ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்க சில வாரங்களே இருந்த நிலையில், திடீரென ‘நவி’ எனும் புதிய வாகனத்தின் டீஸரை வெளியிட்டது ஹோண்டா. அதற்கு முன்பு நவி பற்றிய தகவலோ, ஸ்பை படங்களோ வெளியாகாததால், பலத்த எதிர்பார்ப்பு உருவானது. இறுதியாக, எக்ஸ்போவில் நவி அறிமுகமானபோது, ஆவலுடன் காத்திருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

‘பைக் பாதி; ஸ்கூட்டர் மீதி’ எனக் கலவையாக இருக்கும் இதன் டிஸைன், முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. சீட், ஹேண்டில்பார், சேஸி, முன்பக்க ஃபோர்க் ஆகியவை பைக்கில் இருப்பதுபோலவும், சின்ன வீல்கள் மற்றும் பின்பக்க வீலுக்கு அருகே இன்ஜின் ஆகியவை ஸ்கூட்டரையும் நினைவுபடுத்துகின்றன. நவியில் மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களில் இருக்கும் அதே 7.8bhp பவரை வெளிப்படுத்தும் 109.2சிசி இன்ஜின் இடம்பிடித்துள்ளது. இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனித்துத் தெரிய விரும்பும் இளைஞர்களைக் குறிவைத்து நவியைக் களமிறக்கி இருப்பதால், பல்வேறு CUSTOMISATION ஆப்ஷன்களையும் இதனுடன் வழங்குகிறது ஹோண்டா. டெல்லி எக்ஸ் ஷோரும் விலையான 39,500 ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் நவி, தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகியிருந்தாலும், வித்தியாசத்தைப் புகுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறது.

தவிர, உலகளவில் புகழ்பெற்ற CRF1000L ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் பைக்கையும் எக்ஸ்போவுக்குக் கொண்டு வந்த ஹோண்டா, இதனை CKD முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவிருப்பதால், விலை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும் என நம்பலாம்.

தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக, யூனிகார்ன் 150 பைக்கை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது ஹோண்டா. சிறந்த கம்யூட்டர் பைக் எனப் பெயர் பெற்ற இந்த பைக், ஹோண்டாவின் மற்ற 150 சிசி பைக்குகளின் விற்பனையைப் பாதித்ததால், தயாரிப்பு நிறுத்தப்பட்டது. EV CUB என்ற பெயரில், சூப்பர் கப் ஸ்கூட்டரின் ரெட்ரோ டிஸைனில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டை காட்சிக்கு வைத்தது. ஆனால், இது இந்தியாவுக்கு வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. இதனுடன் முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட CX-02 எனும் செமி ஃபேரிங் அட்வென்ச்சர் டூரர் பைக் கான்செப்ட்டைக் காட்டிய ஹோண்டா, ஷார்ப்பான டிஸைன் மற்றும் LED லைட்டிங்கால் பலரை ஈர்த்தது. இது அப்படியே தயாரிக்கப்பட்டால், ஹோண்டாவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட்

மற்ற தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக புதிய மோட்டார் சைக்கிளை வெளியிட்டு, கூட்டத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்த வேளையில், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், G310R பைக்கை தனது ஸ்டாலில் காட்சிப்படுத்தியிருந்தது பிஎம்டபிள்யூ. படங்களில் மட்டுமே பார்த்த பைக்கை, நேரில் கண்டது புதிய அனுபவம். நம் நாட்டின் பைக் ஆர்வலர்களுக்கு முதன்முறையாக ஒரு பிஎம்டபிள்யூ பைக்கை வாங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது. சின்ன இன்ஜின் கொண்ட பைக் என்றாலும், பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே உரித்தான விஷயங்களை இதில் காண முடிகிறது. அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ் - மோனோ ஷாக் சஸ்பென்ஷன் அமைப்புடன், முன்பக்கம் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்ஸ், ஏபிஎஸ் துணையுடன் இயங்குவது வரவேற்கத்தக்க அம்சம். உலக அளவில் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பவர்கள், இந்தியச் சந்தையை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக வந்துள்ளது G310R. பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணிக் கொள்கைக்கு ஏற்ப, இந்த பைக்கை அடிப்படையாகக் கொண்டு டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு பைக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். தவிர, தனது பெர்ஃபாமென்ஸ் பைக்குகளான S1000RR, R9T, R1200GS ஆகிய பைக்குகளையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது பிஎம்டபிள்யூ.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி

இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் நன்றாக இருந்தாலும், டிஸைன் விஷயத்தில் சற்றுப் பின்தங்கியே இருந்தன. புதிய அப்பாச்சி RTR 200 பைக் மூலம் அதை உடைத்திருக்கும் டிவிஎஸ், புதிதாக வடிவமைக்கப்பட்ட AKULA 310 எனும் ஃபுல் ஃபேரிங் பைக் கான்செப்ட்டைப் பார்த்த பலரும் திகைத்துப்போனார்கள். ரஷ்ய மொழியில் சுறா என்று பொருள்படும் இந்தப் பெயர் பைக்குக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய அலாயால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், பிஎம்டபிள்யூவின் G310R பைக்கில் இருக்கும் 313 சிசி இன்ஜின் இடம்பிடித்திருக்கிறது. AKULA 310 பைக்கின் டிஸைனை அடிப்படையாகக்கொண்ட ஒரு பைக்கை, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது டிவிஎஸ். இதனுடன் ரேஸ் தொழில்நுட்பம் கொண்ட X21 ரேஸிங் ப்ரோட்டோ டைப் மாடலையும் காட்சிக்கு வைத்தது. ‘இது, அப்பாச்சி RTR 200 பைக்கை அடிப்படையாகக் கொண்டது’ என டிவிஎஸ் கூறியபோது, அதை பலராலும் நம்ப முடியவில்லை. SPLIT DOUBLE CRADLE சேஸி அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ப்ரோட்டோ டைப் பைக்கில், முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்ட O3C, 4 வால்வுகளைக் கொண்ட 212.4 சிசி FI இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஸ்கூட்டர் செக்மென்ட்டிலும் தனது திறமையைக் காட்டியிருந்தது டிவிஎஸ். அதன் வெளிப்பாடுதான் EntorQ210 டூரிங் ஸ்கூட்டர். ஸ்கூட்டர் பல்க்காக இருப்பதுடன், பெரிய வீல்கள் மற்றும் X21 பைக்கில் இருந்த அதே 212.4சிசி இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் எடை குறைவான சேஸியில் ஒருங்கிணைத்திருந்தது டிவிஎஸ். இது எப்போது தயாராகும் என்பது தெரியவில்லை.

யமஹா மோட்டார் கம்பெனி

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் MT-03 பைக்கை யமஹா வெளியிடும் என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆனந்த அதிர்ச்சியாக MT-09 பைக்கை அறிமுகம் செய்தது யமஹா. வெளிநாடுகளில் இந்த பைக் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், இந்தியாவில் இந்த பைக் (டெல்லி எக்ஸ் ஷோரும்) 10.20 லட்ச ரூபாய் விலைக்கு CBU ஆகக் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் 83bhp பவர் மற்றும் 8.9kgm டார்க்கை வெளிப்படுத்தும் லிக்விட் கூல்டு, 3 சிலிண்டர் 847சிசி இன்ஜின் உள்ளது. அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் - மோனோ ஷாக் சஸ்பென்ஷன் அமைப்புடன், முழுக்க அலுமினியத்தால் ஆன சேஸியில் இவை பொருத்தப்பட்டுள்ளன. Cygnus Ray-ZR எனும் மற்றோரு ரே வேரியன்ட்டைக் காட்சிக்கு வைத்த யமஹா, இதனை ஆண்களுக்கான ஸ்கூட்டராக முன்மொழிந்தது. அதனை ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் சற்று உயரமான சீட் உறுதிப்படுத்துகிறது. மோட்டோ ஜீபியில் பயன்படுத்தப்படும் M1 பைக் மற்றும் R1M சூப்பர் பைக்குகளையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது யமஹா.

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்

சில காலமாகவே புதிய ரக போனவில்லி பைக்குகள் இந்தியாவிற்கு விரைவில் வரும் என தகவல்கள் வந்த நிலையில், அதிரடியாக 900 சிசி போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் 1200 சிசி போனவில்லி T120 என இரு பைக்குகளை, முறையே 6.90 லட்சம் மற்றும் 8.70 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ் ஷோரூம்) களமிறக்கியது ட்ரையம்ப். 1200 சிசி போனவில்லி Thruxton R சில மாதங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது ட்ரையம்ப். இந்த மூன்று போனவில்லி பைக்கிலும், ஏபிஎஸ், யுஎஸ்பி போர்ட், ரைடிங் மோடுகள், ஆஃப் செய்யக்கூடிய ட்ராக்ஷன் கன்ட்ரோல், முன் பக்க மற்றும் பின் பக்க டிஸ்க் பிரேக், ரெட்ரோ ஸ்டைல் ஆகியவை ஸ்டாண்டர்டாக இடம்பிடித்துள்ளன.

டிஎஸ்கே பெனெல்லி

இந்தியாவில் பெனெல்லி நிறுவனத்தின் வளர்ச்சி, அதிசயமளிக்கும் வகையில் இருக்கிறது. அதற்கு அந்த நிறுவனம் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய பைக்குகளை விற்பனை செய்ததே காரணம். அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, நான்கு புதிய பைக்குகளை காட்சிக்கு வைத்தது பெனெல்லி. தற்போது விற்பனையில் இருக்கும் TNT 300 பைக்கின் ஃபுல் ஃபேரிங் வெர்ஷன்தான் Tornado 302. இதில் உள்ள 300சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், 35bhp@12,000rpm பவரையும், 2.7kgm@9,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அடுத்தபடியாக, TRK 502 எனும் அட்வென்ச்சர் பைக்கில், 499.6சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், 47bhp@8,500rpm பவரையும், 4.6kgm@4,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற BX250 மற்றும் 12 இன்ச் வீல்களைக் கொண்ட TNT T135 பைக்கையும் காட்சிப்படுத்திய பெனெல்லி, இந்த இரண்டு பைக்குகளையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. எல்லா ரேஞ்ச்சிலும் பைக்குகளைக் கொண்டுவந்த இந்த நிறுவனம், அவற்றை பொசிஷன் செய்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

ஏப்ரிலியா

சூப்பர் பைக்குகளுக்குப் பெயர்போன இந்த நிறுவனம், இந்தியாவில் SR150 எனும் ஸ்கூட்டரைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. பைக் போன்ற செயல்திறனை இது வெளிப்படுத்தும். அட்டகாசமாக டிஸைன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில், 14 இன்ச் வீல்கள் இடம்பிடித்துள்ளன. இதில் 150சிசி இன்ஜின் பயன்படுத்தப்படுவது உறுதி என்றாலும், மற்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக்குகளைக்கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை - எதிர்பார்த்தபடி அதிகமாக இருந்தாலும், அதனை SR-150 நியாயப்படுத்தும் என்றே தோன்றுகிறது.

UM மோட்டார் சைக்கிள்ஸ்

கடந்த ஆட்டோ எக்ஸ்போவில், தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திய இந்த நிறுவனம், கமாண்டோ, க்ளாஸிக், ஸ்போர்ட் S என்ற பெயர்களில் மூன்று க்ரூஸர் பைக்குகளை அறிமுகப்படுத்தியது.அனைத்திலுமே 279 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு இருப்பதுடன், இவை தொழில்நுட்பரீதியாக ஒன்றுதான். தோற்றம் மட்டுமே இம்மூன்றையும் வித்தியாசப்படுத்துகிறது. கமாண்டோ 1.59 லட்சத்துக்கும், கிளாஸிக் மற்றும் ஸ்போர்ட் S பைக்கின் விலை 1.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன (டெல்லி எக்ஸ் ஷோரூம்). இந்த பைக்குகளின் க்ரூஸர் ஸ்டைல், விலை மற்றும் சக்திவாய்ந்த 279சிசி இன்ஜின் பலரை ஈர்த்தாலும், குறைவான விலையில் கிடைக்கும் பஜாஜ் அவென்ஜர் பைக்கை வீழ்த்த வேண்டிய கட்டாயம் இவற்றுக்கு உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் நம்பர்1 பைக் தயாரிப்பாளரான ஹீரோ, ‘GREENOVATION’ எனும் கோட்பாட்டுக்கு ஏற்ப தனது தயாரிப்புகளை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வகைப்படுத்தியிருந்தது. டூயட் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் மாடல் மற்றும் ஸ்ப்ளெண்டர் i ஸ்மார்ட் 110 ஆகியவை இதை உறுதிப்படுத்தின. இதனுடன் 200சிசி இன்ஜினைக்கொண்ட Xtreme 200S என்ற ஸ்ட்ரீட் பைக்கையும், ஆஜானுபாகுவான தோற்றத்துடன், லிக்விட் கூல்டு இன்ஜினுடன் XF3R என்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் கான்செப்ட்டையும் காட்சிப்படுத்தியது ஹீரோ. இதில் எதுவுமே உடனடியாக விற்பனைக்கு வராது என்பது நெருடல்.

மஹிந்திரா டூவீலர்ஸ்

தனது அதிக விலைகொண்ட பைக்கான மோஜோவை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கான்செப்ட் பைக்குகளைக் (Jungle Explorer, Scrambler) காட்சிப்படுத்தியது மஹிந்திரா. இதனுடன் அமெரிக்காவில் உத்தேசமாக 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் GenZe எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் பார்வைக்கு வைத்த மஹிந்திரா, மோஜோ பைக் போல இல்லாமல், கான்செப்டுகளை விரைவாகக் களமிறக்கினால் நலம்!

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா

தனது தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் ஆக்ஸஸ் 125 மற்றும் ஜிக்ஸர் ரக பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது சுஸூகி. ஜிக்ஸர் மற்றும் SF-ல் பின்பக்கம் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருப்பதுடன், SF-ல் மட்டும் Fi ஆப்ஷன் கூடுதலாக உண்டு. ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஸ்டைல், சேஸி, இன்ஜின் என ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் கண்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்.