. இதில் 210 bhp சக்தியை அளிக்கக்கூடிய mHawk இன்ஜின் உள்ளது. 0-100 கி.மீ வேகத்தை அடைய ஆறு விநாடிகள் மட்டுமே ஆகுமாம். ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காருக்குக் கிடைக்கும் ஃபீட்பேக்கை வைத்து இதைத் தயாரிக்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்க உள்ளது மஹிந்திரா.

e20 ஸ்போர்ட், e-வெரிட்டோ என எலெக்ட்ரிக் கார்களையும் காட்டியது மஹிந்திரா. ஒரு முழு சார்ஜுக்கு 100 கி.மீ வரை செல்லக்கூடிய e-வெரிட்டோ மார்ச் மாதம் விற்பனைக்கு வரவிருக்கிறது. தார் ஜீப்பை 37 இன்ச் ஆஃப் ரோடு டயர்கள், பிரத்யேக பம்பர்கள், ராக் ஸ்லைடர்கள், ராலி சீட்டுகள், ரியர் ஆக்ஸில் டிஃப்ரன்ஷியல் லாக், ரோல்-ஓவர் பார், எலெக்ட்ரிக் வின்ச் என அதிகம் மாற்றியமைத்து, ‘தார் டே பிரேக்’ கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தியது. தவிர, ஸாங்யாங் டிவோலி எஸ்யுவியையும் கையோடு அறிமுகப்படுத்திவிட்டது மஹிந்திரா. மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் டிவோலி காரில் 1.6 லிட்டர் டீசல், பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன.

ஜாகுவார்

ஜாகுவாரின் என்ட்ரி லெவல் சொகுசு செடான் காரான XE, ஆட்டோ எக்ஸ்போவில் 39.9 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமானது. அலுமினியம் மோனோகாக் கட்டுமானம் கொண்ட இந்த காரின் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 197bhp மற்றும் 237bhp ஆகிய இரண்டு டியூன்களில் கிடைக்கிறது. ஆனால், இரண்டுக்குமே 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். ஆடி A4, மெர்சிடீஸ் C-கிளாஸ் ஆகிய கார்களுக்குச் சவாலாக இருக்கப்போகிறது XE.

இரண்டாவது தலைமுறை XF காரையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஜாகுவார். முன்பைவிட அதிக சக்தியுடனும், சொகுசு வசதிகளுடன் வந்திருக்கிறது XF. லேட்டஸ்ட் இன் - கன்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை வசீகரிக்கின்றன.

விரைவில் விற்னைக்கு வரவிருக்கும் F-Pace கிராஸ்ஓவர் எஸ்யுவி, ஆட்டோ எக்ஸ்போவில் தலைகாட்டியது. முழுக்கவே அலுமினியம் பிளாட்ஃபார்மில் தயாரான இந்த காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜினும், 8-ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் உள்ளன.

ஆடி

புதிய தலைமுறை A4 செடான் காரை, அப்படியே ஃப்ரெஷ்ஷாக எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது ஆடி. முன்பைவிட பெரியதாக, சொகுசாக இருக்கிறது A4. இந்தியாவில் 170bhp சக்தியை அளிக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 177bhp சக்தியை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது புதிய A4. இதில் LED டெயில், ஹெட்லைட்ஸ் உள்ளன. 17-இன்ச் வீல்கள் ஆப்ஷனலாக அளிக்கப்படுகின்றன.

2.47 கோடி (எக்ஸ் ஷோரூம், டெல்லி) ரூபாய் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய R8 V10 ப்ளஸ் சூப்பர் கார். இப்போது சேஸியில் கார்பன் ஃபைபரும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பழைய காரைவிட 50 கிலோ எடை குறைவாகி இருக்கிறது. லம்போகினி ஹுராக்கன் சூப்பர் காரில் உள்ள அதே 5.2 லிட்டர் V10 இன்ஜின், இதில் 602bhp சக்தியையும் 57.10 kgm டார்க்கையும் அளிக்கிறது.

A8L செக்யூரிட்டி காரை, 9.15 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் இங்கு விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஆடி. VR9 லெவல் பாதுகாப்பு அமைப்பைக்கொண்டுள்ளது. இன்டர்காம், ரிமோட் கன்ட்ரோல் ஸ்டார்ட் போன்ற நவீன வசதிகள் இதில் உள்ளன. 429bhp சக்தியை அளிக்கும் 4.0 லிட்டர் ட்வின் - டர்போ V8 இன்ஜின் மற்றும் 493bhp சக்தியை அளிக்கும் W12 இன்ஜின் என, இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும்் இதில் உள்ளன.

மெர்சிடீஸ் பென்ஸ்

முதன்முறையாக GLC எஸ்யுவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ் பென்ஸ். C கிளாஸ் காரை அடிப்படையாகக்கொண்ட இந்த எஸ்யுவி - பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5 ஆகிய கார்களுக்குப் போட்டியாக வருகிறது.

241bhp சக்தியை அளிக்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், C கிளாஸ் காரில் இருக்கும் 2.1 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. டீசல் இன்ஜின் 168bhp, 201bhp டியூன்களில் வரலாம். கியர்பாக்ஸ் 9G ட்ரானிக் ஆட்டோமேட்டிக்.

S கிளாஸ் கேப்ரியோலே, மெர்சிடீஸ்-மேபேக் S600 கார்டு, G500 4x4 போன்ற கார்களையும் அறிமுகப்படுத்தியது பென்ஸ். S கிளாஸ் கேப்ரியோலே காரில், 449bhp சக்தி அளிக்கும் 4.7 லிட்டர் ட்வின் - டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. மெர்சிடீஸ் ஏர் ஸ்கார்ஃப் நெக் ஹீட்டர், தெர்மோட்ரானிக் கிளைமேட் போன்ற அதி நவீன சொகுசு வசதிகள் இந்த காரின் சிறப்பம்சம்!
மெர்சிடீஸ் மேபேக் S600 கார்டு கார், VR9 லெவல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. காருக்கு அடியில் குண்டு வெடித்தாலும், உள்ளே இருப்பவர்களுக்கு ஒன்றும் ஆகாதாம்!

ஜீப்

ரேங்க்ளர் அன்லிமிடெட், கிராண்ட் செரோக்கி, கிராண்ட் செரோக்கி SRT என மூன்று மாடல்களுடன் இந்தியாவில் களமிறங்க உள்ளது ஜீப். ரேங்க்ளர் அன்லிமிடெட் ஜீப்பில் 197bhp சக்தியை அளிக்கக்கூடிய 2.8 லிட்டர் டீசல் இன்ஜின், 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஹார்டு - டாப் அல்லது சாஃப்ட்-டாப் என இரண்டு மாடல்கள்.

கிராண்ட் செரோக்கிதான் ஜீப் பிராண்டின் சொகுசு எஸ்யுவி. சம்மிட் வேரியன்ட்டில் பனோரமிக் சன் ரூஃப், 20-இன்ச் க்ரோம் அலாய் வீல்ஸ், பை-ஸெனான் அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், ஹீட்டட் - வென்டிலேட்டட் இருக்கைகள், சாட்டிலைட்-நேவிகேஷன், ப்ளூ-டூத் கனெக்டிவிட்டி, பார்க்கிங் சென்ஸார், ரிவர்ஸ் கேமரா, எலெக்ட்ரிக் டெயில்கேட், இரண்டு யுஎஸ்பி ஸ்லாட்டுகள் என வசதிகள் அதிகம். 237bhp சக்தியை அளிக்கும் 3.0 லிட்டர் V6 டீசல் இன்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளன.

சாதாரண கிராண்ட் செரோக்கியின் பெர்ஃபாமென்ஸ் மாடல்தான் கிராண்ட் செரோக்கி SRT (ஸ்ட்ரீட் ரேஸிங் டெக்னாலஜி). இதில், 6.4 லிட்டர் HEMI V8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது, 461bhp சக்தியையும், 63.6kgm டார்க்கையும் அளிக்கிறது. கறுப்பு வண்ண ஹெட்லைட்ஸ், SRT வீல்ஸ், பைரலி டயர்கள், 6-பிஸ்டன் பிரெம்போ பிரேக்ஸ், செலெக்-டிராக் டிரைவ் மோடு செலெக்டர், பிரத்யேக இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஃப்ளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட்டர், 8.4 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 19 இன்ச் ஹார்மான் கார்டன் ஆடியோ சிஸ்டம் என தெறிக்கவிடுகிறது இந்த கார்.

ஃபியட்

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரக்கூடிய லீனியா 125s, புன்ட்டோ ப்யூர், அவென்ச்சூரா அர்பன் கிராஸ் கான்செப்ட் ஆகிய மூன்று கார்களை எக்ஸ்போவில் காட்டியது ஃபியட்.
லீனியா 125s கார், வழக்கமான லீனியாதான். ஆனால், இதில் ரிடியூன் செய்யப்பட்ட 125bhp இன்ஜின் உள்ளது. மேலும், கறுப்பு வண்ண 16 இன்ச் அலாய் வீல்கள், 5.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள் உள்ளன. அவென்ச்சுரா அர்பன் கிராஸ் கான்செப்ட்டில், 140bhp சக்தியை அளிக்கக்கூடிய டி-ஜெட் இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரவிருக்கிறது.

புன்ட்டோ ப்யூர், விரைவில் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்காக விற்பனைக்கு வரும். இதில் நான்கு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. நான்கு இன்ஜின்களுக்கும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். புன்ட்டோ ப்யூர் காரில் முன்பக்கம் காற்றுப் பைகளும், ஏபிஎஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரோம் கதவு கைப்பிடிகள், டிரைவர் சீட்டுக்கு ஹைட் அட்ஜஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. விலை 4.49 லட்சம் முதல் 5.49 லட்சம் ரூபாய் வரை. (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

ஃபோர்டு

இன்னும் சில மாதங்களில் ஆறாவது தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும். இந்தியாவில் புதிய மஸ்டாங் 420bhp சக்தியை அளிக்கக்கூடிய 5.0 லிட்டர் V8 இன்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. பர்ன்-அவுட் சாகஸங்களுக்காக எலெக்ட்ரானிக் லைன்-லாக் வசதியும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பெஞ்ச் மார்க்காக புதிய ஃபோர்டு மஸ்டாங் அமையும்!

நிஸான்

கார் ஆர்வலர்களிடையே ‘காட்ஸில்லா’ என கெத்தாக அழைக்கப்படும் நிஸான் GT-R காரை, 2016 ஆட்டோ எக்ஸ்போவுக்குக் கொண்டுவந்தது நிஸான். இந்தியாவில் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில், 3.8 லிட்டர் V6 இன்ஜின் 546bhp சக்தியையும், 63.53 kgm டார்க்கையும் அளிக்கிறது. இதன் விலை சுமார் இரண்டு கோடி இருக்கும்.

மாட்யூலர் CMF பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட எக்ஸ்-ட்ரெயில் ஹைபிரிட் காரையும் காட்டியது நிஸான். இதில், எலெக்ட்ரிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், CVT கியர்பாக்ஸ் இருக்கும். ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும் என்பதால், விலை 32 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

இசுஸூ

அட்வென்ச்சர் ரசிகர்களுக்காகவே D-மேக்ஸ் V-க்ராஸ் பிக்-அப் டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இசுஸூ. செவர்லே ட்ரெயில்பிளேசரை அடிப்படையாகக்கொண்ட டிரக் இது. இரண்டு காரிலும் ஒரே டேஷ்போர்டுதான். ஆல்-வீல் டிரைவ் பிக்-அப் டிரக்கான இதில், 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் 130bhp சக்தியை அளிக்கிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த டிரக்கை ஓட்ட, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இதன் விலை, 15 லட்சம் ரூபாயைத் தாண்டும்.

ஹைபீரியன் 1 கான்செப்ட்

பெங்களூரூவைச் சேர்ந்த மோட்டார்மைண்ட் எனும் டிஸைன் நிறுவனம் உருவாக்கிய கான்செப்ட்தான் ஹைபீரியன்-1. ஃபார்முலா ஒன் காரை நினைவூட்டும் இதன் டிஸைன், பார்க்க செம ஸ்டைலாக இருக்கிறது. காரின் ஷெல், எடை குறைந்த ஃபைபர் கிளாஸால் உருவாக்கப்பட்டுள்ளது. 2.7 லிட்டர் V6 இன்ஜின் காரின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. முதலீடு கிடைத்தால், இந்த காரைத் தயாரிப்பார்களாம்.

மாருதி சுஸூகி

கான்செப்ட் வடிவத்தில் இருந்த இக்னிஸ், கிட்டத்தட்ட உற்பத்தி செய்யத் தயாரான நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. சமீபத்தில் அறிமுகமான KUV1OO காரைப்போல க்ராஸ்ஓவர் டிஸைன்கொண்ட ஹேட்ச்பேக்காக இருக்கிறது இக்னிஸ்.

டே டைம் ரன்னிங் லைட் உடன் ஹெட்லைட்ஸ், கிரில்லுடன் அழகாக இணைந்துள்ளது. காரின் பின்பக்கம் ரெட்ரோ ஸ்டைல். டேஷ்போர்டு காம்பேக்ட்டாக இருப்பதால், கேபினில் இடவசதி சிறப்பாக இருக்கிறது. புதிய ஸ்டீயரிங் வீல், ஏ.சி கன்ட்ரோல்கள், டச் ஸ்கிரீன் சிஸ்டம் என இன்டீரியர் செம மாடர்ன். இன்ஜின் ஆப்ஷன்களை மாருதி அறிவிக்காவிட்டாலும், பெலினோவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்கள் இக்னிஸ் காரில் பொருத்தப்படும் வாய்ப்புகள் அதிகம். காம்பேக்ட் கார்களுக்கான புதிய ஃப்ளாட்ஃபார்மில் இந்த கார் தயாராக இருப்பதால், எடை குறைவான, அதே சமயம் ஸ்டிஃப்பான காராக இக்னிஸ் இருக்கும். இந்த ஆண்டில் இது 5.5 - 8 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

பெலினோவின் ஹாட் வெர்ஷனாக வெளியாக இருக்கிறது பெலினோ RS. வழக்கமான காரில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக பாடி கிட்டையும், சுஸூகியின் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் இந்த காரில் சேர்த்துள்ளது மாருதி. 12 வால்வுகளுடன் 996 சிசி கொள்ளளவு கொண்ட இந்த பூஸ்டர்ஜெட் இன்ஜின், 110bhp@5,500rpm பவரையும், 17.28kgm@2,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. குறைவான எடையுள்ள சின்ன டர்போ இன்ஜின் என்பதால், அதிக மைலேஜையும், பெர்ஃபாமென்ஸையும் நாம் எதிர்பார்க்கலாம்.

ரெனோ

க்விட் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப் படுத்தியது ரெனோ. இதில் கூடுதல் பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளன. இதனால், வழக்கமான க்விட்டில் இருந்த 0.8 லிட்டர் இன்ஜினின் மைனஸான, பவர் குறைபாடு என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. க்விட் AMT கார் மூலமாக, ஆல்ட்டோ K10 AMT காருடன் போட்டியிட ரெனோ தயாராகிவிட்டது.

இதனுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டஸ்ட்டர் எஸ்யுவிக்கும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனைக் கொடுத்துள்ளது ரெனோ. 110bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் இன்ஜினுடன் இந்த கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. க்விட் காரை அடிப்படையாகக்கொண்டு இரு கான்செப்ட் கார்களை ரெனோ காட்சிப்படுத்தியது. இவற்றில் க்விட் க்ளைம்பர், ஆஃப் ரோடுகளில் பயணிக்கும் வகையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இருந்தது. க்விட் ரேஸர், பெர்ஃபாமென்ஸ் காராக ஈர்த்தது. இதில் 18 இன்ச் வீல்கள், மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ், 4 பாயின்ட் ஹார்னெஸ் பக்கெட் சீட், ரோல் கேஜ், டிஜிட்டல் ஆர்பிஎம் மீட்டர், அல்கான்ட்ரா அப்போல்ஸரி, கார்பன், அலுமினியத்தால் செய்யப்பட்ட இன்டீரியர் என மிரட்டுகிறது.

டாடா மோட்டார்ஸ்

எக்ஸ்போவில் டாடாவின் ஸ்டார் கார், 4 மீட்டர் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யுவிதான். போல்ட் மற்றும் ஜெஸ்ட் தயாராகும் அதே ஃப்ளாட்ஃபார்மில் தயாராக இருக்கும் நெக்ஸானின் முன்பக்கத்தில் இருக்கும் பெரிய கிரில் மற்றும் பானெட் வரை நீளும் ஹெட்லைட்ஸ், காருக்கு நல்ல லுக் தருகின்றன. காரின் டிஸைனைப் போலவே, கேபின் வடிவமைப்பும் வேற லெவலில் இருக்கிறது. இடவசதி அதிகமாக இருப்பதுடன், 6.5 இன்ச் டச் ஸ்கிரீனைக் கொண்ட இன்டீரியர் தரமும் அட்டகாசம். 108.5bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 105bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் நெக்ஸானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2017-ல் அறிமுகமாக உள்ளது நெக்ஸான்.

ஹெக்ஸாவை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, அதனை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது டாடா. ஆரியாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் தோற்றம், எஸ்யுவி போலவே இருக்கிறது. அதிக சிறப்பம்சங்கள், தொழில்நுட்பத்தால் நிரம்பியிருக்கும் ஹெக்ஸாவின் விலையை, டாடா கச்சிதமாக நிர்ணயிக்கும் என நம்பலாம். இதனுடன் டியாகோ ஹேட்ச்பேக் (ஸிகா) காரை அடிப்படையாகக் கொண்ட கைட் 5 காம்பேக்ட் செடானும் காட்சிப்படுத்தப்பட்டது. 4 மீட்டர் நீளத்திற்குள்ளான இந்த கார், டியாகோவில் இருக்கும் அதே இன்ஜின்கள், இன்டீரியர் பொருத்தப்பட இருப்பதுடன், காம்பேக்ட் செடான்களில் அதிகமான 420 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டிருக்கிறது. ஏபிஎஸ், இரு காற்றுப் பைகள், ட்ராக்ஷன் கன்ட்ரோல் இடம்பிடித்துள்ளன.

ல்ட் ஹேட்ச்பேக்கின் பவர்ஃபுல் அவதாரம்தான் டாடா போல்ட் ஸ்போர்ட். இதில் 108.5bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங், பெர்ஃபாமென்ஸ் எக்ஸாஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள், பாடி கிட் என கலக்க இருக்கிறது.

ஹோண்டா

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், க்ராஸ்ஓவர் யுட்டிலிட்டி வெஹிக்கிள் என்று வகைப்படுத்தப்படும் BR-V காரை, எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹோண்டா. மொபிலியோ, அமேஸ், பிரியோ தயாராகும் பிளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது. பாடி க்ளாடிங், பெரிய வீல் ஆர்ச், ரூஃப் ரெயில், உயரும் ரூஃப் லைன் ஆகியவை இதற்கு ஒரு எஸ்யுவி தோற்றத்தை அளிக்கின்றன. கிரில், டெயில் கேட், கதவு ஃப்ரேம், கதவு கைப்பிடிகள், வீல்களில் இந்தியர்களுக்குப் பிடித்த க்ரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய டேஷ்போர்டு மற்றும் 7 இருக்கைகள் BR-V-யின் கேபினை சிறப்பானதாக மாற்றுகின்றன. மொபிலியோ மற்றும் சிட்டியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறம், உட்புறம் என ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும் ஹோண்டா அக்கார்டு செடானின் எல்ஈடி ஹெட்லைட்ஸ், ஆடி கார்களை நினைவுபடுத்துகிறது. ஹைபிரிட் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் அக்கார்டை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது ஹோண்டா.

ஃபோக்ஸ்வாகன்

ஹாட் ஹேட்ச்பேக் கார்கள் லிஸ்ட்டில் போலோ GTi காரைக் காட்சிக்கு வைத்தது ஃபோக்ஸ்வாகன். செப்டம்பரில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முதலில் மூன்று கதவுகளைக்கொண்ட மாடலும், பின்பு ஐந்து கதவுகளைக் கொண்ட மாடலும் அறிமுகமாக இருக்கிறது. போலோ GTi காரில் 189bhp பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TSI இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ABS, ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன. CBU முறையில் கார் இறக்குமதி செய்யப் படுவதால், விலை எப்படியும் 20 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.

பஸாத் செடானின் ஹைபிரிட் மாடலான GTE காரைக் காட்சிபடுத்திய ஃபோக்ஸ்வாகன், இதனை இந்தியாவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. 164bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 113bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி இந்த காரில் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக்கொண்ட பஸாத் GTE காரில் எலெக்ட்ரிக் மோடில் 50 கி.மீ தூரமும், அதிகபட்ச வேகமாக 130 கி.மீ செல்ல முடியும் என்கிறது ஃபோக்ஸ்வாகன்.

ஸ்கோடா ஆக்டேவியா தயாரிக்கப் பட்டுள்ள அதே MQB பிளாட்ஃபார்மில் தயாராக உள்ள டீகன் எஸ்யுவி, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யுவியில் 177bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 4 வீல் டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷார்ப்பான டிஸைனுடன் திகழும் டீகன், MQB பிளாட்ஃபார்மின் உதவியால் பழைய காரைவிட 50 கிலோ எடை குறைவாக இருக்கிறது. தவிர, எல்ஈடி ஹெட்லைட்ஸ், லேட்டஸ்ட் பாதுகாப்பு சாதனங்கள், தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் 2017-ல் அறிமுகமாக இருக்கிறது. விலையைக் கச்சிதமாக நிர்ணயித்தால், வெற்றி நிச்சயம்!

ஹூண்டாய்

எஸ்யுவிகளில் கவனம் செலுத்திவரும் ஹூண்டாய், அதன் வெளிப்பாடாக டூஸான் மற்றும் 4 மீட்டர் நீளத்துக்குள்ளான HND-14 கார்லினோ காம்பேக்ட் எஸ்யுவி கான்செப்ட்டையும் எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது. HND-14 கார்லினோ, விற்பனைக்கு வரும்போது க்ரெட்டாவுக்குக் கீழே பொசிஷன் செய்யப்பட உள்ளது.

க்ரெட்டா மற்றும் சான்டாஃபீ கார்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பும் விதமாக, டூஸான் எஸ்யுவி இந்தியாவில் 17 - 22 லட்ச ரூபாயில் களமிறங்க உள்ளது. எலெக்ட்ரிக் டெயில்கேட், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், டிரைவ் மோடுகள், எமர்ஜென்சி பிரேக்கிங், ப்ளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், லேன் கீப்பிங் என சிறப்பம்சங்களை வாரி இறைத்திருக்கிறது ஹூண்டாய்.

மேலும், எக்ஸ்போவில் லக்ஸூரி காரான ஜெனிசிஸ் இடம்பெற்றது. பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் கார்களுடன் போட்டியிட இருக்கும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்பதை ஹூண்டாய் அறிவிக்கவில்லை.

டொயோட்டா

உலகளவில் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்குப் பெயர் பெற்ற வாகனங்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் டொயோட்டாவின் தயாரிப்புகள், டல்லான டிஸைன் மற்றும் இன்டீரியரைக் கொண்டிருந்தாலும், அவை காரின் வாழ்நாள் வரை அப்படியே இருக்கும். சொகுசு, கையாளுமை, பாதுகாப்பு, மைலேஜ் ஆகியவற்றில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ள இனோவா, Crysta என்ற அடைமொழியுடன் எக்ஸ்போவில் அறிமுகமானது. பழைய காரின் மேற்கூறிய பலங்களுடன் ஸ்டைல், பவர், இன்டீரியர் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. 2.4 லிட்டர் டீசல், 2.7 லிட்டர் பெட்ரோல், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் எனப் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.
டிஸைன், அதிகரிக்கப்பட்ட நீளம், மேம்படுத்தப்பட்ட 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், காம்பேக்ட்டான நிக்கல் பேட்டரிகளால் இயங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் புதிய ப்ரையஸ், டொயோட்டாவின் புதிய TNGA ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. ப்ரையஸின் டிஸைனுக்கு அடிப்படை மிராய் காரில் இருந்து பெறப்பட்டுள்ளதால், அந்த காரையும் எக்ஸ்போவில் வைத்திருந்தது டொயோட்டா. ஃப்யூல் செல்களால் இயங்கும் மிராய், மாசு வெளியிடாத வாகனம்.